Posts

Showing posts with the label எம்ஆர்.ராதா

வில்லன் நடிகர் நடிகவேள் எம் .ஆர் .ராதா இறப்பு 1979 செப்டம்பர் 17

Image
வில்லன் நடிகர் நடிகவேள் எம் .ஆர் .ராதா  இறப்பு 1979 செப்டம்பர் 17 எம். ஆர். ராதா  14 ஏப்ரல் 1907-  செப்டம்பர் 17, 1979 தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார். பிறப்பு[தொகு ] எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார் . குடும்பம்[தொகு] நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார்.[2] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான்.  பின்னர் தனலெட்சுமி என்பவரை ...