GAJINI MAHMUD THE VIOLENT DICTATOR
GAJINI MAHMUD THE VIOLENT DICTATOR ராட்ஸசன் கஜினி கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள் ச.நாகராஜன் தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன். அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை. வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட! அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும். கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால். அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார் The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894) ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வன...