KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4
KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4 ஹரிச்சந்திரா , பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி , கப்பலோட்டிய தமிழன் குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார் குடும்பம் ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். திரைப்பட நடிகையாதல் மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தவேளையில். லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தாகு ன் மாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து ந...