BALU MAHENDRA ஒரு அபஸ்வரம் , பாலுமகேந்திரா தலைமுறைகள்
BALU MAHENDRA ஒரு அபஸ்வரம் , பாலுமகேந்திரா தலைமுறைகள் தலைமுறைகள் மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளிதான் தலைமுறைகள். 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த, தமிழ் தெரியாத, பெற்றோரில்லாமல் வளர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் பெரிய மருத்துவராகத் திகழ்கிறார் சிவராமன். அடுத்தடுத்த முன்னேற்றம், புதிய மருத்துவமனை என்று வாழ்பவருக்கு, அவரின் தந்தைக்க...