SOOLAMANGALAM RAJALAKSHMI BORN 1940 NOVEMBER 6 - 1992 MARCH 1
SOOLAMANGALAM RAJALAKSHMI BORN 1940 NOVEMBER 6 - 1992 MARCH 1 சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6-1992 மார்ச் 1 சென்ற ஜூன் 29ம் தேதி சூலமங்கலம் ஜெயலட்சுமி மறைந்தார். அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது, சவால்விடும் புதுமையாக அமைந்தது. ஜெயலட்சுமியும் (பிறப்பு - 1937) ராஜலட்சுமியும் ( பிறப்பு 1940) சிறுமிகளாக இருந்தபோதே, 'சூலமங்கலம் சகோதரிகள்' என்ற பெயரில் பிரபலமாகி விட்டார்கள். இசை இரட்டையராக 1950களின் தொடக்கத்தில் அவர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். இன்று சென்னை அடையாற்றின் கரையில் அமர்க்களமாக இயங்கும் ‘காந்தி நகர் கிளப்’, தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியாக சூலமங்கலம் சகோதரிகளைத்தான் ஏற்பாடு செய்தது. அப்போது ஜெயலட்சுமிக்கு 15 வயது, ராஜலட்சுமிக்கு 12! எண்பதுகளின் இறுதிவரை இந்த சகோதரிகள் பாடாத கோயில் இல்லை, பங்கேற்காத திருவிழா இல்லை. மலேசியா, சிங்கப்பூர் இசைப் பயணத்திற்காக, 1974ல் அவர்கள் சிதம்பரம் கப்பலில...