DEVIKA ,A SEX APPEAL LEGEND
DEVIKA ,A SEX APPEAL LEGEND அந்தக்கால அழகு நடிகைகளுகளுள் ஒருவர் தேவிகா. அவர் அந்தக்கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருந்தாலும் MGR-உடன் நடித்த படம் ஆனந்தஜோதி மட்டும்தான்! சிவாஜியுடன் ஏறத்தாழ 12 படங்கள் (ஜோடி சேராமல் நடித்த மணமகன்தேவை, ராணி லதாங்கி உட்பட) நடித்திருந்தாலும், ஜெமினியுடனும் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்தக்காலத்தில் பத்மினி சாவித்திரிக்கு அடுத்தநிலையில் தேவிகா இருந்ததாகத் தகவலாளர் சொல்கிறார்; உண்மையில் அந்தக்காலத்தில் அபிநயசரஸ்வதி சரோஜாதேவிக்கும் தேவிகாவுக்கும்தான் நம்பர் 1 யாரென்பதில் போட்டி. சரோஜாதேவி நம்பர் 1-ஆகவும், தேவிகா நம்பர் 2-ஆகவும் இருந்தனர். இதனாலேயே இருவரும் ஒருவர் மற்றவரிடம் பேசிக்கொள்வதில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் இருவரும் ஒருவர் அடுத்தவர் நலன்குறித்து மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்களாம்; அவர்களுக்குள் அது ஒருவிதமான வெறுப்பில்லாத ஊடல்; இருவரும் சேர்ந்து ஆடிப்பெருக்கு, குலமகள்ராதை என இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இரண்டு படங்களிலும் டைட்டிலில் சரோஜாதேவியின் பெயரையடுத்தே தேவிகாவின் பெயர் இடம்பெறும...