1989 VALVETTITURAI MASSACRES 1989 AUGUST 2
1989 VALVETTITURAI MASSACRES 1989 AUGUST 2 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1989 Valvettiturai massacre) இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் கரையோர நகரான வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2 முதல் 3 வரை இடம்பெற்றன. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இப்படுகொலைகளில் குறைந்தது 64 இலங்கைத் தமிழர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு அதிகாரி உட்பட ஆறு இராணுவத்தினரைக் கொன்றதை அடுத்து, இப்படுகொலைகள் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் சிக்கியே பொதுமக்கள் இறந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ரீட்டா செபஸ்தியான் (இந்தியன் எக்சுபிரசு),[1] டேவிட் உசேகோ (பைனான்சியல் டைம்ஸ்) மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன நேரில் கண்டவர்களின் சாட்சியத்தைக் கொண்டு இவை பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், படுகொலைகளும் என உறுதிப்படுத்...