S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR BORN 1914 MARCH 15
S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR BORN 1914 MARCH 15 ‘‘வாய்யா ஹீரோ,’’ என்று டி. எம். செளந்தரராஜனை இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு வாய் மணக்க அழைப்பார். கம்பீரமான குரலும் கதாநாயக நடிகர்களுக்கு சிறப்பாகப் பாடும் வாய்ப்பும் செளந்தரராஜன் பெற்றிருந்ததால், அவரை ‘ஹீரோ’ என்று அழைப்பார் நாயுடு. ஆனால் அப்படி டி.எம்.எஸ்ஸை உருவாக்கியதில் நாயுடுவுக்கு கணிசமான பங்கு இருந்தது! டி.எம்.எஸ். புன்னகைத்தவாறே சுப்பையா நாயுடு அருகில் வந்து அமர்வார். நாயுடுவுக்கு செளந்தரராஜன் என்றாலே ஒரு அன்பு, நட்புறவு. கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் செளந்தரராஜனை முதன்முதல் பாடவைத்தவர் நாயுடுதான். அப்படி டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி’. சிந்தாமணியில் பாகவதரின் வெற்றிப் பாடலான ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ மெட்டில் அமைந்த பாடல். பின்னர் செளந்தரராஜன் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டு முன்னேறிய காலகட்டத்தில், அவரைப் பல நல்ல பாடல்கள் பாடவைத்தார் சுப்பையா நாயுடு. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான சுப்பையா நாயுடு, பட்சிராஜா ஸ்டூடி...