INTERNATIONAL DAY OF RACIAL DISCRIMINATION MARCH 21
INTERNATIONAL DAY OF RACIAL DISCRIMINATION MARCH 21 சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் மார்ச் 21 வரலாற்றில் இனப்படுகொலைகள் (Genocide in history) என்பது இனம், சாதி, சமயம், பிரதேசம் போன்ற அடிப்படையில் அடையாளம் காட்டப்படுகின்ற ஒரு குழு முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கின்ற செயல் மனித வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்துள்ளதைப் பதிவுசெய்து விமரிசித்தல் ஆகும். இனப்படுகொலை என்னும் சொல்லமைப்பு 1944இல் முதன்முறையாக இரபயேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரால் உருவாக்கப்பட்டது. இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் 1948இல் கையெழுத்தானது. எந்தவொரு மக்கள் குழுவையோ அவர்களது இனம், சாதி, சமயம், நாடு போன்ற காரணத்திற்காக அழித்துவிட மேற்கொள்ளப்படும் செயல் "இனப்படுகொலை" என்று அந்த ஐ.நா. ஆவணம் கூறுகிறது. இவ்வாறு அழிக்கும் செயல் அக்குழுவினரைக் கொலைசெய்வதிலோ, அவர்களுக்கு உடல் உளம் சார்ந்த கொடிய தீங்கு இழைப்பதிலோ, அக்குழுவை அழிக்கும் நோக்கத்தோடு அக்குழு உறுப்பினர்மீது ஒரு வாழ்க்கைச் சூழலைத் திணிப்பதிலோ, அக்குழுவினர் பலுக விடாமல் தடுப...