RAVANAN MARRIED MANDOTHARI IN THIS TEMPLE IN UTHTHARAKOSA MANGAI STILL IN MYSTERY
RAVANAN MARRIED MANDOTHARI IN THIS TEMPLE IN UTHTHARAKOSA MANGAI STILL IN MYSTERY மர்மம் காக்கும் உலகின் முதன் சிவன் கோவில்! ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது. இத்தலமே உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இத்திருத்தலத்தினை தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக...