Showing posts with label 1688. Show all posts
Showing posts with label 1688. Show all posts

Tuesday, 30 June 2020

Glorious Revolution.1688



            Glorious Revolution.1688



மாண்புமிகு புரட்சி அல்லது 1688 ஆம் ஆண்டுப் புரட்சி என்பது 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு) மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி, டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) மூன்றாம் வில்லியத்தையும் அவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.[1] இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கப்பட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் அரசியலமைப்பு முடியாட்சி ஆரம்பமானது.

1685 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பின்பற்றினர். எனினும் இரண்டாம் ஜேம்சு மன்னன் கத்தொலிக்க மதத்தைச் சேர்ந்தவராவார். மன்னனின் மதச் செயற்பாடுகளிலும் பிரான்சு நாட்டுடனான உறவை மேற்கொள்ளலிலும் புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இடையூறு விளைவித்தனர். இந்நிலை 1688 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் திகதியில் இரண்டாம் ஜேம்சுக்கு மகன் பிறந்த போது உச்சநிலையில் காணப்பட்டது.

இரண்டாம் ஜேம்சின் ஊகிக்கப்படும் வாரிசும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தவருமான இரண்டாம் மேரியையும் அவளது இளைய சகோதரனும் இரண்டாம் ஜேம்சின் வெளிப்படை வாரிசுமான ஜேம்சையும் நாடு கடத்தியமை போன்ற இரண்டாம் ஜேம்சு மன்னனின் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தினரை மேலும் வெறுப்புக்குள்ளாக்கின.
இரண்டாம் மற்றும் ஏழாம் யேம்சு (James II and VII, 14 அக்டோபர் 1633பழைய நாட்காட்டி – 16 செப்டம்பர் 1701) என்பவர் இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்து ஆகியவற்றின் இரண்டாம் யேம்சு மன்னராகவும், இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மன்னராகவும்,[2] 1685 பெப்ரவரி 6 முதல் 1688 வரை பதவியில் இருந்தவர். 1688 இல் இடம்பெற்ற புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவரே இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் கடைசி ரோமன் கத்தோலிக்க மன்னராக இருந்தார்.

முதலாம் சார்லசு மன்னரின் உயிருடனிருந்த இரண்டாவது மகனான இரண்டாம் யேம்சு,[3] இவரது சகோதரரான இரண்டாம் சார்லசு இறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.[4] பிரித்தானியாவின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த சீர்திருத்தவாதிகள் இவரை பிரெஞ்சு-சார்பானவராகவும், கத்தோலிக்க-சார்பானவராகவும், ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளராக சந்தேகக் கண்ணோடு நோக்கினர்.[5] இரண்டாம் யேம்சு தனது வாரிசாகக் கத்தோலிக்கரான இளவரசர் யேம்சு பிரான்சிசு எட்வர்டு ஸ்டுவர்ட்டை அறிவித்ததை அடுத்து இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னரின் புரட்டத்தாந்து மருமகனான மூன்றாம் வில்லியமை நெதர்லாந்தில் இருந்து படையினரைக் கொண்டு வந்து அரசனுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடுமாறு தூண்டினர்.[6] 1688 ஆம் ஆண்டில் இப்புரட்சி இடம்பெற்று வெற்றி பெற்றது. இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து வெளியேறினார்.[7] இங்கிலாந்து நாடாளுமன்றம் 1688 டிசம்பர் 11 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அறிவித்தது. இசுக்கொட்லாந்து நாடாளுமன்றம் 1689 ஏப்ரல் 11 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவித்தது. யேம்சின் மூத்த மகளும், புரொட்டத்தாந்து மதத்தவருமான இரண்டாம் மேரியையும், அவரது கணவர் ஒரேஞ்சின் வில்லியமும் மன்னர்களாக
அறிவிக்கப்பட்டனர்.[8] இரண்டாம் யேம்சு 1689 இல் அயர்லாந்து வந்திறங்கிய போது ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார். 1690 சூலையில் இடம்பெற்ற போரில் இவரது படையினர் தோல்வியடைந்தனர்.[9][10] இதனை அடுத்து யேம்சு பிரான்சு திரும்பினார். தனது வாழ்வின் இறுதிப் பகுதியை அவரது மைத்துனரான பிரான்சின் பதினான்காம் லூயியின் ஆதரவில் கழித்தார். யேம்சு 1701 செப்டம்பர் 16 அன்று மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[11]

இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்துடனான முரண்பாடுகள், மற்றும் ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டத்தாந்து எதிர்ப்பாளிகளுக்கும் சமயச் சுதந்திரம் கிடைக்க ஆதரவளித்தமை போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்பட்டார்.

.

இரண்டாம் மேரி (Mary II, 30 ஏப்ரல் 1662 – 28 டிசம்பர் 1694) என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது. வில்லியமும் மேரியும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மாண்புமிகு புரட்சியின் பின்னர் வில்லியம் அரசராகவும், மேரி அரசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் மேரி ஆங்கிலேய உரிமைகளின் சட்டவரைவை ஏற்றுக் கொண்டு, தனது உரோமன்-கத்தோலிக்கத் தந்தை இரண்டாம் யேம்சின் உரிமையையும் விட்டுக் கொடுத்தார். 1694 இல் மேரி இறந்ததை அடுத்து வில்லியம் 1702 இல் இறக்கும் வரை தனித்து ஆட்சி செய்தார். வில்லியத்துக்குப் பின்னர் மேரியின் சகோதரி ஆன் முடி சூடினார்.

வில்லியம் இங்கிலாந்தில் இருந்த போது, மேரி தனது பெருமாலான அதிகாரங்களை தனது கணவருக்கு அளித்து விட்டார். ஆனாலும், வில்லியம் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேரி தனித்தே செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சக்தி வாய்ந்த, உறுதியான, திறமையான ஆட்சியாளராக தன்னை நிரூபித்துக் கொண்டார்.
ஆரம்ப வாழ்க்கை
மேரி இலண்டனில் சென் யேம்சு அரண்மனையில் 1662 ஏப்ரல் 30 இல் யோர்க் இளவரசருக்கும் (பின்னாளில் இரண்டாம் யேம்சு மன்னருக்கும்), அவரது முதல் மனைவி ஆன் ஹைடுக்கும் மூத்தவராகப் பிறந்தார். மேரியின் மாமா இரண்டாம் சார்லசு மன்னர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து என்ற மூன்று இராச்சியங்களையும் ஆண்டவர். மேரி ஆங்கிலிக்க வழிபாட்டு முறையைப் பின்பற்றியவர். இவரது மூதாதை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் நினைவாக மேரி எனப் பெயரிடப்பட்டார்.[1] மேரியின் தாயாருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர் எனினும், மேரி, மற்றும் அவரது இளைய சகோதரி ஆன் ஆகியோரைத் தவிர்த்து ஏனையோர் சிறு வயதிலேயே இறந்து போயினர். தந்தை இரண்டாம் சார்லசுவிற்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் இல்லாததால், தந்தைக்குப் பின்னர் மேரியே அடுத்த வாரிசாக இருந்தார்.[2]


திருமணத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் மேரி
மேரியின் தந்தை ரோமன் கத்தோலிக்கராக 1668 இலும், தாய் எட்டாண்டுகள் பின்னரும் ரோமன் கத்தோலிக்கராக மதம் மாறினர். ஆனாலும் மேரியும், ஆனும் ஆங்கிலிக்கர்களாகவே தொடர்ந்தும் இருந்தனர்.[3] இவர்கள் இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து ரிச்மண்ட் அரண்மனையில் வளர்ந்து வந்தனர்.[4] 1671 இல் தாயார் இறக்கவே, தந்தை 1673 இல் மேரி என்னும் கத்தோலிக்கரைத் திருமணம் புரிந்தார். இவர் மேரியை விட 4 வயதே மூத்தவர்.[5]

15-வது அகவையில், மேரியை ஒல்லாந்தைச் சேர்ந்த வில்லியமுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. வில்லியம் இரண்டாம் சார்லசு மன்னரின் சகோதரி மேரியின் மகன் ஆவார். இவர் புரட்டஸ்தாந்து மதத்தவர்.[6] ஆரம்பத்தில், இரண்டாம் சார்லசு, இடச்சு ஆட்சியாளருடன் சம்பந்தம் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மேரியை பிரெஞ்சு இளவரசர் லூயிக்குக் கொடுக்க விரும்பியிருந்தார். லூயி கத்தோலிக்கராக இருந்ததால் அவர் பிரான்சுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழுத்தத்தினால் வில்லியமை ஏற்றுக் கொண்டார்.[7] தந்தை யேம்சு வில்லியமை மணக்க மேரியிடம் கூறிய போது, "அவள் அன்று முழுவதும், அடுத்த நாளும் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்" என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[8]

திருமணம்

Portrait by Peter Lely, 1677
வில்லியமும் மேரியும் 1677 நவம்பர் 4 இல் திருமனம் புரிந்து கொண்டனர்.[9] திருமணத்தின் இருவரும் டென் ஹாக் சென்றனர்.[10] மேரி பல முறை கருத்தரித்தும் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது.[11] பிள்ளைகள் இல்லாதது மேரி வாழ்வில் பெரும் சோகத்தைத் தந்தது.[12]

மன்னர் இரண்டாம் சார்ல்சு 1685 பெப்ரவரியில் வாரிசு எவரும் இல்லாமல் இறந்தார். இதனை அடுத்து யோர்க் இளவரசரும் மேரியின் தந்தையுமான இரண்டாம் யேம்சு மன்னரானார்.[13]

மாண்புமிகு புரட்சி
முதன்மைக் கட்டுரை: மாண்புமிகு புரட்சி

மேரி, 1685
இங்கிலாந்தின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரட்டஸ்தாந்து மததைச் சேர்ந்தவர்கள். மன்னர் யேம்சு கத்தோலிக்கர். புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகள் மேரியின் கணவர் வில்லியமுடன் தொடர்பில் இருந்தனர்.[14] மன்னர் யேம்சு கத்தோலிக்கர்களுக்கும் அதிருப்திவாதிகளுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஆங்கில்க்க மதத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் அரசியல்வாதிகளிடையே யேம்சுக்கு எதிரான கருத்து வலுப்பட்டது.[15] யேம்சின் மனைவி மேரிக்கு (மொதீனா) 1688 சூனில் மகன் யேம்சு பிரான்சிசு எட்வர்ட்) பிறந்ததை அடுத்து இச்சர்ச்சை மேலும் வலுவடைந்தது.

யேம்சை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மேரியின் கணவன் வில்லியமை நாடு திரும்புமாறு இரகசியமாக நெதர்லாந்துக்கு செய்தி அனுப்பப்பட்டது.[16] மேரியின் சம்மதத்துடன் வில்லியம் இடச்சுப் படைகளுடன் 1688 நவம்பர் 5 இல் இங்கிலாந்து வந்தார்.[17] ஆங்கிலேய இராணுவமும் கடற்படையும் வில்லியமுக்கு சார்பாக சண்டையிட்டன.[18] தோல்வியடைந்த யேம்சை நாட்டை விட்டு வெளியேற வில்லியம் அனுமதித்தார். 1688 டிசம்பர் 23 இல் 11 இல் யேம்சு பிரான்சு வந்ஹு சேர்ந்தார். இறக்கும் வரை பிரான்சிலேயே தங்கியிருந்தார்.[19]

1689 பெப்ரவரி 13 இல், நாடாளுமன்றம் யேம்சை பதவியில் இருந்து அகற்றியது.[20][21] யேம்சின் மகனுக்குப் பதிலாக, யேம்சின் மகள் மேரியையும் வில்லியமையும் இணைந்த அரசர்களாக அறிவித்தது.[20]

மறைவு

ஐந்து கினி நாணயத்தில் வில்லியமும் மேரியும், 1692
1694 இறுதியில், மேரி பெரியம்மை நோயினால் பீடிக்கப்பட்டார்.[22] மேரி 1694 டிசம்பர் 28 காலையில் கென்சிங்டன் அரண்மனையில் காலமானார்.[23] ஆட்சிப் பொறுப்பில் பெரிதும் மேரியையே தங்கியிருந்த வில்லியமுக்கு மேரியின் இறப்பு பேரிழப்பாக இருந்தது.[22] பிரித்தானியாவில் மேரிக்கு பெருந்தொகையானோர் அஞ்சலி செலுத்தினர்.[24] அவரது இறுதி நிகழ்வுகள் மார்ச் 5 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.[25]

குறிப்புகள்
 இரண்டாம் மேரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1689 பெப்ரவரி 13 இலும், இசுக்கொட்டிய நாடாளுமன்றத்தால் 1689 ஏப்ரல் 11 இலும் அரசியாக அறிவிக்கப்பட்டார்

Saturday, 21 September 2019

JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH , 1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21







JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH ,
 1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21



மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (ஜெய்பூர் இராச்சியம்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

பதவியேற்கையில் நிலவிய சூழல்

தனது முன்னோர் ஆண்ட ஆம்பர் அரியணையில் சவாய் ஜெய் சிங் அமர்ந்தபொழுது அவ்வரசாங்கம் கீழ்நிலையில் இருந்தது, முந்தைய 32 ஆண்டுகளின் கீழ்முக ஆட்சியின் பயனாய் 1000 குதிரைவீரர்களைப் பராமரிக்கத் தேவையான செல்வம் கூட ஏறக்குறையவே இருந்தது, மேலும் அப்பொழுது முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முகலாயர்களின் அதிகார மையங்களான தில்லிக்கும் ஆக்ராவிற்கும் அருகில் இருந்த காரணத்தால், ஜெய்ப்பூர் மன்னர்கள் முகலாயர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்களாகவே இருந்தனர். தில்லியின் சுல்தான்களோடு பல ஆண்டுகளாய் கூட்டாளிகளாய் இருந்தும் கூட, அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், முதலாம் ராம் சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து கச்வாகா அரசர்களும் தங்களுக்கு உரிய பட்டங்களும் ஊதியங்களும் தரப்படாமலே இருத்தப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்களான முதலாம் ஜெய் சிங்கும் குன்வர் கிஷன் சிங்கும் தக்காணப் படையெடுப்புகளின் பொழுது மருமமான முறையில் இறந்து போயிருந்தனர்.

பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது மன்சப்பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ஜெய்சு நிஸ்டு (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.

சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்

பலநூற்றாண்டுகள் வழக்கற்று இருந்த அசுவமேதம் (1716) மற்றும் வாஜபேயம் (1734) போன்ற வேத யாகங்களை மீண்டும் நடத்திய முதல் இந்து அரசன் என்ற பெருமை சவாய் ஜெய் சிங்கிற்கு உரியதாகும், இரண்டு வேள்விகளின் பொழுதும் பெருந்தொகைகள் யாசகமாக வழங்கப்பட்டன. வைணவத்தின் நிம்பருக்க சம்பிரதாயத்தில் தீட்சை பெற்ற இவன் சமற்கிருத படிப்பையும் பெருமளவில் ஊக்குவித்தான், சதி சடங்கை ஒழித்தல் மற்றும் ராஜபுத்திர திருமணச் சடங்குகளில் பெருஞ்செலவுக்குக் காரணமன சடங்குகளை நிறுத்துதல் போன்ற இந்து சமுதாய சீர்திருத்தங்களையும் செய்துள்ளான். அவுரங்கசீப்பினால் ஹிந்து மக்கள்மீது விதிக்கப்பட்டிருந்த, மக்களால் வெறுக்கப்பட்ட, ஜசியா வரி இவனது வற்புறுத்தலின் பயனாகவே 1720-இல் பேரரசன் முகம்மது ஷாவினால் நீக்கப்பட்டது. கயாவில் ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட யாத்திரை வரியும் ஜெய் சிங்கின் முயற்சியாலேயே 1728-இல் நீக்கப்பட்டது.


தில்லியில் உள்ள சவாய் ஜெய் சிங் கட்டிய ஜந்தர் மந்தர் வானாய்வகம்
தில்லி, மதுரா (ஆக்ரா மாகாணத்தில் உள்ளது), பனாரஸ் (காசி), உஜ்ஜைனி (மால்வா மாகாணத்தின் தலைநகர்) மற்றும் தனது சொந்த தலைநகரான ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஜெய் சிங் ஐந்து விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கட்டினான். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆய்வுக்கூடம் மட்டும் இன்றளவும் உள்ளது. இந்திய வானியல் அறிவை முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடங்கள் கிரகணங்கள் மற்றும் அவை போன்ற பிற விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் இவ்வாய்வுக்கூடங்களுக்குப் பார்வையிட வந்த ஐரோப்பிய வானியல் அறிஞர்களின் திறத்தைவிடவும் சிறந்தனவாய் இருந்தன இவ்வாய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் முறைகளும். ”ஜந்தர் மந்தர்” என்று அழைக்கப்பட்ட இவ்வாய்வகங்களில் ராம் யந்தரா, ஜெய் பிரகாஷ், சாம்ராட் யந்தரா, திகம்சா யந்தரா மற்றும் நரிவலய யந்தரா போன்ற பொறிகள் அமைந்திருந்தன.

ஜெய் சிங்கின் மிகப் பெரிய சாதனை ஜெய்ப்பூர் நகரை கட்டியதே ஆகும் (இந்நகரம் உண்மையில் ஜெய்நகரம் என்று அழைக்கப்பட்டது, சமற்கிருதத்தில் இதன் பொருள் ‘வெற்றியின் நகரம்’ என்பதாகும், பின்னர் 20ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்பட்டது), திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்நகரமே பின்னர் ராஜஸ்தானின் தலைநகரானது. இப்புதிய தலைநகரின் கட்டுமானம் 1725 வாக்கிலேயே தொடங்கிவிட்டிருப்பினும், 1727-இல்தான் முறைப்படியான அடிக்கால் நாட்டு விழா நடத்தப்பட்டது. 1733-இல் ஜெய்ப்பூர் கச்வாகர்களின் தலைநகராக ஆம்பூரின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. அகழ்வாய்வுகளில் காணப்படும் கி.மு. 3000 ஆண்டு காலத்திய ஹிந்து நகர அமைப்பில் கட்டப்பட்ட இந்நகரம், பண்டைய வடமொழிக் கட்டுமான நூல்களில் (சில்ப சூத்திரங்கள்) வல்லுனரான வித்யாதர் என்ற பிராமணரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். பெரிய உறுதியான மதில்களும், தேவையான படைக்கலன்களோடு கூடிய 17,000 படைவீரர்களும் கொண்டு திகழ்ந்த இந்த புதிய நகரத்தின் பாதுகாப்பில் நலமாய் இருக்க விரும்பி இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு வியாபாரிகள் இங்கு குடியமர்ந்தனர்.

இவ்வரசன் ஜான் நேப்பியர் போன்றவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளான். இது போன்ற பல்வகை சாதனைகள் காரணமாய் சவாய் இரண்டாம் ஜெய் சிங் இன்றளவும் 18-ம் நூற்றாண்டின் மிக்க அறிவிற்சிறந்த இந்திய அரசனாக நினைவுகொள்ளப்படுகிறான்.

Tuesday, 19 June 2018

NADER SHAH ,MURDER KING , BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19



NADER SHAH ,MURDER KING ,
BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19


நாதிர் ஷா (Nader Shah) ஈரானை ஆட்சி செய்த ஓர் அரசர். இவர் பிறந்தது 1688 என்றும் [1] ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1688

இவர் ஜூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை பெர்ஸியாவின் நெப்போலியன் அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..[5] நாதிர்ஷா வடக்கு பெர்ஸியாவைச் சேர்ந்த துர்கிக் அஃப்ஷர் (Turkic Afshar) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.[6]

இந்தியா மீதான படையெடுப்பு[தொகு]

1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் முகமது ஷா வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன.

முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். [7]
அவுரங்கசீப்பிற்குப் பின்னால் 1738-ஆம் வருடம் இந்தியாவின் மீது படையெடுத்த பாரசீகனான நாதிர் ஷா, டெல்லியில் இரண்டு இலட்சம் இந்தியர்களைக் கொன்றதுடன், ஏராளமான செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். அதில் ஆயிரக்கணக்கான இந்திய இளம் பெண்களும் அடக்கம்.

நாதிர் ஷாவின் தாக்குதலைக் குறித்துக் கூறும் ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன்-டானெயல் (Alain Danielou), "...பாரசீகப் படைகள் டெல்லியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக கொலை வெறித் தாண்டவமாடினர். அங்கிருந்த அத்தனை கட்டடங்களையும் இடித்துத் தள்ளியதுடன், கிராமப்புறங்களையும், வயல்வெளிகளையும் அழித்தனர்.

இந்தப் போரில் தப்பிப் பிழைப்பவர் எவருக்கும் உண்ண எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக. அற்புதமான கலைப் பொருட்களையும், குதிரைகள் இவற்றுடன் கோகினூர் வைரத்தையும், மயிலாசனத்தையும், இன்றைய கணக்கில் ஏறக்குறைய 150 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தையும் நாதிர் ஷா தன்னுடன் கொண்டு சென்றதாக" கூறுகிறார்.

நாதிர் ஷா கொண்டு சென்ற கணக்கிலடங்காத மிகப் பெரும் கொள்ளையின் காரணமாக "அவன் ஆட்சி புரிந்த பாரசீகத்தில் (இரானில்) மூன்று வருடங்களுக்கு பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பதை நாதிர் ஷா நிறுத்தி வைத்தான்" என்று மேலும் சொல்கிறார் அலெய்ன்-டானெயல். அப்படியானால் எத்தனை பெரும் செல்வம் நம் கையை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்!

இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்து, பவுத்த, ஜைன, சீக்கிய மதங்களுக்கும், அவர்களின் வழிப்பாட்டி டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பேரழிவிற்கிணையாக உலகின் வேறெங்கிலும் இன்றுவரை நடக்கவில்லை. கோவில்களும், சிலகளும் இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், கோவிலின் இடிபாடுகள் புதிய மசூதிகள் கட்டுவதற்கு உபயோகிக்கப் பட்டன.

இன்றைய டெல்லியின் க்வாட்-உல்-இஸ்லாம் (Kwat-ul-Islam) மசூதியானது அந்தப் பகுதியில் இவ்வாறு இடிக்கப்பட்ட பதினேழு இந்துக் கோவில்களின் இடிபாடுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்து ஆலயப் பூசாரிகளும், பிட்சுக்களும், பொறுப்பாளர்களும் வென்ற இஸ்லாமியர்களால் உடனடியாகக் கொல்லப்ப டுவார்கள். அமிர்-குஸ்ரு, சுல்தான் ஃப்ரோஸ் துக்ளக் போன்றவர்கள் இதுபோல இந்து பூசாரிகள்/ஆலய அர்ச்சகர்கள் கொல்லப்படுவதைக் குறித்து ஒரு விதமான குரூர மகிழ்ச்சியுடன் குறிப்புகள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு எழுதியிருப்பவை அத்தனையும் இஸ்லாமிய வரலாற்றாசிர்களால், இஸ்லாமிய ஆக்கிரமிப்பா ளர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இந்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துன்பத்தைச் சுமத்து வதினைக் குறித்து அத்தனை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் மட்டுமே அக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்பதனையும் நாம் நினைவில் கொல்ல வேண்டும்.

இஸ்லாம் காஃபிர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. நம்பிக்கையாளர்களும் அப்படியே. இந்தக் கேவல மனோபாவம் குறித்து எழுதப்புகும் வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ் வாட்சன்,

"...சிலை வழிபாடு செய்யும் இந்துக் காஃபிர்களுக்கு எதிராக அவர்களின் மனமெங்கும் வெறியும், விஷமும் நிறைந்தவர்களாக இஸ்லாமியர்கள் இந்தியாவின் பழமையான பெரும் ஆலயங்களை இடித்துத் தகர்த்தனர். இந்த வரலாற்று உண்மை அவர்களுடன் சென்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் பயணிகளால் துல்லியமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில ஆலயங்கள் முழுமையாக உடக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டன. ஆனால் ஏராளமான பழம் இந்து ஆலயங்கள் - ஆயிரக்கணக்கானவை - துண்டு, துண்டாக உடைக்கப்பட்டன.

இந்தியாவின் பழமையான நகரங்களான வாரணாசி, மதுரா, உஜ்ஜைன், மஹெஸ்வர், ஜ்வாலமுகி மற்றும் துவாரகாவில் அமைந்திருந்த மிகப் பழமையான கோவில்களில் ஒன்று கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து தப்பவில்லை."

மூன்று இனங்களைப் பற்றிப் பார்த்தோம். மற்றொரு இனமான உஸ்பெக் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆப்கானிய மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ளவர்கள். உஸ்பெக்குகள் இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். துருக்கியர்களைப் போல காட்சியளிக்கிறார்கள். பிற ஆப்கானிய இனத்தவர்களைவிட அதிக வெளுப்பாக காட்சியளிக்கிறார்கள். இவர்களும் மங்கோலிய மூதாதையர்களைக் கொண்டவர்கள்.

ஆனால் இப்போதைக்கு எந்த ஆப்கானியரின் உடல் பாகங் களைக் கொண்டும் அவரது இனத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. காரணம் காலப் போக்கில் நடைபெற்ற கலப்புத் திருமணங்கள். ஆனால் தலைப்பாகைகள் இன்னமும் இந்த இனங்களை தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பல வட்டாரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளூர் தலைவர். ஆங்கிலத்தில் Warlords. தாதாக்கள் என்று குறிப்பிட்டாலும் தப்பில்லை. இவர்களை ஆப்கானிஸ்தானின் கலவர ஊற்றுகள் எனலாம்.

1747 இதுதான் நவீன ஆப்கானிஸ்தான் உருவான ஆண்டு. இதற்கு மன்னராக முதன் முதலில் பொறுப்பேற்றவர் அகமது ஷா. அப்படி என்ன இவருக்கு சிறப்பு? காரணம் உண்டு.

இந்தியாவின் செல்வங்களை (மயிலாசனம், கோஹினூர் போன்றவை) கொள்ளயடித்துச் சென்றவர் பாரசீக (இன்றைய இரான்) மன்னர் நாதிர் ஷா. அவர் கொலை செய்யப்பட்ட வுடன் அவரது ராணுவ அதிகாரி யாக இருந்த அகமது ஷா பாரசீகத்திலிருந்து வெளியேறி னார், (ஆப்கானிஸ் தானிலுள்ள) காந்தஹாரை அடைந்தார். கூடவே கோஹினூர் உட்பட மதிப்புமிக்க செல்வங்களை அள்ளிச் சென்றார்.

யாரை அடுத்த காந்தஹார் பகுதியின் பஷ்டூன் இனத்தலை வராகத் தேர்ந்தெடுப்பது என்று அந்தக் குழு யோசித்தது. அனைவரும் தேர்ந்தெடுத்தது அகமது ஷாவைத்தான். திறமையான போர்வீரர். ஆயிரக் கணக்கான குதிரைப்படை வீரர்கள் இவரிடம். கொள்ளையடித்த சொத்துகள் வேறு. பிறகென்ன? தலைவரானார்.

அகமது கான் என்று இருந்த தன் பெயரை அகமது ஷா என்று மாற்றிக் கொண்டார் (ஆப்கானிஸ் தானில் மன்னர்களை ஷா என்று அழைப்பது வழக்கம்). ‘’இனி பாரசீகத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆப்கானிஸ்தான் தனி நாடு’’ என்று முழக்கம் செய்தார். பின்னர் கஜினி பகுதியை வசப்படுத்தினார். காபூலை தன் வசம் கொண்டு வந்தார். சிந்து மாகாணமும், சிந்துநதிக்கு மேற்கே இருந்த வட இந்திய பரப்புகளும் தானாகவே அவர் கைக்கு வந்து சேர்ந்தன. (தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அளிக்கப்பட்ட தானம்).

நாதிர்ஷாவின் பேரன் ஷாருக்கான். ஹெராத் நகரை இவன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடனும் போர் தொடுத்தார் அகமது ஷா. ஒருவருட முற்றுகை. பல உயிர்கள் பிரிந்தன. இறுதி வெற்றி அகமது ஷாவுக்குதான். துருக்மென், தஜிக், ஹசாரா, உஸ்பெக் ஆகிய பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களும் அகமது ஷாவின் ஆளுகைக்கு உட்பட்டது. (இப்போது புரிகிறதா இந்த இனங்களின் தொடர் விரோதத்தின் வேர் எது என்று?).

அகமது ஷாவின் பார்வை அடுத்ததாக இந்தியாவின் பக்கம் திரும்பியது. பலமுறை படையெடுத்தார். காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் டில்லியை முற்றுகையிட்டார். ஏற்கனவே அங்கு ஒளரங்கசீப் காலம் முடி வடைந்து மொகலாயப் பேரரசு தேய்பிறையில் இருந்தது. ‘‘என் தலைமையை அங்கீகரியுங்கள் உங்கள் ஆட்சியைத் தொடருங்கள்’’ என்று அவர் கூறியதை மொகலாயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காலப்போக்கில் மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை பூனாவில் நிலை நிறுத்திக் கொண்டு வடக்கிலும் பரப்பத் தொடங்கினார்கள். அகமது ஷா 1757ல் மராத்தியர்களுடன் போரிட்டார். ஆனால் மராத்திய சேனை வென்றது. ‘’மராத்தியர்கள் மீதான இஸ்லாமியர்களின் புனிதப் போர் தொடங்கியது’’ என்று அலறினார் அகமது ஷா. மீண்டும் 1761ல் பானிபட் ஒரு கடும் போரைச் சந்தித்தது. இம்முறை பஷ்டூன்கள் மட்டுமல் லாமல் பிற இஸ்லாமியப் பிரிவினரும் அகமது ஷாவிற்குப் பின்னால் அணிவகுத்தார்கள். மராத்திய ராணுவம் தோல்வி கண்டது.

ஆனால் சீக்கியர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். பஞ்சாபின் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். அகமது ஷா உக்கிரம் அடைந்தார். சீக்கியர்களின் பகுதியாக இருந்த லாகூரை சின்னா பின்னமாக்கினார். அமிர்தசரஸில் தங்கியிருந்த சீக்கியர்களைக் கொன்று குவித் தார். அவர்கள் புனிதத்தலங் களில் பசுவின் ரத்தத்தை ஊற்றச் செய்தார். கொடுங்கோன்மையின் சிகரமாகவே மாறினார். மீண்டும் காந்தஹாருக்குத் திரும்பினார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் பஞ்சாபை மீண்டும் சீக்கியர்கள் மீட்டுவிட்டனர்.

காந்தஹார்தான் தன் சாம்ராஜ் யத்தின் தலைநகர் என்பதில் மிக நிச்சயமாக இருந்தார் அகமது ஷா. ஆனால் அவர் இறந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காபூலை அந்த ராஜ்யத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர் அவரது வாரிசுகள். அகமது ஷா இறந்ததும் அவரது இரண்டாவது மகன் தைமூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் இறந்தவுடன் வாரிசு உரிமை போர் உச்சத்தை அடைந்தது. தைமூரின் அத்தனை மகன்களும் அரச பதவிக்கு ஆசைப்பட்டார்கள். இவர்களில் தன் பலம் காரணமாக ஐந்தாவது மகன் ஜமான் ஷா ஆப்கானிஸ்தானின் மன்னரானார். தனக்கு உதவியாக இருந்த பயின்தா கான் என்பவர் தனக்குத் துரோகம் செய்வதாக அறிந்து கொண்டவுடன் அவரைக் கொன்றார் ஜமான்.

பயின்தாகனின் மகன் இரானுக்குத் தப்பியோடி அங்கு வசித்த மகமூது ஷாவுக்கு ஆதரவு தெரிவித்தான். இந்த மகமூது, ஜமானின் அண்ணன்தான். அவன் மீண்டும் படையெடுத்து தன் தம்பியைத் தோற்கடித்து மன்னன் ஆனான். சீக்கிரமே அவனது பிற சகோதரர்கள் அவனைப் பதவியிலிருந்து கீழிறக்கினர். ஷுஜா ஷா என்ற தம்பி ஆட்சியைக் கைப்பற்றினான்.

1809 ஜூன் 6 அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஷுஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘‘எந்த வெளிநாட்டுப் படை இந்த இரு நாடுகளில் ஒன்றில் நுழைந்தாலும் மற்றொரு நாடு அதை வெளியேற்ற வேண்டும்’’ என்றது அந்த ஒப்பந்தம். இதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் செய்து கொண்ட முதல் ஒப்பந்தம். காட்சிகள் மாறத்தொடங்கின.





Tuesday, 20 June 2017

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்


உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்





உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்

மனிதகுல வரலாற்றில் மக்களது உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து தமது எதிர்ப்புக்களைத் திடீரென வெளிக்காட்டுகின்றபோது அது புரட்சியாக உருவெடுக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் புரட்சி என்பது அரசியல் துறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் ஏற்படுத்தப்படும் பாரிய மாற்றமாகும்.

நாம் வரலாற்றுப் பாதையினைத் திருப்பிப் பார்க்கின்றபோது இப்புரட்சிகள் காலத்திற்குக்காலம் நடைபெற்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் இடம்பிடித்த மூன்று முக்கிய புரட்சிகளாக மேல்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.

ஆங்கிலப்புரட்சி – 1688
அமெரிக்கப்புரட்சி – 1776
பிரான்சியப்புரட்சி – 1789

ஆங்கிலப்புரட்சி – 1688
இங்கிலாந்து வரலாற்றிலே 1688ஆம் ஆண்;டில் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஆங்கிலப்புரட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அமைதியான முறையில் தொடங்கி அமைதியாகவே முடிவுற்றதோடு போர் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. இதனால் இப்புரட்சியை 'மாண்புறுப்புரட்சி' என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் வம்ச அரசர்களுக்குமிடையில் இறைமை பற்றிய போராட்டத்தின் முடிவே இப்புரட்சியாகும். மன்னனுடைய அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்துவதே புரட்சியின்  நோக்காக அமைந்தது. இதன் முதற் கட்டமாக 'மக்னா காட்டா' (மகா பட்டயம்) ஒப்பந்தம் 1215 இல் ஏற்படுத்தப்பட்டது.
புரட்சிக்கான காரணங்களை ஆராய்கின்றபோது 1603ஆம் ஆண்டிலே முதலாம் ஜேம்ஸ் மன்னன் சிம்மாசனம் ஏறியகாலம் தொடக்கம் பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் அரச வம்சத்திற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டவண்ணமாயிருந்து. இவ்வம்சத்தின் முக்கிய மன்னனாக இரண்டாம் ஜேம்ஸ் விளங்கினான். இவனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே புரட்சிக்கான உடனடிக்காரணமாக அமைந்தது.
தீவிர கத்தோலிக்கனான இரண்டாம் ஜேம்ஸ் மன்னன் பதவியேற்றதுடன்(1685-1688) மன்னனுக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இம்மோதலுக்கு சமயக் கருத்து வேறுபாடே காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோர் சீர்திருத்த சமயத்தவராயிருக்க மன்னனோ றோமன் கத்தோலிக்கனாயிருந்தான். மன்னன் அரசுரிமையை றோமன் கத்தோலிக்க சமயத்தவனுக்கு வழங்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஆயினும் பாராளுமன்றம் மன்னனின் மகளைத் திருமணம் செய்திருந்த சீர்திருத்த சமயத்தவரான நெதர்லாந்தைச் சேர்ந்த இளவரசன் வில்லியத்திற்கு முடிசூட விரும்பியது. இளவரச தம்பதியைப் பதவியேற்க பாராளுமன்றம் அழைப்பு விடுத்தது. அவ்விருவரும் அழைப்பை ஏற்று இங்கிலாந்திற்கு வந்திறங்கியபோது  ஜேம்ஸ் மன்னன் பிரான்சிற்குத் தப்பியோடினான். வெற்றி பெற்ற பாராளுமன்றம் மூன்றாம் வில்லியத்தையும் இரண்டாம் மேரியையும் பிரித்தானிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. இவர்கள் பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்ட உரிமைகள் மனுவை ஏற்றுக் கொண்டே பதவியில் அமர்ந்தமையால் பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி இங்கிலாந்தில் உருவானது.
எனவே இங்கிலாந்தில் நீண்ட காலமாக மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்கும் தொடர்ந்து வந்த ஆதிக்கப்போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சி அரசியல், பொருளாதார சமூக ரீதியில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடித்தளத்தினையும் பிரித்தானியாவின் வளர்ச்சியை ஏற்படுத்திய புரட்சி என்றவகையில் வரலாற்றில் இருப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கப்புரட்சி – 1776
பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட நாடுகாண் பயணங்களின் விளைவாக அமெரிக்காக்கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர்  ஸ்பானியர், போர்த்துக்கேயர், பிரான்சியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் அங்கு குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் வட அமெரிக்காவில் நிலையான குடியேற்றங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றவர்கள் ஆங்கிலேயராவர்.
1776இல் சுதந்திரப்போர் ஆரம்பமாகும் போது ஆங்கிலக் குடியேற்றங்கள் பதின்மூன்று வட அமெரிக்காவில் காணப்பட்டன. அவையாவன வேர்ஜினியா, ஜோர்ஜியா, பென்சில்வேனியா, நியுயோர்க், நியுஜேர்சி, டெலவெயார், மஸீசெட்ஸ், கெனடிகட், தென்கரோலினா, வடகரோலினா, நியுஹேம்ஷயர், ரோட்ஜலண்ட், மேரிலண்ட் போன்றனவாகும்.

இந்த அமெரிக்கக் குடியேற்றங்களின் பிரஜைகள் தாய்நாடான பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மேற்கொண்ட புரட்சியே 'அமெரிக்க சுதந்திரப்போர்' எனப்படுகின்றது.
வட அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களாலேயே நிருவகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இவர்கள் தமது கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முடிவுப்பொருட்களை விற்பதற்குமான ஒரு சந்தையாகவே அமெரிக்காவைப் பயன்படுத்தினர். அத்தோடு புதிய வரிகளையும் அவர்கள் மீது விதித்தனர்(1765). இதனால் விரக்தியுற்ற மக்கள் இவ்வரிகளுக்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினையும் தெரிவித்து மேல்வருமாறு கோஷங்களை எழுப்பினர். 'எமது பிரதிநிதிகள் இடம்பெறாத பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எம்மீது எவ்வாறு வரிவிதிக்கமுடியும்' என அமெரிக்கக் குடியேற்றவாசிகள் கேள்வி எழுப்பினர். இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படாமையால் 'பிரதிநிதித்துவமின்றேல் வரியுமில்லை' என்ற கோஷத்துடன் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். 1773களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. 1776களில் பிலடெல்பியா நகரில் ஒன்று கூடிய போராளிகள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜோர்ஜ் வொஷிங்டனைத் தலைவராக நியமித்தனர்.

 1776ஆம் ஆண்டு யூலை மாதம் நான்காம் திகதி பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தை முன்வைத்தனர். அதனைக் கடுமையாக எதிர்த்த பிரித்தானியரோடு ஜோர்ஜ் வொஷிங்டன் தலைமையில் ஒன்றிணைந்த அமெரிக்கக் குடியேற்றவாசிகள் நீண்டகால யுத்தத்தின் மூலமாக 1783ஆம் ஆண்டில் பிரான்ஸின் வேர்சையில் மாளிகையில் பிரித்தானிய-அமெரிக்க நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.
இப்புதிய நாடு 1787 ஆம் ஆண்டு தனக்கென  அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து கொண்டது. இதுவே உலகில் எழுதப்பட்ட முதலாவது அரசியல் யாப்பாகும். அத்தோடு அடிப்படை மனித உரிமைகள் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டமையால் அது உலகளாவிய மதிப்பைப் பெற்றுக் கொண்டது.

பிரான்சியப்புரட்சி – 1789

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்சில் இடம்பெற்ற  மாபெரும் மாற்றமே பிரான்சியப் புரட்சியாகும். இது அடிப்படை மனித உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் முன்னேற்றப் பயணத்தில்  இன்னுமொரு முக்கிய கட்டமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி எதேச்சாதிகாரமான முடியாட்சி, மடாலயங்களின் ஆதிக்கம், பிரபுக்களின் சமூக, பொருளாதார ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கெதிராக பிரஞ்சு நாட்டின் மூன்றாம் குடித்தினையோர் என்று சொல்லப்படும் சாதாரணகுடிகள் போர்க்கொடி உயர்த்தி,
'அனைவருக்கும் சுதந்திரம்
அவர்களிடையே சமத்துவம்
 ஏற்படுவதோ சகோதரத்துவம்'

என்ற ஜனநாயக முழக்கங்களை விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சி முறைக்கும் பிரபுத்துவமுறைக்கும் சாவுமணியடித்து ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவத்தினை உலகிற்கு உணர்த்திய புரட்சி இதுவாகும்.
சமகால பிரான்சிய சமூகத்தை பிரதானமாக மூன்று பிரிவுகளாகப் பிரித்து நோக்கமுடியும். அவர்களில் மன்னன் முதன்மையானவன், இரண்டாம் நிலையில் மதகுருமார் மற்றும் பிரபுக்கள் அடங்கியிருந்தனர். இவ்விரு பிரிவினரும்  உயர்குடியினர் என்றும் உரிமையுள்ள வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். ஏனையோர் விவசாயிகள், வர்த்தக வகுப்பினர் , புத்திஜீவிகள் அடங்கிய சாதாரண மக்களாகக் காணப்பட்டனர். இவர்கள் மூன்றாம் குடித்திணையோர் என்றும் உரிமையற்ற வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வர்க்க வேறுபாட்டில் உரிமையற்ற வர்க்கத்தினரே மன்னனின் கடுமையான வரிச்சுமைக்கும் கொடுங்கோண்மை ஆட்சியின்கீழும் நசுக்கப்பட்டனர்.  இதனால் அதிருப்தியுற்ற மக்கள் புரட்சிக்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்திருந்தனர். அத்தோடு மதகுருமார் மற்றும் பிரபுக்களிடையே ஏற்பட்டுக் கொண்ட முரண்பாடுகள் மற்றும் படித்த மத்தியதர வர்கத்தின் எழுச்சி என அனைத்துத் தரப்பினரும் அதிருப்திப்பட்டுக் கொண்டதன் விளைவே புரட்சியாக வெடித்தது.
பிரான்சிய அறிஞர்களின் கருத்துக்கள் புரட்சியை மூட்டும் தீப்பொறிகளாக விளங்கின. 'நூறு எலிகளால் ஆளப்படுவதைவிட ஒரு சிங்கத்தால் ஆளப்படுவது மேல்' என்றுகூறி மக்களைப் புரட்சிக்கான வழிமுறைகளில் ஈடுபடுத்தினர். குறிப்பாக ரூஸோ, மொண்டஸ்கியூ, வோல்டயர் போன்ற அறிஞர்களது கருத்துக்கள் முக்கியமானவை.

எனவே 1789ஃ7ஃ14 ஆம் திகதி ஒன்றிணைந்த புரட்சியாளர்கள் கொடுங்கோண்மையின் சின்னமாக விளங்கிய பஸ்தீல் சிறைச்சாலையை உடைத்தனர். தம்மை எதிர்த்தோரை கிளற்றின் என்ற கருவிக்கு இரையாக்கினர். முடிவில்; அரசியல் யாப்பொன்றை வரைந்து மனித உரிமைகள் பிரகடனத்தையும் தயாரித்து வெளியிட்டனர்.

பிரான்சியப் புரட்சியின் விளைவுகளாக ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள் கட்டியெழுப்பப்பட்டன. மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப்பட்டது. சமூக ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு தேசிய உணர்ச்சி தூண்டப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் நிலைநாட்டப்பட்டன. ஜேர்மனிய ஐக்கியம், இத்தாலிய ஐக்கியம், தென்னமெரிக்க நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் போன்ற பல வரலாற்று நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

  எனவே நாகரிக வளர்ச்சியின் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்க்கை ஊட்டம் நடைபெற்று வருகின்றமையை வரலாற்றைக் கற்கின்றபோது புரிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் இடம்பிடித்த மூன்று முக்கிய புரட்சிகளும் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பினை நல்கி உலக வரலாற்றில் தனித்துவம் பெறுகின்றன.