M.D.PARTHASARATHY ,MUSIC DIRECTOR BORN 1910 SEPTEMBER 21
M.D.PARTHASARATHY ,MUSIC DIRECTOR BORN 1910 SEPTEMBER 21 எம். டி. பார்த்தசாரதி (M.D. Parthasarathy) (பிறப்பு: செப்டம்பர் 21, 1910 – ) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர். தஞ்சாவூர் மாவட்டம், வேதாந்தபுரம் இவர் பிறந்த ஊர். ரங்கசாமி-ஆண்டாள் பெற்றோர். இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் நாலாவதாக 1934-இல் பிறந்தவர் ஆர்.பார்த்தசாரதி. இவரது ஆறாவது வயதிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். கணவர் இறந்தபின் ஆண்டாள் அம்மாள் 1940-இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அதோடு மட்டுமின்றி தன் துக்கத்தை மறக்க ஆர்.பார்த்தசாரதி-க்கு முறையாக சங்கீதம் சொல்லிக்கொடுத்தார். மற்றபடி ஒருவரிடமும் உதவியாளராகவோ, வாத்தியக் கலைஞராகவோ இருந்ததில்லை. தனது இசையறிவால் மட்டுமே இசையமைப்பாளராக வந்தவர் ஆர்.பார்த்தசாரதி. பள்ளிப் படிப்பை சென்னை, புரசைவாக்கத்திலுள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் பயின்றார்.பள்ளிப் படிப்பின் போதே சிறந்த பாடகர் பரிசை வென்றவர். இவர் ஒரு பட்டதாரியுமாவார். நடிகர் கே.பாலாஜி, இதயம் பே...