FAMILY TRAGEDY WITH FATHER IN LAW
FAMILY TRAGEDY WITH FATHER IN LAW காலம்பூரா எங்களுக்குத் தான் கெட்ட பேரு மானசா ''பொம்பளைங்களுக்கு மட்டும் லீவே கிடையாதா... நான் மட்டும், 24 மணிநேரமும் அடுப்படிய கட்டிட்டு அழணுமா... இன்னைக்கு சாப்பாடு, ஓட்டல்ல தான்...'' என்று போர்க்கொடி பிடித்து, சமையல் கட்டுக்கு, கவுசல்யா லீவு விட, பையை எடுத்து, மகனையும் அழைத்துக் கொண்டு, ஓட்டல் நோக்கி, வண்டியை செலுத்தினான், மாதவன். ஓட்டலில் பார்சலுக்கு பணம் கட்டி, காத்திருந்த போது, கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேந்திரனைப் பார்த்தான், மாதவன். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த வயதானவரை பார்த்ததும், தூக்கிவாரிப் போட்டது. ஒடிசலான தேகம், கண்கள் இடுங்கிய நிலையில்... ராஜேந்திரனின் அப்பா தான்! எழுந்து உள்ளே போய், ராஜேந்திரனின் முதுகில் தட்டினான். திரும்பி பார்த்தவனின் முகம், அதிர்ச்சியில் லேசாய் மிரண்டு, பின் இயல்பானது. ''வாடா மாதவா... எப்படி இருக்கே?'' ''நான் இருக்கிறது இருக்கட்டும்... நீ எங்க இங்கே... அதுவும் அப்பாவோடு...'' மேற்கொண்டு பேச முற்பட்டவனை இழுத்து, வெளியே வந்தான், ராஜேந்திரன். ''அப்பா, இப...