Posts

Showing posts with the label HUMBI

HUMBI -THE RUINED CITY

Image
  HUMBI -THE RUINED CITY சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். ஹம்பியின் பேரழகு ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறுங்கள். முழு நிலப்பரப்பின் தரிசனம் நமக்கு அங்கிருந்து கிடைக்கும்.  அதுவும் சூரியன் உதிக்கும் நேரத்தில் அந்த சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. துங்கபத்ரா அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித...

HUMPI ARTIFACTS VIJAYANAGARA DYNASTY REMAINS ...AFTER DEMOLISH OF BAHMINI SULTANS

Image
ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | விஜயநகரப் பேரரசுக்கு கர்நாட அரசு என்றும் ஒரு பெயர் இருந்தது என்பது அப்போது எழுதப்பட்ட நூல்களில் இருந்து தெரிகிறது. போர்ச்சுகீசியர் பிஸ் நெகர் (Bisnegar) அரசு என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். பொயு 1336ல் இன்றைய வடக்கு கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரா நதியின் தெற்குப் பகுதியில் விஜயநகர அரசு தோற்றம் கண்டது. ஹக்கராயர் (ஹரிஹர ராயர் ஹக்கா) புக்கராயர் (புக்கா) என்னும் இரு சகோதரர்கள் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய ஸ்ரீவித்யாரண்யரால் வழிகாட்டப்பட்டு இந்த அரசைத் தோற்றுவித்தனர். அதை அவருக்கே காணிக்கையாகவும் அளித்தனர். எனவே அவர்தான் மன்னர். அவர் சார்பாகவே மன்னர்கள் ஆட்சி செய்தனர். அரசு முத்திரைகளும், அரசாணைகளும் ‘ஸ்ரீ விரூபாக்ஷர்’ என்றே கையொப்பமிடப்பட்டன. (வித்யாரண்யர் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாக விளங்கிய காலம் பொயு 1380-1386). இந்த வழக்கம் தொடர்ந்து வந்ததால் இன்றளவும் சாரதா பீட சங்கராச்சார்யாருக்கு அரியணை, வெண் கொற்றக் குடை, செங்கோல் கிரீடம் ஆகியவை உண்டு. அவற்றைத் தரித்து அ...