S.G.KITTAPPA ,FIRST STAGE ACTOR 1906 AUGUST 25 - 1933 DECEMBER 2
S.G.KITTAPPA ,FIRST STAGE ACTOR 1906 AUGUST 25 - 1933 DECEMBER 2 செங்கோட்டையை சேர்ந்த அந்த சிறுவன், தமிழ் நாடக மேடையை தனது பிரத்யேக சங்கீத பிரயோகத்தினால் தனது சொந்த சாம்ராஜ்யமாகவே மாற்றியிருந்தான். எட்டுக்கட்டை சுருதியில் இளைப்பில்லாத சங்கீத மழை பொழியும் ஆற்றல் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. 10 வயது கூட நிரம்பாத அந்த பாலகனின் சங்கீத கச்சேரியை கேட்க, பிரபல சங்கீத வித்வான்கள் அவன் நிகழ்ச்சி நடக்கும் சபாக்களை நோக்கி வண்டுபோல் மொய்த்தனர். எஸ்.ஜி.கிட்டப்பா 'தாய்மொழித் தமிழில் சுவையுடன் பாடினால் பாமரனும் ரசித்துக்கேட்பான்' என்ற சூத்திரத்தை புரிந்துகொண்ட முதல் கலைஞன் அவன்தான். அதுதான் பின்னாளில் இசை உலகில் அந்த சிறுவன் வெற்றிபெறவும், நாடக உலகம் அவரை கொண்டாடவும் காரணமானது. நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி கிட்டப்பாதான் அந்த சிறுவன். செங்கோட்டையில் பிறந்த கிட்டப்பாவின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் 1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி. இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சி...