KISHORE KUMAR,HINDI PLAYBACK SINGER BORN 1929 AUGUST 4 - OCTOBER 13,1987
KISHORE KUMAR,HINDI PLAYBACK SINGER BORN 1929 AUGUST 4 - OCTOBER 13,1987 கிஷோர் குமார் இறப்பு: அக்டோபர் 13, 1987 இடம்: கந்த்வா, இந்தியா பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர். இறப்பு: அக்டோபர் 13, 1987 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு : இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். கிஷோர் குமார் அவர்கள், 1929 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கந்தவா மாவட்டத்தில் குஞ்சாலால் கங்குலிக்கும், கெளரி தேவிக்கும் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு “அசோக் குமார்” மற்றும் “அனூப் குமார்” என்ற இரண்டு சகோதரர்களும், சத...