LAST PIRATES CAPTURED 1825 MARCH 2 IN CARRIBEAN
LAST PIRATES CAPTURED 1825 MARCH 2 IN CARRIBEAN கடல் கொள்ளை (ஆங்கிலம்: Piracy; கடற்கொள்ளை) என்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை என்றோ குற்றச்செயல் என்றோ கூறலாம். இந்தச் சொல் நிலத்திலோ காற்றிலோ பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது கடற்கரையிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இது பொதுவாக ஒரே கலத்தில் பயணம் செய்யும்போது தீயவர் செய்யும் குற்றச்செயல்பாடுகளைக் குறிப்பதில்லை. (எ.கா. ஒரு பயணி தனது சக பயணியிடமிருந்து பொருட்களைத் திருடுவது). இந்தச் சொல் அவ்விடத்திற்குச் சொந்தமற்றவர்கள் ஓரிடத்தில் நிகழ்த்தும் குற்றச்செயல் பற்றியது ஆகும். கடற்கொள்ளையின் பாரம்பரியமான கொடி (" ஜோலி ரோஜர் ") கொள்ளை (கடற்கொள்ளையையும் சேர்த்து) என்பது பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில் (customary international law) அதே பெயரில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. மேலும், நகர விதிகளிலும், பல மாகாணங்களிலும் இது பல குற்றங்களுடன் சேர்ந்து கொள்ளை என்ற பெயரில் குற்றமாக இருக்கிறது. இது தனியார்க்கொள்ளையிலிருந்து (privateering) வேறுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் தனியார்க் கப்பல்கள் தேசிய நிர்வாகத்தால் அங்கீகரிப்பட்டவை, எனவே...