Showing posts with label JAMESBOND. Show all posts
Showing posts with label JAMESBOND. Show all posts

Saturday, 3 June 2017

JAISHANKAR ஜெய்சங்கர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ BORN 1938 JULY 12 மரணம்ஜூன் 3, 2000


JAISHANKAR ஜெய்சங்கர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ BORN 1938 JULY 12 
மரணம்ஜூன் 3, 2000


ஜெய்சங்கர் (1938 - ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

திரைப்படங்கள்[தொகு]
பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். 


எம்.ஜி.ஆர். போல் செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. தமது காலத்தில் கோலோச்சிய ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை.ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. ஆனால் இத்தனை குறைகளையும் மீறி ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.
 ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நீதிபதியின் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய். சுப்பிரமணியம் சங்கர் என்ற பெயரைத் திரைப்படத்துக்காக ஜெய்சங்கர் என்று மாற்றிக்கொண்டார். இயக்குநரும் நடிகருமாக இருந்த சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிவந்தவர், ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

மூன்றாவது இடம்


‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார். அதே படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய ‘இரவும் வரும் பகலும் வரும்’ என்ற பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ வைத்தது. ‘தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்’ என்று பாடிய போது எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு அடுத்த இடத்தை எளிதாக ஜெய்சங்கர் பெற்றுவிட்டார். 

‘பொம்மலாட்டம்’, ‘யார் நீ’, ‘பூவா தலையா’, ‘நீ’, ‘வைரம்’, ‘செல்வமகள்’, ‘டீச்சரம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘கண்ணன் வருவான்’, ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம்’, ‘பட்டணத்தில் பூதம்’ போன்ற படங்களில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் மென்மையான காதல் உணர்வுகளை ஜெய்சங்கர் அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஆனாலும் சண்டைக் காட்சிகள் மிக்க அந்தக் காலத்து ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் ஜெய்சங்கருக்குத் தனி அந்தஸ்து பெற்றுத் தந்தன. ‘சிஐடி சங்கர்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘கங்கா, ஜக்கம்மா’, ‘ஜம்பு’ , ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஒரே தந்தை’, ‘காலம் வெல்லும்’ போன்ற படங்கள் ஜெய்சங்கரை ஆக் ஷன் ஹீரோவாக்கின.

வசூல் நாயகன்

நூறு படங்களைக் கடந்தபோதும் அவர் நடித்த வண்ணத்தில் வெளியான படங்கள் மூன்றோ நான்கோ என்று இருந்த நிலை. காரணம் அவர் படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தன . தயாரிப்பாளர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக விளங்கினார் ஜெய்சங்கர். கருப்பு வெள்ளைப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு இத்தனை வெற்றிப்படங்களைக் கொடுத்த சாதனையாளர் ஜெய்சங்கர்தான்.

தமிழ்நாட்டின் ராபர்ட் டி நீரோவாக கௌபாய் படங்களில் நடித்த ஜெய்சங்கர் இறுக்கமான முகத்துடன் எதிரிகளைப் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்தினார். ஜெய்சங்கர் நடித்ததில் மிகச்சிறந்த படம் ‘கங்கா’ என்றுதான் தோன்றுகிறது. நான்கு வில்லன்களைக் கொன்று சவக்குழியில் புதைக்கும் அந்த வன்மம் மிக்க ஜெய்யின் முகம் நீண்ட காலம் நினைவிலாடிக் கொண்டிருந்தது. இந்தப் படங்களில்தான் தமிழ்நாட்டின் சோபியா லாரன்களும் ராக்வெல் வெல்ச்சுகளுமாக ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா ( நடிகை மீனாவின் அம்மா) போன்ற நடிகைகள் முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் படுகவர்ச்சியாக நடித்தனர்.

பெண் ரசிகர்கள் இழப்பும் முரண்பாடும்

இதுபோன்ற மசாலா படங்களே ஜெய்சங்கரின் இமேஜைக் கெடுத்துவிட்டன. பெண்கள் அவர் படங்களை நிராகரிக்கத் தொடங்கினர். ‘குழந்தையும் தெய்வமும்’ போன்ற படங்களில் கிடைத்த ரசிகர்களை ஜெய் இழக்கத் தொடங்கினார். இதன் காரணமாக அவர் கலர் படங்களில் நடித்தாலும் கூட ‘எடுப்பார் கைப்பிள்ளை’, ‘டாக்சி டிரைவர்’, ‘மேளதாளங்கள்’, போன்ற பல படங்கள் நிராகரிக்கப்பட்டன. ‘மேயர் மீனாட்சி’ , ‘துணிவே துணை’ போன்ற சில படங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் ஜெய்சங்கரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் வருகையும் ஜெய்சங்கர் பின்னடைய ஒரு காரணமாக அமைந்தது. ‘காயத்ரி’ படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், எழுத்தாளர் சுஜாதா கதையெழுதிய இந்தப் படத்தில் ஜெய்சங்கரை விடவும் கூடுதலாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

நான் சென்னைக்கு வந்த புதிதில் பல்லவன் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கூடவே சில துணை நடிகர்கள் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை குள்ளமணி கண்டக்டர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். தன்னை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார் , நான் அவரைப் பார்த்து சிரித்தேன். அடையாளம் தெரிந்துவிட்டதா என்ற அர்த்தத்தோடு பதிலுக்கு அவரும் சிரித்தார்.

குள்ளமணி , புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கார். ஒரு ஓட்டலில் வேலை கேட்டதற்கு *டேபிள் உயரம் கூட இல்லை எப்படி டேபிளைத் துடைப்பாய்* என திட்டி அனுப்பிவிட்டார்கள். மனதொடிந்த மனிதருக்கு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் வேலை கொடுத்திருக்கிறார்.

குள்ள மணி 34 படங்களில் ஜெய்சங்கருடன் நடித்திருக்கிறார். குள்ளமணியாக இருந்தாலும் சரி குண்டு கல்யாணமாக என்றாலும் சரி எந்த ஒரு துணை நடிகருக்கும் கஷ்டம் என்றால் ஓடோடிப் போய் உதவும் மனப்போக்கு ஜெய்சங்கருக்கு இறுதிவரை இருந்திருக்கிறது. தான் உதவி செய்தவர்களைத் தான் இறந்த பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என தன் மகன்களிடம் அன்புக்கட்டளையிட்டிருந்தாராம் ஜெய்.

ஜெய்சங்கரின் இயற்பெயர் சங்கர். இயக்குநர் தளியத் ஜோசப் இவர் பெயருக்கு முன்னால் ஜெய் சேர்த்து ஜெய்சங்கராக்கி இரவும் பகலும்(1965) படத்தில் கதாநாயகனாக நடிகக்வைத்தார். அசோகன் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.அசோகனும் ஜெய்சங்கரும் ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவர்கள் .அசோகனின் இறுதிச் சடங்கை அருகில் இருந்து செய்து கொடுத்திருக்கிறார் ஜெய் தொடர்ந்து 150 படத்திற்கு மேல் கதாநாயகர்களாக நடித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கமலஹாசனும்  தான். ஜெய்சங்கரின் 150 வது படம் வண்டிக்காரன் மகள்.

ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற பட்டமும் உண்டு .வாரம் ஒரு படம் என்ற கணக்கில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வெளிவரும் அளவிற்கு நடித்திருக்கிறார். இவர் புண்ணியத்தில் திரைத்துறையில் இருந்த அடிப்பொடி நடிகர்களுக்கெல்லாம் தொடர்ந்து வருமானம் கிடைத்திருக்கிறது.

வியட்நாம் வீடு சுந்தரம் தான் இயக்க இருக்கும் விஜயா படத்தில் நடிப்பதற்கு ஜெய்சங்கரைக் கேட்டிருக்கிறார்.*உன் படத்துல சிவாஜி தானப்பா நடிப்பாரு* எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் ஜெய். பிறகு தனது மேக்கப்மேனிடம் சொல்லி வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.சரி நான் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டார் ஜெய் , அந்நேரம் ஜெய் வேறொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் பாடல்காட்சி ஒன்றை சூட் செய்து கொண்டிருந்த பொழுது சுந்தரத்தின் மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது என சேதி வந்திருக்கிறது , உடனே ஜெய் *நான் பாட்ட சூட் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு *என சுந்தரத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் ஜெய்சங்கரின் கிருதா கொஞ்சம் நீட்டிக் கொண்டு விகாரமாய் இருந்திருக்கிறது , இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு தான் அவர் கிருதாவைக் குறைத்து திருத்தி அமைத்தார்கள்.  ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்தார் ஜெய் . அப்பொழுது ரஜினி காந்த் *நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் வில்லன் என்பதால், படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்* என்று கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார்.

ஜெய்சங்கர் நடித்த பாலாபிஷேகம் படத்தை போரூருக்கு அருகில் உள்ள கெருகம்பாக்கத்தில் தான் படம்பிடித்திருக்கிறார்கள்.ஜெய் , அந்த ஊர் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு வானொலி ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். மேலும் தான் படித்த சென்னை புதுக் கல்லூரிக்கு உணவு விடுதி ஒன்றைக் கட்டிக் கொருத்திருக்கிறார் ஜெய்.


‘முரட்டுக்காளை’ படத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிவிட்ட ரஜினியுடன் வி்ல்லனாக நடித்த ஜெய்சங்கர் தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ‘ஊமை விழி’களில் தமது வயதுக்கேற்ற பத்திரிகையாளர் வேடத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஜெய்சங்கர்,  
ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். ஜெய்சங்கர் மேடை நாடக நடிகராக இருந்து சினிமாத் துறைக்கு வந்தவர். அதனால் தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்களால் அழைக்கபட்ட இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஜெய்சங்கர் அதிரடிக் கதாநாயகன், நகைச்சுவைக் கதாநாயகன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமித்தாத்தா-சீதாப்பாட்டி கதையொன்றில் அப்புசாமி ஒரு முக்கிய மனிதரைக் கவர்வதற்காக சில துறுதுறுப்பான உற்சாகமான வாலிப சேட்டைகள் செய்வார். பல்டியடிப்பார்.விசிலடிப்பார். தாவிக்குதிப்பார்.. அப்புசாமியைப் பார்த்து வியந்து போய் அந்த மனிதர் கேட்பார். “ நீர் உண்மையிலேயே கிழவர் தானா? அல்லது 
கிழவர் வேடம் போட்டு வந்த ஜெய் சங்கரா? “
டப்பா படத்தில் நடித்தாலும் ஏதோ வெள்ளிவிழா படத்தில் நடிப்பது போல மிகுந்த உற்சாகமாக பெருமிதத்துடன் நடிப்பார்.
ஜெய்சங்கர் சிரிப்பு- முகத்தில் மின்சாரம் பாய்ச்சியது போல சிரிப்பார். அவரோடு பழகிய யாரும் அந்த சிரிப்பை நிமிடத்திற்கு ஒரு முறை பார்க்கவேண்டியிரு்ந்திருக்கும்.
குழந்தையும் தெய்வமும், பட்டணத்தில் பூதம்,நூற்றுக்கு நூறு,வீட்டுக்கு வீடு என்று ஒரு நாலே நாலு படம் தான் தேறும். அதிலும் நாகேஷ் பங்கு தான் அதிகம். வீட்டுக்கு வீடு படத்தில் தன்னுடைய தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் இமேஜை உடைத்து ஒரு பொண்டுகச்செட்டியாக பிரமாதமாக நடித்திருப்பார்!

வருசத்துக்கு பன்னிரண்டு படம் வீதம் பன்னி குட்டிப் போட்டது போல ஜெய்சங்கர் வத,வதன்னு கதாநாயகனாக மட்டுமே குறுகிய ஒரு காலகட்டத்திற்குள் ஒரு இருநூறு படமாவது நடித்திருப்பார்.

வேறு பொழுது போக்கே அறியாத அந்தக்கால தமிழ் சினிமாப்பைத்தியங்களுக்கு ஜெய்சங்கர் படங்கள் பார்த்த போது தான் சினிமாப் படம் கூட போர் அடிக்கும் என்ற விஷயமே தெரிய வந்தது. கடுங்காவல் தண்டனைக் கைதிகளுக்கு ’ராஜாவீட்டுப்பிள்ளை’ அன்புவழி’’புத்திசாலிகள்’ ‘அத்தைமகள்’’கெட்டிக்காரன்’ ‘மாப்பிள்ளை அழைப்பு’ போன்ற படங்களைப் போட்டுக் காட்டலாம்.
இத்தனைக்கும் ‘புத்திசாலிகள்’ ஸ்பென்ஸர் ட்ரேசி நடித்த 
It's a mad,mad,mad,mad world படத்தின் காப்பி.

தமிழ்வாணன் கல்கண்டு பத்திரிக்கையில் அப்போது தமிழ் படங்களை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்தார். அவர் திடீரென்று ஜெய்சங்கரை கதாநாயகனாக்கி ஒரு படம் எடுத்தார். தமிழ் திரை காணாத புதுமையான படம் என்று சவடாலாக விளம்பரமும் பெரிய அளவில் செய்தார். ‘காதலிக்க வாங்க’ என்ற அந்தப் படம் 1972ல் வெளியானது. சட்டை மட்டும் போட்ட (பேண்ட் இல்லாமல்)ஜெய்சங்கர் அரை நிர்வானமாக ஒரு போஸ்டர் தமிழகமெங்கும் அப்போது ஒட்டப்பட்டது. படம் ஜெய்சங்கரின் மட்டமான போர் பட வரிசையில் சேர்ந்தது.

போர் அடிக்காத சில படங்கள் 
பஞ்சவர்ணக்கிளி, வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள்,பெண்ணே நீ வாழ்க, நான் யார் தெரியுமா,பூவா தலையா,மன சாட்சி,நிலவே நீ சாட்சி,மாணவன்,வீட்டுக்கு ஒரு பிள்ளை,அக்கரைப் பச்சை,கல்யாணமாம் கல்யாணம் ஆகியவை.


பெண் தெய்வம்,கண்ணன் வருவான்,நிலவே நீ சாட்சி,சூதாட்டம், மாணவன் போன்ற சில ஜெய் படங்களில் முத்துராமன் இனணந்து நடித்தார். 

’முத்துராமன் தான்யா நல்லா நடிச்சிருக்கான்’ என்று தரை டிக்கட் ரசிகர்கள் படம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே சொல்வார்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் 1966ல் திரையிட்ட ‘இருவல்லவர்கள்’ (தம்பியாக ஜெய்சங்கர், அண்ணனாக ஆர்.எஸ். மனோகர் ) இந்தியில் ரந்திர் கபூர்,வினோத் கன்னா நடித்து ’ஹாத் கி சஃபாய்’ ஆக படமாக்கப்பட்டு மீண்டும் தமிழில் 1981ல் கமல், ஜெய்சங்கர் நடித்து ‘சவால்’ என்ற பெயரில் பாலாஜி தயாரிப்பில் வெளியானது.

ஜெய்சங்கர் இடத்தை நிரப்ப இன்று யாரும் வந்துவிட்டால் தமிழ் சினிமா அதல பாதாளத்தில் விழுந்து நாசமாய் போகவேண்டியது தான்.
சி.ஐ.டி சகுந்தலா, கெட்டிக்காரன் லீலா,ராஜ்கோகிலா போன்ற க்ரூப் டான்ஸ், எக்ஸ்ட்ரா நடிகைகள் ஜெய்சங்கர் படங்களால் கதாநாயகியாக முடிந்தது.


எவ்வளவோ டெக்னிசியன்களுக்கு ப்ரொமோசன்  கொடுத்தவர், தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் என்று திரையுலகில் பலரும் நன்றியோடு குறிப்பிடுவார்கள். ப்ரொமோசன் பெற்றவர்களெல்லாம் பல ‘ஜெய்சங்கர் குப்பைப் படங்கள்’ தான் எடுத்தார்கள்.கே. பாலச்சந்தர் நூறுபடங்கள் இயக்கினாரே. தான் இயக்கிய படங்களில் அவருக்கே பிடிக்காத படமாக சலிப்போடு குறிப்பிட்டது ஜெய்சங்கர்- ரவிச்சந்திரன் நடித்த ”நான்கு சுவர்கள்” தான்!( ‘நூற்றுக்கு நூறு’ பாலச்சந்தர் படம்.)

பழைய தமிழ் படங்களில் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்பதால் ஜெய்சங்கர் படப் பாடல்கள் விஷேச அந்தஸ்து பெற்றன. முக்கியமான ஒரு அம்சம்- T.M.சௌந்தர ராஜன் பாடல்கள் இவருக்கு சிவாஜி,எம்.ஜி.ஆருக்கு போலவே நன்கு பொருந்தியது. TMS பாடல்கள் கேட்டவுடன் இது எம்.ஜி.ஆர் பாட்டு, இது சிவாஜி பாட்டு என்பது போல ஜெய்சங்கர் பாடல்களும் கண்டுபிடிக்க முடியும். குரல் கூட ஜெய்சங்கர் போலவே இருக்கும்.உதாரணம்: “காதல் பறவை” படத்தில் ’பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா.’
இந்தி பாடல்களை அப்படியே காப்பியடித்து மாடர்ன் தியேட்டர்ஸுக்கு வேதா இசையமைத்த பாடல்கள் கூட இன்றும் எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன.
”நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்” பிஸ்வஜித்-சாய்ரா பானு படத்தில் வரும் ஒரு சோகப்பாடல்!

பாட்டு என்றதும் ஜெய்சங்கரின் FUNNY DANCE பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது. இருகால்களையும் மாற்றி மாற்றி்த் தூக்கி குதிப்பது தான் ஜெய்சங்கர் டான்ஸ்.’பிருந்தாவனத்தில் பூவெடுத்துஇளம்பெண்ணே உனக்கு சூடட்டுமா’‘நாணத்தாலே கால்கள் பின்ன,பின்ன’ பூவாத்தலையா போட்டாத்தெரியும்.நீயா நானா பார்த்து விடு’ ‘ காலம் பொன்னானது,கடமை கண்ணானது’என்று ஆரம்பித்து அவர் ரஜினி படத்தில் ஆடிய ‘ மாத்தாடு மாத்தாடு மல்லிகை’ வரை குதித்துக்கொண்டே தான் இருந்தார்.

இப்போது அதே வேலையை சூர்யா சிவகுமார் செய்து கொண்டிருக்கிறார் 

கேமராமேன் கர்ணன் இயக்கிய கங்கா, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்கள் ஜெய் சங்கருக்கு ‘கரடி’ பட்டத்தை உறுதி செய்தன. மயக்க ஊசி போடப்பட்ட சிங்கத்தை தூக்கத்திலிருந்து எழுப்பி சண்டை போட்டு சித்திரவதை செய்வார். “ என்னை தூங்க விடேன்டா” என்று சிங்கம் கெஞ்சும். 1970களில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களை கொஞ்சம் தள்ளி நின்று ரசித்தால், சிரித்து வயிறு புண்ணாகி விடும். அவர் ரொம்ப சீரியஸாகத்தான் நடிப்பார். ஆனால் நமக்கு சரியான காமெடியனாகத்தான் அந்தப்படங்களில் தெரிவார். அது போலத்தான் பல,பல ஜெய்சங்கர் படங்களும்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பின் கருணாநிதியிடம் ஜெய்சங்கர் சிக்கிக்கொண்டு வண்டிக்காரன் மகன் துவங்கி பல படங்கள் செய்திருக்கிறார். கருணாநிதி வசனம் எழுதிய ஜெய்சங்கர் படங்கள் எதுவும் கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பவையல்ல.


எம்.ஜி.ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவும்  ஜெய்சங்கரைக் காதலித்தார். மற்றொரு நடிகை எல்.விஜயலட்சுமியைக் கூட ஜெய்சங்கர் கல்யாணம் செய்ய இருக்கிறார் என்ற பரபரப்பு இருந்ததுண்டு.

வில்லனாக ரஜினியின் “ முரட்டுக்காளை” படத்தில் நடித்த பிறகு மீண்டும் ஒரு செம ரவுண்டு வந்தார். ரொம்ப பரோபகாரி. பல சிரமப்பட்ட திரையுலகத்தவர்க்கு பொருளுதவி செய்தவர் என அறியப்பட்டவர் ஜெய்சங்கர்.

நடிகர் குள்ள மணி அந்தக்காலத்தில் ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்தபோது ஜெய்சங்கரின் தாயாரும், மனைவியும் மிக மோசமாக சித்திரவதைகள் செய்து கொடுமைப் படுத்தியதாக பத்திரிக்கைப் பேட்டியொன்றில் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் திருப்பூரில் ஒரு கல்யாண வீட்டில் குள்ளமணி அதை என்னிடம் ஊர்ஜிதப்படுத்தினார்.

அப்பல்லோவில் கடைசிக் காலத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்த போது நர்ஸிடம் “ Halls" மிட்டாய் கேட்டு அடிக்கடி கெஞ்சிய ஜெய்சங்கர் குணமாகுமுன்னே சொல்லாமல் கொள்ளாமல் ENNUI தாங்க முடியாமல் ஹாஸ்பிடலில் இருக்க முடியாமல் வெளியேறி வீட்டுக்கு ஓடி வந்து, பின் மரணத்தை தழுவினார்.


ஜெய்சங்கர் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
வருடம் திரைப்படம் குறிப்பு
1965 இரவும் பகலும் 
1965 எங்க வீட்டுப் பெண் 
1965 பஞ்சவர்ணக்கிளி 
1965 குழந்தையும் தெய்வமும் 
1965 ஒரு விரல் 
1965 வல்லவனுக்கு வல்லவன் 
1965 விளக்கேற்றியவள் 
1966 கௌரி கல்யாணம் 
1966 இரு வல்லவர்கள் 
1966 காதல் படுத்தும் பாடு 
1966 நாம் மூவர் 
1966 வல்லவன் ஒருவன் 
1966 யார் நீ 
1967 காதலித்தால் போதுமா 
1967 பட்டணத்தில் பூதம் 
1967 சபாஷ் தம்பி 
1967 ராஜா வீட்டுப் பிள்ளை 
1967 பவானி 
1968 பொம்மலாட்டம் 
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ் 
1968 நேர் வழி 
1968 ஜீவனாம்சம் 
1968 முத்துச்சிப்பி 
1968 டீச்சரம்மா 
1968 உயிரா மானமா 
1968 அன்பு வழி 
1968 சிரித்த முகம் 
1969 அக்கா தங்கை 
1969 அன்பளிப்பு 
1969 அத்தைமகள் 
1969 கன்னிப் பெண் 
1969 மனசாட்சி 
1969 மன்னிப்பு 
1969 நான்கு கில்லாடிகள் 
1969 நில் கவனி காதலி 
1969 பெண்ணை வாழ விடுங்கள் 
1969 பொண்ணு மாப்பிள்ளை 
1969 பூவா தலையா 
1969 ஆயிரம் பொய் 
1970 சி.ஐ.டி.சங்கர் 
1970 நிலவே நீ சாட்சி 
1970 காலம் வெல்லும் 
1970 கல்யாண ஊர்வலம் 
1970 கண்ணன் வருவான் 
1970 காதல் ஜோதி 
1970 மாணவன் 
1970 பெண் தெய்வம் 
1970 வீட்டுக்கு வீடு 
1970 எதிர் காலம் 
1971 கெட்டிக்காரன் 
1971 குலமா குணமா 
1971 நான்கு சுவர்கள் 
1971 புதிய வாழ்க்கை 
1971 சூதாட்டம் 
1971 தேன் கிண்ணம் 
1971 வீட்டுக்கு ஒரு பிள்ளை 
1971 அன்புக்கு ஒரு அண்ணன் 
1971 தங்க கோபுரம் 
1971 நூற்றுக்கு நூறு 
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன் 
1972 அவசர கல்யாணம் 
1972 தெய்வ சங்கல்பம் 
1972 கங்கா 
1972 கண்ணம்மா 
1972 கருந்தேள் கண்ணாயிரம் 
1972 காதலிக்க வாங்க 
1972 நவாப் நாற்காலி 
1972 ராணி யார் குழந்தை 
1972 உனக்கும் எனக்கும் 
1972 வரவேற்பு 
1972 ஆசீர்வாதம் 
1972 பதிலுக்கு பதில் 
1972 சவாலுக்கு சவால் 
1972 டில்லி டு மெட்ராஸ் 
1972 மாப்பிள்ளை அழைப்பு 
1973 அம்மன் அருள் 
1973 அன்புச் சகோதரர்கள் 
1973 ஜக்கம்மா 
1973 மல்லிகைப் பூ 
1973 பொன்வண்டு 
1973 பிரார்த்தனை 
1973 சொந்தம் 
1973 தலைப்பிரசவம் 
1973 வாக்குறுதி 
1973 வந்தாளே மகராசி 
1973 வாயாடி 
1973 விஜயா 
1973 தெய்வக் குழந்தைகள் 
1973 தெய்வாம்சம் 
1974 அக்கரைப் பச்சை 
1974 அத்தையா மாமியா 
1974 கலியுகக் கண்ணன் 
1974 கல்யாணமாம் கல்யாணம் 
1974 பந்தாட்டம் 
1974 பிராயசித்தம் 
1974 ரோஷக்காரி 
1974 திருடி 
1974 உங்கள் விருப்பம் 
1974 உன்னைத்தான் தம்பி 
1974 வைரம் 
1974 அப்பா அம்மா 
1974 மகளுக்காக 
1974 இதயம் பார்க்கிறது 
1975 சினிமா பைத்தியம் 
1975 எடுப்பார் கைப்பிள்ளை 
1975 உங்க வீட்டு கல்யாணம் 
1975 எங்க பாட்டன் சொத்து 
1975 தாய் வீட்டு சீதனம் 
1975 தொட்டதெல்லாம் பொன்னாகும் 
1976 மேயர் மீனாட்சி 
1976 மிட்டாய் மம்மி 
1976 நீ ஒரு மகாராணி 
1976 ஒரே தந்தை 
1976 ஒரு கொடியில் இரு மலர்கள் 
1976 பணக்கார பெண் 
1976 துணிவே துணை 
1976 வாயில்லா பூச்சி 
1976 ஜஸ்டிஸ் கோபிநாத் 
1976 மகராசி வாழ்க 
1977 ஆசை மனைவி 
1977 அன்று சிந்திய ரத்தம் 
1977 காயத்ரி 
1977 காலமடி காலம் 
1977 மாமியார் வீடு 
1977 நல்லதுக்கு காலமில்லை 
1977 ஒருவனுக்கு ஒருத்தி 
1977 பாலாபிஷேகம் 
1977 ராசி நல்ல ராசி 
1977 ரௌடி ராக்கம்மா 
1977 சொந்தமடி நீ எனக்கு 
1977 சக்ரவர்த்தி 
1977 கியாஸ்லைட் மங்கம்மா 
1977 நீ 
1978 அவள் ஒரு அதிசயம் 
1978 கங்கா யமுனா காவேரி 
1978 இது எப்படி இருக்கு 
1978 மக்கள் குரல் 
1978 மேளதாளங்கள் 
1978 முடிசூடா மன்னன் 
1978 பஞ்சாமிர்தம் 
1978 ராஜாவுக்கேத்த ராணி 
1978 சக்கைப் போடு போடு ராஜா 
1978 டாக்ஸி டிரைவர் 
1978 உள்ளத்தில் குழந்தையடி 
1978 வணக்கத்துக்குரிய காதலியே 
1978 வண்டிக்காரன் மகன் 
1978 வாழ நினைத்தால் வாழலாம் 
1978 இளையராணி ராஜலட்சுமி 
1979 ஆடு பாம்பே 
1979 தைரியலட்சுமி 
1979 கடமை நெஞ்சம் 
1979 காமசாஸ்திரம் 
1979 கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 
1979 குழந்தையைத் தேடி 
1979 மகாலட்சுமி 
1979 மாயாண்டி 
1979 நான் ஒரு கை பார்க்கிறேன் 
1979 நெஞ்சுக்கு நீதி 
1979 ஒரே வானம் ஒரே பூமி 
1980 ஜம்பு 
1980 காலம் பதில் சொல்லும் 
1980 முரட்டுக்காளை 
1980 சரணம் ஐயப்பா 
1981 அஞ்சாத நெஞ்சங்கள் 
1981 எல்லாம் இன்பமயம் 
1981 கர்ஜனை 
1981 கன்னித்தீவு 
1981 கீழ்வானம் சிவக்கும் 
1981 குலக்கொழுந்து 
1981 நீதி பிழைத்தது 
1981 ரத்தத்தின் ரத்தம் 
1981 சவால் 
1982 அதிசய பிறவிகள் 
1982 அஸ்திவாரம் 
1982 ஆட்டோராஜா 
1982 நன்றி மீண்டும் வருக 
1982 ஓம் சக்தி 
1982 ஒரு வாரிசு உருவாகிறது 
1982 பட்டணத்து ராஜாக்கள் 
1982 தாய் மூகாம்பிகை 
1982 தனிக்காட்டு ராஜா 
1982 தீர்ப்பு 
1982 வாழ்வே மாயம் 
1983 அபூர்வ சகோதரிகள் 
1983 அடுத்த வாரிசு 
1983 என் ஆசை உன்னோடு தான் 
1983 என்னைப் பார் என் அழகைப் பார் 
1983 இன்று நீ நாளை நான் 
1983 கைவரிசை 
1983 கண் சிவந்தால் மண் சிவக்கும் 
1983 மலையூர் மம்பட்டியான் 
1983 பாயும் புலி 
1983 சட்டம் 
1983 தாய் வீடு 
1983 தம்பதிகள் 
1983 தங்க மகன் 
1983 துடிக்கும் கரங்கள் 
1984 24 மணி நேரம் 
1984 ஆலய தீபம் 
1984 அம்மா இருக்கா 
1984 சரித்திர நாயகன் 
1984 எழுதாத சட்டங்கள் 
1984 இது எங்க பூமி 
1984 இரு மேதைகள் 
1984 கடமை 
1984 நீங்கள் கேட்டவை 
1984 சட்டத்தை திருத்துங்கள் 
1984 திருப்பம் 
1984 வாழ்க்கை 
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி 
1984 வெள்ளை புறா ஒன்று 
1984 விதி 
1984 எழுதாத சட்டங்கள் 
1984 குடும்பம் 
1985 ஆஷா 
1985 அந்தஸ்து 
1985 அர்த்தமுள்ள ஆசைகள் 
1985 அவன் 
1985 பந்தம் 
1985 சாவி 
1985 மூக்கணாங்கயிறு 
1985 நேர்மை 
1985 ஊஞ்சலாடும் உறவுகள் 
1985 சமயபுரத்தாளே சாட்சி 
1985 சிவப்பு நிலா 
1985 வேலி 
1985 யார் 
1985 அதிசய மனிதன் 
1985 படிக்காதவன் 
1985 பிள்ளை நிலா 
1985 பூவே பூச்சூடவா 
1985 சாட்சி 
1986 அன்னை என் தெய்வம் 
1986 ஜோதி மலர் 
1986 கைதியின் தீர்ப்பு 
1986 கண்ணே கனியமுதே 
1986 குங்கும பொட்டு 
1986 மாவீரன் 
1986 மச்சக்காரன் 
1986 மருமகள் 
1986 மீண்டும் பல்லவி 
1986 முரட்டு கரங்கள் 
1986 நானும் ஒரு தொழிலாளி 
1986 நம்பினார் கெடுவதில்லை 
1986 ஊமை விழிகள் 
1986 ரசிகன் ஒரு ரசிகை 
1986 ரேவதி 
1986 சிவப்பு மலர்கள் 
1986 பதில் சொல்வாள் பத்ரகாளி 
1987 அஞ்சாத சிங்கம் 
1987 கூலிக்காரன் 
1987 இவர்கள் இந்தியர்கள் 
1987 இவர்கள் வருங்காலத் தூண்கள் 
1987 கதை கதையாம் காரணமாம் 
1987 காதல் பரிசு 
1987 பருவ ராகம் 
1987 சொல்லுவதெல்லாம் உண்மை 
1987 வைராக்கியம் 
1987 வீர பாண்டியன் 
1987 விலங்கு 
1987 ஒரு தாயின் சபதம் 
1988 என் ஜீவன் பாடுது 
1988 இரண்டில் ஒன்று 
1988 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் 
1988 தாய் பாசம் 
1988 ஜாடிக்கேத்த மூடி 
1989 திராவிடன் 
1989 மாப்பிள்ளை 
1989 நாளைய மனிதன் 
1989 பொன்மன செல்வன் 
1989 பொண்ணு பாக்க போறேன் 
1989 பொறுத்தது போதும் 
1989 தாய்நாடு 
1989 அபூர்வ சகோதரர்கள் 
1990 அம்மா பிள்ளை 
1990 ஆரத்தி எடுங்கடி 
1990 கல்யாண ராசி 
1990 மௌனம் சம்மதம் 
1990 பாலைவன பறவைகள் 
1990 13-ம் நம்பர் வீடு 
1991 தளபதி 
1991 மில் தொழிலாளி 
1991 நாட்டுக்கு ஒரு நல்லவன் 
1991 நீ பாதி நான் பாதி 
1991 சார் ஐ லவ் யூ 
1991 வணக்கம் வாத்தியாரே 
1991 ஆயுள் கைதி 
1992 கஸ்தூரி மஞ்சள் 
1992 நாடோடிப் பாட்டுக்காரன் 
1992 நாளைய செய்தி 
1992 நட்சத்திர நாயகன் 
1992 சிங்கார வேலன் 
1993 ஏர்போர்ட் 
1993 துருவ நட்சத்திரம் 
1993 கோகுலம் 
1993 மின்மினி பூச்சிகள் 
1993 முதல் பாடல் 
1994 என் ராஜாங்கம் 
1994 கண்மணி 
1994 பிரியங்கா 
1994 சிந்துநதிப் பூ 
1994 வரவு எட்டணா செலவு பத்தணா 
1995 அவள் போட்ட கோலம் 
1995 சந்திரலேகா 
1995 பாட்டு வாத்தியார் 
1995 தாய் தங்கை பாசம் 
1995 வாரார் சண்டியர் 
1995 விஷ்ணு 
1996 சுபாஷ் 
1997 அருணாச்சலம் 
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் 
1997 காத்திருந்த காதல் 
1998 புதுமைப்பித்தன் 
1998 தர்மா 
1998 இனி எல்லாம் சுகமே 
1999 சின்ன ராஜா 
1999 பூ வாசம்


Thursday, 25 August 2016

HOLLYWOOD JAMESBOND ACTOR SEAN CONNERY BORN 1930 AUGUST 25



HOLLYWOOD JAMESBOND ACTOR SEAN CONNERY  BORN 1930 AUGUST 25




Sean Connery Biography
Actor, Producer (1930–)

"I eat and drink nothing but the very best, and I also get the loveliest ladies in the world."Sean Connery 1962 ON MARRIAGE



“Everything I've done has had to be accomplished in my own cycle, my own time, on my own behalf, and with my own sweat. But if people hadn't liked what I was doing, I'd probably be delivering milk today—and I never forget that.”
—Sean Connery

Synopsis

Sean Connery was born on August 25, 1930, in Fountainbridge, Scotland. In the 1950s, he was cast in numerous U.K. films and television programs.

 In the early '60s, he landed the lead role of James Bond in Dr. No, continuing the role in followups like Goldfinger and Thunderball while gaining massive popularity. He worked regularly in film thereafter, and in 1987 won an Academy Award in the category of supporting actor for The Untouchables. Connery later starred in the adventure films Indiana Jones and the Last Crusade and The League of Extraordinary Gentlemen before retiring from acting.





Childhood in Scotland

Leading actor Sean Connery was born Thomas Sean Connery on August 25, 1930, in Fountainbridge, Scotland. The son of Joe, a truck driver, and Euphamia, a laundress, Connery had a modest upbringing in a neighborhood known as "the street of a thousand smells" for the stench of the local rubber mill and several breweries that filled the air.

 His home was a two-room flat where the infant slept in a bureau drawer because his parents couldn't afford a crib. "We were very poor," Connery has commented, "but I never knew how poor because that's how everyone was there." Joe brought home only a few shillings a week, and those were often spent on whiskey or gambling.











Known during his youth as "Tommy," Connery grew up on the streets along with the Fountainbridge youth, playing tag or soccer. The local gangs dubbed him "Big Tam" because of his size and his ability to pummel most of his playmates. 

He attended Tollcross elementary school and amazed his teachers with a lightning-quick mathematical aptitude. From the day he could read, he devoured every comic book he could get his hands on and dreamed up his own imaginative tales of Martians and madmen. Even then, he had a fascination with film: "I would play hooky and go to Blue Halls, the local movie house, to watch the pictures," he recalled.


When Connery was 8 years old, his parents had a second child: Neil. Young Tom delighted in the role of big brother and, as they grew up, the Connery boys were inseparable. They fished in nearby Union Canal (using their mother's stockings for line) and skipped school to fit in more amusing extracurricular activities—including running with "the wrong element." 

Young Drifter and Bodybuilder

At the age of 13, Connery quit school to work full time at the local dairy. Three years later, he joined the Royal Navy. He received two tattoos on his arm that he still bears today, reading: "MUM AND DAD" and "SCOTLAND FOREVER." Unfortunately, the artwork lasted longer than his naval career. Though he signed up for a seven-year stint, he was released from service after three years due to stomach ulcers.


Back home, Connery took assorted jobs shoveling coal, laying bricks, polishing coffins and posing as a model at the Edinburgh Art School. For months, he skimped and saved shillings to become a member of the Dunedin Weightlifting Club. "It was not so much to be fit but to look good for the girls," he once admitted. The local ladies were impressed—but so were his fellow gym mates, who nominated him for the Mr. Universe contest. 


In 1953, Connery traveled the nine hours to London, where the competitions were held. He boldly introduced himself to the contest judges as "Mr. Scotland," pointedly showcasing his 6' 2" frame. He was chosen third in the tall men's division and given a medal—but that wasn't all. A local casting director in attendance liked the hammy Scottish kid and asked him to join the chorus of a new production, the Rodgers and Hammerstein musical South Pacific, playing on Drury Lane in London's theater district. "I didn't have a voice, couldn't dance," Connery admitted. "But I could look good standing there."

Start of Acting Career

One rehearsal was all it took: "I decided then and there to make acting my career." He chose the stage name Sean Connery because Sean, besides being his middle name, reminded him of his favorite movie hero, Shane, as played by Alan Ladd. "It seemed to go more with my image than Tom or Tommy," he recalled. "Sean Connery" was thus listed as a chorus member in the South Pacific program.



Over the next few years, Connery was cast in numerous films and television programs, including a much-acclaimed BBC staging of Requiem for a Heavyweight. But his lack of education worried him, and he thus began reading the classics, including Proust, Tolstoy and Joyce. 










The book-learning, however, did not soften his street instincts. 

While filming Another Time, Another Place (1958) with Lana Turner, Connery was involved in a brawl on the set with Turner's boyfriend Johnny Stompanato. (The Hollywood tabloids reported that Connery and Turner were having an affair.)





Big Break as James Bond

Connery liked the reputation of being a rugged ladies' man. But that changed in August 1957 when, while filming a TV show for Britain's ATV Playhouse, he met a beautiful blond Australian actress named Diane Cilento. 
She was married at the time, but Connery's attraction to her was undeniable. 









At first Cilento felt nothing for her cast mate except friendship: "He seemed like a man with a tremendous chip on his shoulder," she remarked. In 1959, just as Connery's career was taking off, Cilento contracted tuberculosis, and the actor realized how devastated he would be if he lost her. He turned down a big break in the Charlton Heston film El Cid to be close to her while she recovered. The decision didn't hurt his career; in fact, Twentieth-Century Fox studios came calling with a contract, and Connery made several films in Hollywood. 
WITH JAMAICA FAN


When the contract was up, he had another stroke of luck. Producers Harry Saltzman and Albert "Cubby" Broccoli cast him as the lead in a spy movie based on one of a series of Ian Fleming novels. Bond—James Bond—was born. 


The 1962 film Dr. No showcased the spy contending with the arch-villain title character and his quest to control American launched rockets. 













Two sequels were released immediately: 

From Russia With Love (1963) and 




the international blockbuster Goldfinger (1964). 









Thunderball (1965) fared even better at the box office, 



and You Only Live Twice (1967) followed.



Sly, sexy and confident with questionable scruples, Connery as Bond was the embodiment of the British secret agent to many (even if he did have to wear a toupee to cover his prematurely balding head). "We all knew this guy had something," Saltzman would recall. "We signed him without a screen test. We all agreed, he was 007." Connery had a notable non-Bond role in Alfred Hitchcock's psychological thriller Marnie (1964), along with other projects like The Hill (1965), A Fine Madness (1966), Shalako (1968) and The Molly Maguires (1970). He declared his last role as Bond in 1971's Diamonds Are Forever, with the part taken over by Roger Moore in 1973's Live and Let Die.

Personal Conflict and Controversy

His acting career now cemented, Connery decided it was time to settle his personal affairs as well. Diane was now divorced,

 and the pair wed secretly at the Rock of Gibraltar in November 1962 while Connery was filming From Russia With Love.







They honeymooned briefly in Spain before the actor returned to the States for a flood of publicity. Connery thrived on the attention and adoration: "Now, I can kill any s.o.b. in the world and get away with it," he bragged to The Saturday Evening Post. "I eat and drink nothing but the very best, and I also get the loveliest ladies in the world."





But Connery had a tendency to go too far in interviews and openly advocated abusive behavior. For example, he told a London newspaper his opinion on hitting women: "An open-handed slap is justified. So is putting your hand over her mouth.

" He later told Playboy, "I don't think there's anything particularly wrong about hitting a woman ... if all other alternatives fail and there's plenty of warning."

The comments came back to haunt him when, in 1973, 10 years after his son Jason was born, he and Cilento divorced amidst a flurry of tabloid rumors that he was physically abusive. 

Connery denied them all, and married French-Moroccan artist
Micheline Roquebrune in 1975—again at Gibraltar. The pair met in a golf tournament in Morocco, a sport that was a shared passion. He won the men's award; she took the women's.

Bored of Being 007

By this time, Connery had made a total of six Bond pictures, but the man who once reveled in notoriety now shrunk from the spotlight. He retreated from Hollywood, moving his wife and her three children from her first marriage into mansions in England and Marbella, Spain.


 It would be more than a decade before he reluctantly agreed to reprise his Bond role one last time, in 1983's Never Say Never Again. 

For this, he was paid a salary of several million dollars—a far cry from the reported $16,000 he earned for Dr. No.

Despite the money, Connery was bitter and criticized Broccoli and Saltzman for stifling his talent. "This Bond image is a problem in a way, and a bit of a bore," he said of his last performance. He donated a large portion of his earnings to the Scottish International Education Trust to help students from poor backgrounds like his own.

 But his critics wondered if he was motivated by generosity or politics: Connery fervently supports Scotland's independence from the United Kingdom, most recently backing the failed 2014 referendum to have the country leave Great Britain, and has also given a great deal of his own money to the secessionist Scottish National Party. For more than two decades, he and Micheline lived in Marbella.

Prestigious Projects and Oscar Win 

After Bond, Connery continued to work regularly—Murder on the Orient Express (1974), The Man Who Would Be King (1975), Robin and Marian (1976), with Audrey Hepburn, The Great Train Robbery (1979), Time Bandits (1981), Highlander (1986) and The Name of the Rose (1986), winning a British Film Academy award for the latter project, which was based on the book by Umberto Eco. Connery finally won an Academy Award (best supporting actor), for his role as a Chicago cop on the trail of Al Capone in 1987's The Untouchables, co-starring Kevin Costner, Andy Garcia and Robert De Niro.

Connery's career continued forward with no signs of slowing down. He played the father of the title character in Steven Spielberg's Indiana Jones and the Last Crusade (1989), opposite Harrison Ford, and, in 1990, played defecting Russian submarine captain Marko Ramius in The Hunt for Red October, a commercially successful outing that earned more than $200 million globally. Other films included Robin Hood: Prince of Thieves (1991), with Costner, Highlander II: The Quickening (1991), Medicine Man (1992), with Lorraine Bracco, The Rock (1996), his prison action-adventure with Nicolas Cage, First Knight (1995), Dragonheart (1996) and The Avengers (1998), with Ralph Fiennes and Uma Thurman. 

'Entrapment' and Knighthood

Connery then played a cat burglar in the love story/thriller Entrapment (1999), which he also produced. The project co-starred young actress Catherine Zeta-Jones, 

and controversy was generated by the 40-year age difference between the stars.

 In 2000, Connery had a starring role in the drama Finding Forrester, followed by 2003's The League of Extraordinary Gentlemen, a comic book adaptation in which he depicted fictional explorer Allan Quatermain.

Connery has been called "the rogue with the brogue," and in 1989, at almost 60 years of age, he was named People magazine's "Sexiest Man Alive." 


But while his professional work is applauded, his personal choices have often come under fire. "I'm not shy about voicing what I believe to be true," he said in 1998, after being denied a British knighthood due to his active support for the Scottish National Party. (He would be knighted by Queen Elizabeth II in 2000, 



for which he wore traditional Highland attire.) In 1999, Connery received a Kennedy Center Honor for Lifetime Achievement, and in 2006 received the American Film Institute's Lifetime Achievement Award.

Now in his 80s, Connery has publicly retired from acting, though he has lent his voice to the animated film Sir Billi (2013). 

In 2015, Connery's wife Micheline was charged with tax fraud in relation to the sale of the couple's large Marbella estate in 1998. The couple subsequently relocated to the Bahamas and has become involved in environmental protection efforts there.

In 2008 Connery released the book Being a Scot, a work which was billed as an exploration of the actor's native country and its ideologies more so than a traditional autobiography.