PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR
PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குருகுலத்திலிருந்து வரப்பெற்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். பெரிய உருவம். ஆனால் குழந்தைத்தனமான முகம் கொண்டவர். மனம் போல் மாங்கல்யம், நாடோடி மன்னன் [1958], மருத நாட்டு இளவரசி [1950], கடவுளைக் கண்டேன், மோகன சுந்தரம் [1951], சின்னத்துரை [1952], துளிவிஷம் [1954], காவேரி [1955], பெரிய இடத்துப் பெண் [1962], எங்க வீட்டுப் பெண், சக்கரவர்த்தித் திருமகள், கூண்டுக்கிளி போன்ற 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நகைச்சுவை நடிகர். நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். ”தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்று பாடுவாரே….” அது சிறைக்காவலராக தூங்கித் தூங்கி விழுந்து நடித்திருக்கும் கொட்டாப்புளி ஜெயராமனைப் பார்த்துத்தான். மோகனசுந்தரம் படத்தில் தலைமைக் காவலராக நடித்திருப்பார். எனினும் இவரது நடிப்பிற்குத் தீனி போடும் கதாபாத்திரமாக இது இல்லை. எங்க வீட்டுப் பெண் படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன் சிறிய கதாபாத்திரத்தில் வருவார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் கலைவாணரின் முட்டாள் சீடனாக வரும...