பாகிஸ்தானை விரட்டி அடித்த லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் 2 அக்டோபர் 1904
பாகிஸ்தானை விரட்டி அடித்த லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் 2 அக்டோபர் 1904 நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம் பாகிஸ்தான் போரின் போது லால்பகதூர் சாஸ்திரி லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார். வரலாறு[மூலத்தைத் தொகு] லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்...