JOSEPH FRANCOIS ,MARQUIS DUPLEIX STATESMAN BORN 1697 JANUARY 1 -1763 NOVEMBER 10
JOSEPH FRANCOIS ,MARQUIS DUPLEIX STATESMAN BORN 1697 JANUARY 1 -1763 NOVEMBER 10 யோசப் பிரான்சுவா, மார்க்கி தூப்ளே (Joseph-François, Marquis Dupleix, 1 சனவரி 1697 – 10 நவம்பர் 1763) இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். இவர் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராபர்ட் கிளைவிற்கு எதிரியாக விளங்கினார். வாழ்க்கை வரலாறு ஜோசெப் பிரான்சுவா தூப்ளேக்ஸ், ஜனவரி 1, 1697 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் பிறந்தார். செல்வந்தரான அவரது தந்தை பிரான்சுவா தூப்ளே மகனின் அறிவியல் நாட்டத்தைத் திசைதிருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலொன்றில் 1715-ல் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பல கடற்பயணங்கள் மேற்கொண்டார். 1720-ல் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு கவுன்சில் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். மிகுந்த வணிக நாட்டத்தை வெளிப்படுத்திய தூப்ளேக்ஸ் தனது அலுவல்களுக்கு தவிரவும் தனக்காகவும் வணிக முயற்சிகளை மேற்கொண்டு 1730-ல் பெரும் செல்வம் ஈட்டினார். கல்கத்தா அருகில் உள்ள சந்திர நாகூர் நகரில் பிர...