DEIVAMAGAN MOVIE
DEIVAMAGAN MOVIE .அந்த நாள் ஞாபகம் - பார்ட் 12 நிறைகுடம் பற்றி எழுதும்போது ஒரு விஷயம் குறிப்பிட மறந்து விட்டேன். தங்க சுரங்கத்திலிருந்து ஆரம்பித்து அஞ்சல் பெட்டி வரை நான்கு படங்களுக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் இசை அமைத்ததை பேசினோம். தொடர்ந்து ஐந்தாவது படமான நிறைகுடத்திற்கும் அதுவரை நடிகர் திலகத்தின் படங்களுக்கு இசையமைக்காத ஒருவர் இசை அமைத்தார். ஆம், மெல்லிசை மாமணி என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு வி.குமார் அவர்கள். பாலச்சந்தரின் நீர்க்குமிழி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கேபி மற்றும் முக்தா பிலிம்ஸ் படங்களுக்கு இசையமைத்த குமார் நிறைகுடம் படத்தில் மூன்று அருமையான பாடல்களை கொடுத்தார். அடுத்து இது போல நடிகர் திலகம் படங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒரு வேளை இன்னும் பெரிய அளவிற்கு வந்திருக்கலாம். அவரை பற்றிய குறிப்புகளை சென்ற வார கட்டுரையின் இறுதியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது கடைசி நேரத்தில் நழுவி விட்டது. சரி, அடுத்த படத்திற்கு வருவோம். தமிழ் சினிமாவின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திய படம். நம்மால் என்றுமே மறக்க முடியாத படம். ஆம், சங்கர், கண்ணன், விஜய் இந்த ம...