Posts

Showing posts with the label சம்பல்

ஒரு கொள்ளைக்காரி பாராளுமன்றத்திற்கு சென்ற வீர வரலாறு பூலான்தேவி ஒரு சரித்திரம் பிறப்பு ஆகஸ்ட் 10,1963

Image
ஒரு கொள்ளைக்காரி பாராளுமன்றத்திற்கு சென்ற வீர வரலாறு  பூலான்தேவி ஒரு சரித்திரம் பிறப்பு ஆகஸ்ட் 10,1963 பூலான் தேவி (Phoolan Devi, ஆகத்து 10, 1963 - சூலை 25, 2001),  கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பிறப்பும் இளமையும்[தொகு] பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள்.  மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது.  பூலான்தேவிக்கு 4 சகோதரிகள்.  11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது.  கணவன் பெயர் புட்டிலால்.  பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன்.  ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலு...