Posts

Showing posts with the label BRIBELESS

NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER BRIBELESS POLITICIAN BORN 1925 DECEMBER 25

Image
NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER ,BRIBELESS POLITICIAN  BORN 1925 DECEMBER 25 ஸ்ரீ வைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் (26.12.1925) நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ பக்தர். அப்பா வழியில் சைவ உணவுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948 - 49-களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் சாப்பிடத் தொடங்கினார். பின்னாளில் மீன் பிரியராக மாறிவிட்டார்! ஸ்ரீ வைகுண்டம் கார்னேசன் (இன்றைய கேஜிஎஸ்) பள்ளியில் படித்தவர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார். ஆயுதப் போராட்டம்தான் புரட்சியைக் கொணர முடியும் என்று கருதிச் செயல்பட்ட காலம் அது. 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியி...