Showing posts with label 1878. Show all posts
Showing posts with label 1878. Show all posts

Saturday, 6 March 2021

JOSEPH STALIN BIOGRAPHY 1878 DECEMBER 18 - 1953 MARCH 5

 JOSEPH STALIN  BIOGRAPHY 

1878 DECEMBER 18 - 1953 MARCH 5




ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, ஜோர்ஜிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878[1] - மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.



வரலாறு

ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார். இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பது இவருடைய இயற்பெயராகும்.[2] இவர் டிசம்பர் 6, 1878 இல் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார்.[3]


ஜார்ஜியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்ஜிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார். அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று வழிநடத்தி வந்திருக்கின்றார். இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் காணப்பட்டது.[3]



பதின் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயிலத் தொடங்கினார். அங்கு இவருக்கு, கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனைகளை கற்கும் சூழல் அமைந்தது. மார்க்சியக் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, உடன் அங்கிருந்த உள்ளூர் பொதுவுடைமைக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். அக்கால கட்டத்தில் சோவியத் நாட்டை ஆட்சி புரிந்துவந்த சிஸர் நிக்கோலஸ்-II என்பவரின் ஆட்சிக்கு எதிராக, அப்போது ரஷ்யாவில் பல்வேறு குழுக்களின் மனநிலை நிலவியது. சிஸர் நிக்கோலஸ்-II வின் முதலாளித்துவம், தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் ரஷ்யாவை வலிந்து ஈடுபடுத்திய செயல் போன்றவை மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கி இருந்திருக்கிறது. பட்டம் பெற சில மாதங்கள் இருந்த நிலையில், 1899 இல், புரட்சிக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேறும சூழ்நிலை ஏற்பட்டது. கி.பி. 1900 இல் ஸ்டாலின், ஒரு புரட்சியாளராக, சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.



அதன்பின்னர், தலைமறைவு புரட்சிக்குழுவினருடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலாகக் காவலர்களால் 1902 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 1903 ஆம் ஆண்டு வரை சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக நடந்த ரஷ்யப்புரட்சி(1905) யின்போது புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் போல்ஷ்விக்சின் (Bolsheviks) தலைமைப் பணியைச செவ்வனே செய்தார் ஸ்டாலின். இதற்கிடையில், 1902-1913 கால கட்டத்தில் ஸ்டாலின் பலமுறை சிறைக்குச் சென்றும், அச்சிறையிலிருந்து ஆறு தடவைத் தப்பிப் பிழைத்ததும் நடந்தேறி உள்ளன. இதனிடையில், தன்னுடன் இறையியல் கல்விக் கூடத்தில் படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினா என்னும் பெண்ணைக் காதலித்து 1904 இல் திருமணம் புரிந்தார்.[3]


கி.பி.1905 இல் லெனினை ஸ்டாலின் முதன் முதலில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் திறமைகள் பற்றி அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார். அதற்குப்பின் பல சமயங்களில் ஸ்டாலின் நடத்தி முடித்த கொள்ளைகள் மூலம் போல்ஷ்விக்சின் பொருளாதாரத்தை உயர்த்த உதவி உள்ளார். 1912 இல் லெனினின் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ப்ரவ்டா (Pravda) வின் செய்தியாசிரியராக (Editor) நியமனம் செய்யப்பட்டார். அதன்பின், அதே 1912 ஆம் ஆண்டில் போல்ஷ்விக்சின் மத்தியக் குழுவில் ஸ்டாலின் உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபராக உருவாக்கப்பட்டார். அவர் செய்தியாசிரியராக பணியாற்றியபோது தாம் எழுதிய முதல் புரட்சிக் கட்டுரையின் முடிவில் ஸ்டாலின் என்னும் புனைப்பெயரில் கையெழுத்திட்டதன் மூலமாக ஜோசப் ஸ்டாலின் எனும்பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.[3]


பதவியேற்றல்

1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் ஸ்டாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். ஸ்டாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர சமூகத்தினரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை ஸ்டாலின் எதிர்த்ததுடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார்.[4] ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி ஸ்டாலினே ஆட்சியை பிடித்தார்.



மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)

1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.


இந்த இரண்டு திட்டங்களின் விளைவாகப் பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.


மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.


இறப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. மார்ச் 5,1953 ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.[

Monday, 21 October 2019

FAMINE IN BRITISH INDIA 1876-78




FAMINE IN  BRITISH INDIA 1876-78

Map of the British Indian Empire
(1880), showing the different 
provinces
 and native states, including those
affected by the Great Famine of 1876–1878.


The Great Famine of 1876–1878 (also the Southern India famine of 1876–1878 or the Madras famine of 1877) was a famine in India under Crown rule. It began in 1876 after an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It affected south and southwestern India (the British presidencies of Madras and Bombay, and the princely states of Mysore and Hyderabad) for a period of two years. In its second year famine also spread northward to some regions of the Central Provinces and the North-Western Provinces, and to a small area in the Punjab.[2] The famine ultimately covered an area of 670,000 square kilometres (257,000 sq mi) and caused distress to a population totalling 58,500,000.[2] The death toll from this famine is estimated to be in the range of 5.5 million people.[3

Preceding events
Grain destined for export stacked
on Madras beaches (February 1877).

Grain destined for export stacked on Madras beaches (February 1877).
In part, the Great Famine may have been caused by an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It was part of a larger pattern of drought and crop failure across India, China, South America and parts of Africa caused by an interplay between a strong El Niño and an active Indian Ocean Dipole that led to between 19 and 50 million deaths.[4]

The regular export of grain by the colonial government continued; during the famine the viceroy, Lord Lytton, oversaw the export to England of a record 6.4 million hundredweight (320,000 tons) of wheat, which made the region more vulnerable. The cultivation of alternate cash crops, in addition to the commodification of grain, played a significant role in the events.[5][6]
Engraving from The Graphic,
October 1877, showing two forsaken
children in the 
Bellary district
of the 
Madras Presidency.

The famine occurred at a time when the colonial government was attempting to reduce expenses on welfare. Earlier, in the Bihar famine of 1873–74, severe mortality had been avoided by importing rice from Burma. The Government of Bengal and its Lieutenant-Governor, Sir Richard Temple, were criticised for excessive expenditure on charitable relief.[7] Sensitive to any renewed accusations of excess in 1876, Temple, who was now Famine Commissioner for the Government of India,[2] insisted not only on a policy of laissez faire with respect to the trade in grain,[8] but also on stricter standards of qualification for relief and on more meagre relief rations.[2] Two kinds of relief were offered: "relief works" for able-bodied men, women, and working children, and gratuitous (or charitable) relief for small children, the elderly, and the indigent.[9]

Famine and relief
Engraving from The Graphic,
October 1877, showing the plight of
animals as well as humans in Bellary district.

Engraving from The Graphic, October 1877, showing two forsaken children in the Bellary district of the Madras Presidency.

Engraving from The Graphic, October 1877, showing the plight of animals as well as humans in Bellary district.

People waiting for famine relief in Bangalore. From the Illustrated London News (20 October 1877).

A contemporary print showing the distribution of relief in Bellary, Madras Presidency. From the Illustrated London News (1877).

Famine stricken people during the famine of 1876-78 in Bangalore.
People waiting for famine relief
 in 
Bangalore. From the Illustrated
London News
 (20 October 1877).

The insistence on more rigorous tests for qualification, however, led to strikes by "relief workers" in the Bombay presidency.[2] In January 1877, Temple reduced the wage for a day's hard work in the relief camps in Madras and Bombay[10]—this 'Temple wage' consisted of 450 grams (1 lb) of grain plus one anna for a man, and a slightly reduced amount for a woman or working child,[11] for a "long day of hard labour without shade or rest."[12] The rationale behind the reduced wage, which was in keeping with a prevailing belief of the time, was that any excessive payment might create 'dependency' (or "demoralisation" in contemporaneous usage) among the famine-afflicted population.[10]

Temple's recommendations were opposed by some officials, including William Digby and the physician W. R. Cornish, Sanitary Commissioner for the Madras Presidency.[13] Cornish argued for a minimum of 680 grams (1.5 lb) of grain and, in addition, supplements of vegetables and protein, especially if the individuals were performing strenuous labour in the relief works.[13] However, Lytton supported Temple, who argued that "everything must be subordinated to the financial consideration of disbursing the smallest sum of money."[14]
A contemporary print showing the
distribution of relief in 
BellaryMadras Presidency.
From the 
Illustrated
London News
 (1877).

In March 1877 the provincial government of Madras increased the ration halfway towards Cornish's recommendations, to 570 grams (1.25 lb) of grain and 43 grams (1.5 oz) of protein in the form of daal (pulses).[13] Meanwhile, many more people had succumbed to the famine.[15] In other parts of India, such as the United Provinces, where relief was meagre, the resulting mortality was high.[15] In the second half of 1878, an epidemic of malaria killed many more who were already weakened by malnutrition.[15]

By early 1877, Temple proclaimed that he had put "the famine under control". Digby noted that "a famine can scarcely be said to be adequately controlled which leaves one-fourth of the people dead."[14]

All in all, the Government of India spent Rs. 8 1/30 million in relieving 700 million units (1 unit = relief for 1 person for 1 day) in British India and, in addition, another Rs. 7.2 million in relieving 72 million units in the princely states of Mysore and Hyderabad.[15] Revenue (tax) payments to the amount of Rs. 6 million were either not enforced or postponed until the following year, and charitable donations from Great Britain and the colonies totaled Rs. 8.4 million.[15] However, this cost was minuscule per capita; for example, the expenditure incurred in the Bombay Presidency was less than one-fifth of that in the Bihar famine of 1873–74, which affected a smaller area and did not last as long.[12]
Famine stricken people
during the famine of 1876-78 in Bangalore.


Famine in Mysore State
Two years before the famine of 1876, heavy rain destroyed ragi crops (a type of millet) in Kolar and Bangalore. Scant rainfall the following year resulted in drying up of lakes, affecting food stock. As a result of the famine, the population of the state decreased by 874,000 (in comparison with the 1871 census).

Sir Richard Temple was sent by the British India Government as Special Famine Commissioner to oversee the relief works of the Mysore government. To deal with the famine, the government of Mysore started relief kitchens. A large number of people journeyed to Bangalore, when relief was available. These people had to work on the Bangalore-Mysore railway line in exchange for food and grains. The Mysore government imported large quantities of grain from the neighbouring British ruled Madras Presidency. Grazing in forests was allowed temporarily, and new tanks were constructed and old tanks repaired. The Dewan of Mysore State, C. V. Rungacharlu, in his Dasara speech estimated the cost to the state at 160 lakhs, with the state incurring a debt of 80 lakhs.[16]

Aftermath
The mortality in the famine was in the range of 5.5 million people.[3] The excessive mortality and the renewed questions of "relief and protection" that were asked in its wake, led directly to the constituting of the Famine Commission of 1880 and to the eventual adoption of the Indian Famine Codes.[15] After the famine, a large number of agricultural labourers and handloom weavers in South India emigrated to British tropical colonies to work as indentured labourers in plantations.[17] The excessive mortality in the famine also neutralized the natural population growth in the Bombay and Madras presidencies during the decade between the first and second censuses of British India in 1871 and 1881 respectively.[18] The famine lives on in the Tamil and other literary traditions.[19] A large number of Kummi folk songs describing this famine have been documented.[20]

The Great Famine had a lasting political impact on events in India. Among the British administrators in India who were unsettled by the official reactions to the famine and, in particular by the stifling of the official debate about the best form of famine relief, were William Wedderburn and A. O. Hume.[21] Less than a decade later, they would found the Indian National Congress and, in turn, influence a generation of Indian nationalists. Among the latter were Dadabhai Naoroji and Romesh Chunder Dutt for whom the Great Famine would become a cornerstone of the economic critique of the British Raj.[21]

In his book Late Victorian Holocausts, Mike Davis called the famine a "colonial genocide" perpetrated by Great Britain.[how?] Some, including Niall Ferguson, dispute this judgement,[how?] while others, including Adam Jones, affirm it.[how?][22][23][undue weight? – discuss]

See also
Famines, Epidemics, and Public Health in the British Raj
Timeline of major famines in India during British rule
Company rule in India
Famine in India
Drought in India
Great Famine (Ireland)
Bengal famine of 1943
El Niño-Southern Oscillation
William Digby
Late Victorian Holocausts
Northern Chinese Famine of 1876–79

Great Eastern Crisis



Thursday, 8 March 2018

Minnie Ashley Biography: (1878-1946 june 1946)








Minnie Ashley Biography: 

(1878-1946 june 1946)


One of the great beauties of the stage at the end of the 19th century, Minnie Ashley's talents as a singer and dancer emerged in the madcap musical "1492" in 1892. 

An actress whose triumphs took place as much in Boston with the Museum Company as in New York with the Augustin Daly Company, Ashley was winsome, cheerful, and quick. She went from success to success, winning stardom as Mlle. Sophie in "A Country Girl." 

Her rather startling beauty had the odd effect of giving focus to the shenanigans in the more outré musical comedies of the turn of the century--"Wang" and "San Toy."

Just as she achieved stardom infrared necrosis of her eyes caused by prolonged exposure to theatrical arc lights caused her sight to degrade. In 1902 she quit the stage, married politician William Astor Chanler (the wealthy grandson of John Jacob Astor), and visited occulists in the hope of restoring her vision. 

Fearing the progressive degradation of her eyes, she took to the tactile art of sculpture. Chanler and Ashley separated amicably in 1909 when William decided to reside in Paris while Ashley remained in America to raise Chanler's two sons.

In 1911, after a decade's absence from the stage, Ashley tried her hand at acting again, revisiting "A Country Girl." But sculpture proved a more congenial art thereafter. She worked under the name Beatrice Ashley Chanler.

 Philanthropy greatly occupied her in later life. Her birthday is incorrectly given as 1886 in some sources.










Sunday, 10 December 2017

RAJAJI ALIAS RAJA GOPALACHARI ,FORMER CHIEF MINISTER OF TAMILNADU , BORN 1878 DECEMBER 10



RAJAJI ALIAS RAJA GOPALACHARI ,FORMER CHIEF MINISTER OF TAMILNADU ,
BORN 1878 DECEMBER 10





சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்
வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.[3] ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், சா. கணேசன், ராஜாஜி, பாகனேரி பில்லப்பா, காமராஜர், ரா. கிருஷ்ணசாமி நாயுடு







இந்திய விடுதலை இயக்கம்

குடும்பம்[மூலத்தைத் தொகு]
ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார்.
வகித்த பதவிகள்[மூலத்தைத் தொகு]


1948 இல் பொது நிகழ்ச்சி ஒன்றில்
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
பாரத ரத்னா[மூலத்தைத் தொகு]
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
இலக்கியம்[மூலத்தைத் தொகு]
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. .
இந்தி திணிப்பு[மூலத்தைத் தொகு]
1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். [4]
மதுவிலக்கு[மூலத்தைத் தொகு]
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டா என கேட்டுக்கொண்டார். [5]
நினைவுச் சின்னங்கள்[மூலத்தைத் தொகு]

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் இராசாசியின் சிலை
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது




ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”
இராட்டை / பிப்ரவரி 22, 2016
வைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.


g9ராஜாஜி தனது மகன் நரசிம்மன்(15) ,மகள் லட்சுமி(12) மற்றும் 15 ஆசிரமவாசிகளுடன் குடில் அமைத்து ஆசிரமப் பணிகளைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்ட மதுரை N.நடராஜன் ஆசிரம மேலாளராகவும் 1920 முதல் ராஜாஜியின் சீடராக அறியப்பட்ட க.சந்தானம் காதி பணிகளுக்கான மேலாளராகவும் பொறுப்பேற்றார்கள். “காந்தி ஆசிரமம்” ஒரு முன்மாதிரியாக சமூக மாற்றத்திற்கான வித்தாக தீண்டாமை ஒழிப்பு,மது ஒழிப்பு மற்றும் காதியை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. P.S.ராமதுரை, R.கிருஷ்ணமூர்த்தி N.S. வரதாச்சாரி போன்ற ராஜாஜியின் சீடர்களும் அவருடன் இணைத்தார்கள். ஆசிரமவாசிகளில் 5 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரமவாசிகளுடன் ஒன்றாக உணவருந்தி ஒரே கூரையின் கீழ் வசித்ததால் சுற்றியிருக்கும் கிராமத்தாரின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துக் கொண்டார்கள்.பால்,காய்கறி வரத்து அடியோடு நிறுத்துப்பட்டது. ரகசியமாக ஒருவர் பால் கொண்டுவந்து கொடுத்து உதவினார். ஆசிரமத்தை கொளுத்த ஏற்பாடு நடப்பதாக ஒரு புரளி ராஜாஜியின் காதுக்கு எட்டியது.தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரமவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரத்னசபாபதி கவுண்டரின் உதவியுடன் நிலைமையை சமாளித்தார்கள்.

Shri. Rathna Sabapathy Gounder


அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று மது விலக்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார் ரத்னசபாபதி கவுண்டர். வீரன் என்றொரு செருப்பு தைக்கும் தொழிலாளி குடி போதையில் அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி ராஜாஜியிடம் வந்து அழுது புலம்பினார். ராஜாஜியும் அவரை கூப்பிட்டு விசாரித்தார். தான் மனைவியை அடிக்கவில்லை என்று பொய்யுரைத்தார் வீரன். செருப்பை எடுத்து அவர் கையில் கொடுத்த ராஜாஜி தொழில் மீது சத்தியம் செய்யச் சொன்னார். தவறை உணர்ந்த வீரன் அவரிடம் இனி குடிப்பதில்லை என சத்தியம் செய்தார். மனம் திருந்தி சாகும் வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த வீரனை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவிற்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி. அவரிடம் செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

அருகில் வசித்த பட்டியல் சாதியினரின் குடியிருப்புகளுக்கு புதிதாக கிணறு வெட்டி கொடுத்தார்கள். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று சுத்தப்படுத்தினார்கள். பிள்ளைகளுக்கு கல்வி போதித்தார்கள்.பட்டியல் சாதியைச் சார்ந்த சின்னான் என்பவரைச் சமையலுக்கு அமர்த்தினார்கள். ஆசிரமவாசிகளில் சகன் என்ற முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரும் இருந்தார்.


அங்கமுத்து என்கிற பட்டியல் சாதி ஆசிரமவாசியை மசூலிப்பட்டினம் அனுப்பி காதி – அச்சு வரைகலை கற்றுக் கொள்ளவைத்தார் ராஜாஜி.அவரது மூத்த மகனை லயோலா கல்லூரியில் படிக்க வைத்தார். அவருக்கு இந்திய தபால் துறையில் வேலை கிடைத்து.நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அங்கமுத்துவின் மகளை கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார் ராஜாஜி.

ho_1பட்டியல் சாதியைச் சார்ந்த செவி குறைபாடுள்ள ஒருவரை அதற்கென உள்ள விசேசப் பள்ளி சேர்த்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அந்த மாணவனுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். காதி வேலை தெரிந்த பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தார். மூன்று குழந்தைகளுடன் நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். புது தையல் இயந்திரம் வாங்க வசதி இருந்தும் ராஜாஜி கொடுத்த பழைய இயந்திரத்தையை இறுதி வரை பயன்படுத்தினார்.

ஆசிரமம் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் அருகில் இருந்த இருவதற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பஞ்சில் இருந்து நூல் நூற்பதன் மூலம் மாதத்திற்கு ரூ ஒன்றரை வரை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 1925 க்குள் எழுவதற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காதி துணி தயாரிப்பில் மும்முரமாக இறங்கினார்கள்.

மொலிபள்ளி கிராமத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்காக திருசெஞ்கோடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கிராமத்தினர் துன்புறுத்தப்பட்டார்கள். காவல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 200 வரை மிரட்டி கையூட்டு பெற்ற பின்பே விடுவித்தனர். கிராம மக்கள் ராஜாஜியை சந்தித்து முறையிட்டனர். அம்மக்கள் சார்பாக ராஜாஜி முறைப்படி மேலதிகாரிகளுக்கு புகார் அளித்ததன் பெயரில் கையூட்டாக பெற்ற தொகை திருப்பி அளிக்கப்பட்டதோடு நில்லாமல் காவல் நிலைய அதிகாரிகள் நிபந்தனை அற்ற மன்னிப்பும் கோரினார்கள்.

டிசம்பர் 1925 இல் திருப்பதியின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூர் ஆலயத்தில் நுழைந்த முருகேசன் என்கிற பஞ்சமர் (மாலா) ஒருவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் IPC 295 சட்டப்படி ஒரு மாதக்கடுங்காவல் தண்டனையோ அல்லது 75.ரூபாய் அபராதமோ கட்டவேண்டிய கொடுமையான சூழலில் அவர் சிக்கியிருந்தார். சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் ராஜாஜி பங்கேற்க வந்தார். தன்னுடைய ஒத்துழையாமை சபதத்துக்குப் பங்கம் வராமல் தோள்கள், தலை ஆகியவற்றைக் கதர் துணியால் மூடிக்கொண்டு வந்திருந்த அவர் வழக்கறிஞர் ஆடையை அணியவில்லை.

நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பராக வழக்கில் வாதாட அனுமதி பெற்றார். ‘குற்றஞ்சாட்டப்பட்டவர் இறைவனைத் திருடிக்கொண்டு போனார். தன்னுடைய இதயக்கூடையில் இறைவனை அளவில்லா அன்போடு கொண்டு சென்றது எப்படித் தவறாகும்? பத்தாண்டுகளாகக் கோயிலுக்கு வெளியே நின்று தேங்காய் உடைத்துக் கொண்டிருந்த அவர் இந்த முறை பக்தி மேலீட்டால் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். கோயில் நிர்வாகமே எதிர்த்தாலும், தன்னுடைய உரிமையை அவர் பறித்துக்கொள்வது தவறாகாது.’ என்று ராஜாஜி கம்பீரமாக வாதிட்டார். அவர் ஆலயத்துக்குள் சென்றது தவறில்லை என்றாலும், சட்டப்படி ஆலய நுழைவு செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி மதத்துக்கு எந்த அவமானமும் அவரால் உண்டாகவில்லை என்று சொல்லி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்தச் சம்பவத்தை ஒட்டி ராஜாஜி அந்தப் பக்தர் பாடுவதாக எழுதியது தான்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 
கோவிந்தா கோவிந்தா




ஆதாரம் ::
1) Rajaji and Gandhi – B.K.Ahluwalia ,Shashi Ahluwalia
2) Rajaji (A Study of his Personality) Vol I – Masti Venkatesa Iyengar
3) The Rajaji Story Vol I (A Warrior From The South) – Rajmohan Gandhi
4) Rajaji’s unknown collaborator – Gopal Krishna Gandhi
5) The Crime of Caste – Young India, 14-1-1926
6) Still shirking the issue – Young India, 11-3-1926
7) In the footsteps of Rajaji... R. Varadarajan of Gandhigram 
8) The ‘Tiruchengodu CR’ Gopal Krishna Gandhi 
9) Rajaji : A Life – Rajmohan Gandhi
10) Gandhi : The Man ,His People and the Empire – Rajmohan Gandhi

11) Ashram Website http://www.tcdgashram.com/



ராஜாஜி அவர்களால்தான் திராவிட நாட்டில் சமபந்தி போஜனம் என்பதும், அதைவிடத் தீவிரமான சாதிபேதம் என்பதே இல்லாமல் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மையும் ஏற்பட்டது. நான் அறிய இராஜாஜி அவர்கள் 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன் சமபந்தி போஜனம் செய்வார்; 1915-ல் பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார். இது அவருக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்ட சாதனை என்றாலும், காங்கிரசிலேயே எல்லாப் பார்ப்பனர்களும் சமபந்தி போஜனம் அருந்தும்படி செய்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனத்தில் நம்பிக்கை இல்லாத காலத்திலேயே, யார் வீட்டிலும் யாருடனும் இருந்து உணவு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தினார். காங்கிரசில் பெரிய தீவிர தேசபக்தர், மகா தியாகி என்று சொல்லப்பட்ட வ.வே. சுப்ரமணிய அய்யர் என்கிற (போலி) தேசபக்தர் வருணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண் டிருந்த காலத்தில், காங்கிரசில் தான் மாத்திரம் அல்லாமல் அனேக பார்ப்பனரையும், பார்ப்பன  இளைஞரையும் யாருடனும் யார் வீட்டிலும் உணவு அருந்தச் செய்தார்,இராஜாஜி. எது எப்படி இருந்தாலும், சமுதாயத் துறையில், இம் மாபெரும் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத்தான் உண்டு. அதுமாத்திரம் அல்ல. கலப்புத் திருமணம் என்னும் தன்மையைத் துணிந்து ஆதரித்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். 1920-ல் என்று கருதுகிறேன்; அருண்டேல் – ருக்குமணி அம்மையார் விவாகத்தைப் பார்ப்பனச் சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்த்த காலத்தில் இராஜாஜி அவர்கள் அதை ஆதரித்தார்; மற்றும், தனது பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம் செய்து கொடுத்தார். ஆகவே, சமுதாயத் துறையில் மாபெரும் சீர்திருத்தம் செய்தவர் இராஜாஜியே ஆவார். இந்தக் காரணங்களால் இராஜாஜி அவர்கள் சென்னைப் பார்ப்பனர்களான கஸ்தூரி ரங்க அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் முதலிய-பார்ப்பன ஆதிக்கப் பணிக்காகவே வாழ்ந்த பார்ப்பனக் கும்பலுக்கு எதிரியாக இருந்தார்.

Wednesday, 20 September 2017

THE HINDU NEWS PAPER STARTED 1878 SEPTEMBER 20


THE HINDU NEWS PAPER  STARTED 
 1878 SEPTEMBER 20



தி இந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். [2] 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது

வரலாறு[மூலத்தைத் தொகு]

இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society - TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.[3]

1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. 


இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.[4]

விற்பனையும் பதிப்புகளும்[மூலத்தைத் தொகு]

இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.[5][6]
நிர்வாக இயக்குனர்கள்[மூலத்தைத் தொகு]

இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர்.[7]

சார்பு நிலைகள்[மூலத்தைத் தொகு]
இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும்[8] மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும்,[9] வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-இலங்கை நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான நரசிம்மன் ராம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.[10]

குழும இதழ்கள்[மூலத்தைத் தொகு]

தி இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்
பிசினஸ் லைன் (பொருளியல் மற்றும் வணிக இதழ்)
இந்து சர்வதேசப் பதிப்பு (வார இதழ்)
ஸ்போர்ட்ஸ்டார் (விளையாட்டு செய்திகள் வார இதழ்)
ஃப்ரன்ட்லைன் ( மாதம் இருமுறை வெளியாகும் அரசியல், சமூக இதழ்)
ப்ராக்சிஸ் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் மேலாண்மை இதழ்)
எர்கோ இணைய இதழ்
தி இந்து (தமிழ் நாளிதழ்)