Sunday, 10 December 2017

RAJAJI ALIAS RAJA GOPALACHARI ,FORMER CHIEF MINISTER OF TAMILNADU , BORN 1878 DECEMBER 10



RAJAJI ALIAS RAJA GOPALACHARI ,FORMER CHIEF MINISTER OF TAMILNADU ,
BORN 1878 DECEMBER 10





சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்
வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.[3] ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், சா. கணேசன், ராஜாஜி, பாகனேரி பில்லப்பா, காமராஜர், ரா. கிருஷ்ணசாமி நாயுடு







இந்திய விடுதலை இயக்கம்

குடும்பம்[மூலத்தைத் தொகு]
ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார்.
வகித்த பதவிகள்[மூலத்தைத் தொகு]


1948 இல் பொது நிகழ்ச்சி ஒன்றில்
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
பாரத ரத்னா[மூலத்தைத் தொகு]
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
இலக்கியம்[மூலத்தைத் தொகு]
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. .
இந்தி திணிப்பு[மூலத்தைத் தொகு]
1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். [4]
மதுவிலக்கு[மூலத்தைத் தொகு]
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டா என கேட்டுக்கொண்டார். [5]
நினைவுச் சின்னங்கள்[மூலத்தைத் தொகு]

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் இராசாசியின் சிலை
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது




ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”
இராட்டை / பிப்ரவரி 22, 2016
வைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.


g9ராஜாஜி தனது மகன் நரசிம்மன்(15) ,மகள் லட்சுமி(12) மற்றும் 15 ஆசிரமவாசிகளுடன் குடில் அமைத்து ஆசிரமப் பணிகளைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்ட மதுரை N.நடராஜன் ஆசிரம மேலாளராகவும் 1920 முதல் ராஜாஜியின் சீடராக அறியப்பட்ட க.சந்தானம் காதி பணிகளுக்கான மேலாளராகவும் பொறுப்பேற்றார்கள். “காந்தி ஆசிரமம்” ஒரு முன்மாதிரியாக சமூக மாற்றத்திற்கான வித்தாக தீண்டாமை ஒழிப்பு,மது ஒழிப்பு மற்றும் காதியை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. P.S.ராமதுரை, R.கிருஷ்ணமூர்த்தி N.S. வரதாச்சாரி போன்ற ராஜாஜியின் சீடர்களும் அவருடன் இணைத்தார்கள். ஆசிரமவாசிகளில் 5 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரமவாசிகளுடன் ஒன்றாக உணவருந்தி ஒரே கூரையின் கீழ் வசித்ததால் சுற்றியிருக்கும் கிராமத்தாரின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துக் கொண்டார்கள்.பால்,காய்கறி வரத்து அடியோடு நிறுத்துப்பட்டது. ரகசியமாக ஒருவர் பால் கொண்டுவந்து கொடுத்து உதவினார். ஆசிரமத்தை கொளுத்த ஏற்பாடு நடப்பதாக ஒரு புரளி ராஜாஜியின் காதுக்கு எட்டியது.தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரமவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரத்னசபாபதி கவுண்டரின் உதவியுடன் நிலைமையை சமாளித்தார்கள்.

Shri. Rathna Sabapathy Gounder


அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று மது விலக்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார் ரத்னசபாபதி கவுண்டர். வீரன் என்றொரு செருப்பு தைக்கும் தொழிலாளி குடி போதையில் அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி ராஜாஜியிடம் வந்து அழுது புலம்பினார். ராஜாஜியும் அவரை கூப்பிட்டு விசாரித்தார். தான் மனைவியை அடிக்கவில்லை என்று பொய்யுரைத்தார் வீரன். செருப்பை எடுத்து அவர் கையில் கொடுத்த ராஜாஜி தொழில் மீது சத்தியம் செய்யச் சொன்னார். தவறை உணர்ந்த வீரன் அவரிடம் இனி குடிப்பதில்லை என சத்தியம் செய்தார். மனம் திருந்தி சாகும் வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த வீரனை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவிற்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி. அவரிடம் செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

அருகில் வசித்த பட்டியல் சாதியினரின் குடியிருப்புகளுக்கு புதிதாக கிணறு வெட்டி கொடுத்தார்கள். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று சுத்தப்படுத்தினார்கள். பிள்ளைகளுக்கு கல்வி போதித்தார்கள்.பட்டியல் சாதியைச் சார்ந்த சின்னான் என்பவரைச் சமையலுக்கு அமர்த்தினார்கள். ஆசிரமவாசிகளில் சகன் என்ற முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரும் இருந்தார்.


அங்கமுத்து என்கிற பட்டியல் சாதி ஆசிரமவாசியை மசூலிப்பட்டினம் அனுப்பி காதி – அச்சு வரைகலை கற்றுக் கொள்ளவைத்தார் ராஜாஜி.அவரது மூத்த மகனை லயோலா கல்லூரியில் படிக்க வைத்தார். அவருக்கு இந்திய தபால் துறையில் வேலை கிடைத்து.நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அங்கமுத்துவின் மகளை கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார் ராஜாஜி.

ho_1பட்டியல் சாதியைச் சார்ந்த செவி குறைபாடுள்ள ஒருவரை அதற்கென உள்ள விசேசப் பள்ளி சேர்த்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அந்த மாணவனுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். காதி வேலை தெரிந்த பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தார். மூன்று குழந்தைகளுடன் நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். புது தையல் இயந்திரம் வாங்க வசதி இருந்தும் ராஜாஜி கொடுத்த பழைய இயந்திரத்தையை இறுதி வரை பயன்படுத்தினார்.

ஆசிரமம் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் அருகில் இருந்த இருவதற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பஞ்சில் இருந்து நூல் நூற்பதன் மூலம் மாதத்திற்கு ரூ ஒன்றரை வரை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 1925 க்குள் எழுவதற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காதி துணி தயாரிப்பில் மும்முரமாக இறங்கினார்கள்.

மொலிபள்ளி கிராமத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்காக திருசெஞ்கோடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கிராமத்தினர் துன்புறுத்தப்பட்டார்கள். காவல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 200 வரை மிரட்டி கையூட்டு பெற்ற பின்பே விடுவித்தனர். கிராம மக்கள் ராஜாஜியை சந்தித்து முறையிட்டனர். அம்மக்கள் சார்பாக ராஜாஜி முறைப்படி மேலதிகாரிகளுக்கு புகார் அளித்ததன் பெயரில் கையூட்டாக பெற்ற தொகை திருப்பி அளிக்கப்பட்டதோடு நில்லாமல் காவல் நிலைய அதிகாரிகள் நிபந்தனை அற்ற மன்னிப்பும் கோரினார்கள்.

டிசம்பர் 1925 இல் திருப்பதியின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூர் ஆலயத்தில் நுழைந்த முருகேசன் என்கிற பஞ்சமர் (மாலா) ஒருவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் IPC 295 சட்டப்படி ஒரு மாதக்கடுங்காவல் தண்டனையோ அல்லது 75.ரூபாய் அபராதமோ கட்டவேண்டிய கொடுமையான சூழலில் அவர் சிக்கியிருந்தார். சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் ராஜாஜி பங்கேற்க வந்தார். தன்னுடைய ஒத்துழையாமை சபதத்துக்குப் பங்கம் வராமல் தோள்கள், தலை ஆகியவற்றைக் கதர் துணியால் மூடிக்கொண்டு வந்திருந்த அவர் வழக்கறிஞர் ஆடையை அணியவில்லை.

நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பராக வழக்கில் வாதாட அனுமதி பெற்றார். ‘குற்றஞ்சாட்டப்பட்டவர் இறைவனைத் திருடிக்கொண்டு போனார். தன்னுடைய இதயக்கூடையில் இறைவனை அளவில்லா அன்போடு கொண்டு சென்றது எப்படித் தவறாகும்? பத்தாண்டுகளாகக் கோயிலுக்கு வெளியே நின்று தேங்காய் உடைத்துக் கொண்டிருந்த அவர் இந்த முறை பக்தி மேலீட்டால் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். கோயில் நிர்வாகமே எதிர்த்தாலும், தன்னுடைய உரிமையை அவர் பறித்துக்கொள்வது தவறாகாது.’ என்று ராஜாஜி கம்பீரமாக வாதிட்டார். அவர் ஆலயத்துக்குள் சென்றது தவறில்லை என்றாலும், சட்டப்படி ஆலய நுழைவு செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி மதத்துக்கு எந்த அவமானமும் அவரால் உண்டாகவில்லை என்று சொல்லி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்தச் சம்பவத்தை ஒட்டி ராஜாஜி அந்தப் பக்தர் பாடுவதாக எழுதியது தான்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 
கோவிந்தா கோவிந்தா




ஆதாரம் ::
1) Rajaji and Gandhi – B.K.Ahluwalia ,Shashi Ahluwalia
2) Rajaji (A Study of his Personality) Vol I – Masti Venkatesa Iyengar
3) The Rajaji Story Vol I (A Warrior From The South) – Rajmohan Gandhi
4) Rajaji’s unknown collaborator – Gopal Krishna Gandhi
5) The Crime of Caste – Young India, 14-1-1926
6) Still shirking the issue – Young India, 11-3-1926
7) In the footsteps of Rajaji... R. Varadarajan of Gandhigram 
8) The ‘Tiruchengodu CR’ Gopal Krishna Gandhi 
9) Rajaji : A Life – Rajmohan Gandhi
10) Gandhi : The Man ,His People and the Empire – Rajmohan Gandhi

11) Ashram Website http://www.tcdgashram.com/



ராஜாஜி அவர்களால்தான் திராவிட நாட்டில் சமபந்தி போஜனம் என்பதும், அதைவிடத் தீவிரமான சாதிபேதம் என்பதே இல்லாமல் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மையும் ஏற்பட்டது. நான் அறிய இராஜாஜி அவர்கள் 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன் சமபந்தி போஜனம் செய்வார்; 1915-ல் பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார். இது அவருக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்ட சாதனை என்றாலும், காங்கிரசிலேயே எல்லாப் பார்ப்பனர்களும் சமபந்தி போஜனம் அருந்தும்படி செய்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனத்தில் நம்பிக்கை இல்லாத காலத்திலேயே, யார் வீட்டிலும் யாருடனும் இருந்து உணவு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தினார். காங்கிரசில் பெரிய தீவிர தேசபக்தர், மகா தியாகி என்று சொல்லப்பட்ட வ.வே. சுப்ரமணிய அய்யர் என்கிற (போலி) தேசபக்தர் வருணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண் டிருந்த காலத்தில், காங்கிரசில் தான் மாத்திரம் அல்லாமல் அனேக பார்ப்பனரையும், பார்ப்பன  இளைஞரையும் யாருடனும் யார் வீட்டிலும் உணவு அருந்தச் செய்தார்,இராஜாஜி. எது எப்படி இருந்தாலும், சமுதாயத் துறையில், இம் மாபெரும் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத்தான் உண்டு. அதுமாத்திரம் அல்ல. கலப்புத் திருமணம் என்னும் தன்மையைத் துணிந்து ஆதரித்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். 1920-ல் என்று கருதுகிறேன்; அருண்டேல் – ருக்குமணி அம்மையார் விவாகத்தைப் பார்ப்பனச் சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்த்த காலத்தில் இராஜாஜி அவர்கள் அதை ஆதரித்தார்; மற்றும், தனது பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம் செய்து கொடுத்தார். ஆகவே, சமுதாயத் துறையில் மாபெரும் சீர்திருத்தம் செய்தவர் இராஜாஜியே ஆவார். இந்தக் காரணங்களால் இராஜாஜி அவர்கள் சென்னைப் பார்ப்பனர்களான கஸ்தூரி ரங்க அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் முதலிய-பார்ப்பன ஆதிக்கப் பணிக்காகவே வாழ்ந்த பார்ப்பனக் கும்பலுக்கு எதிரியாக இருந்தார்.

No comments:

Post a Comment