Tuesday, 26 December 2017

M.G.R VS SIVAJI







 M.G.R  VS  SIVAJI



எம்ஜியார் -
சிவாஜியின் பனிப்போர் துவங்கிய நாள்

முன்னுரை - 
1940 .1950 களில் தமிழ் சினிமா தொடங்கியது என்றாலும் பாகவதர் காலத்தில் இருந்தே  அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களை வைத்தே படத்தின் ஓட்டம் இருந்தது .பாகவதர் சிறைக்கு  சென்று வந்த பின் அவருடைய படங்கள் ஒரு வாரம் கூட ஓடவில்லை -பின்னர் பி யூ சின்னப்பா ,
ஹொன்னப்ப பாகவதர் ,ரஞ்சன் எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி ,மஹாலிங்கம் இவர்களே நடித்து வந்தனர் 
எம்ஜியாருக்கு பாடல் பாட முடியாததால் கதாநாயக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சிறு சிறு வேடங்களில் ரஞ்சனுடன் கத்தி சண்டை போடும் சிப்பாய் ,சிவன் வேடம் என்று நடித்து வந்தார் 

விரைவில் டப்பிங் குரல் கண்டு பிடிக்கப்பட்டதால் 1948 இல் ராஜகுமாரியில் கதாநாயகனாக நடித்தார் . வெற்றி .ஆனால் அந்த வெற்றி நெடுநாள் நிலைக்கவில்லை .காரணம்.பாபநாசம் சிவனின் அண்ணன்
மகள் ஜானகியை காதலித்து அவருடைய மகனோடுகுடித்தனம் நடத்தினார் .இதனால் அவருடைய  படங்கள் சுமாரான நிலையிலும் ,தோல்வியிலும் முடிந்தன .


அப்போதுதான் சிவாஜி பராசக்தியில் நடிக்க ஆரம்பித்தார் .ஆனாலும் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் வில்லனாக  வந்து நின்றார் . நொட்டை சொற்கள் சொல்ல ஆரம்பித்தார் .கதாநாயகன் ஒல்லி . குரல்இ சரியில்லை என்கிறார் .
ஆனால் முக்கிய பாகஸ்தர் எஸ் ஐ பெருமாள் சிவாஜி தான் கதாநாயகன் என்பதில் உறுதியாய் இருந்தார் .விளைவு 1952 அக்டோபர் 31 ரிலீஸ் ஆகியது

அந்த நேரத்தில் சிவாஜிக்கு போட்டியாக ஒரு கதையில் நடிக்க எம்ஜியார் ஆசைப்பட்டார் .அப்போது என் தங்கை என்ற நாடகத்தில் குருட்டு பெண்ணின் அண்ணனாக சிவாஜி நடித்து வந்தார்  அந்த நாடகம் நிறுத்தப்பட்டு அந்த பாத்திரத்தில் எம்ஜியார் நடித்தார் .சிவாஜியும் மனமகிழ்ந்து ஒப்புக்கொண்டார் 
மேலும் சிவாஜி வராமல் எம்ஜியாருக்கு சாப்பாடு கூட சாப்பாடு கூட போட மாட்டார் அன்னை சத்யா .அந்த அளவு  பிரியம் வைத்திருந்தார் . 

கண்ணதாசன் கூட கலைஞர் வீட்டில் அஞ்சுகம் அம்மையார் கையில் சாப்பிட்டு அங்கேயே தூங்கியிருக்கார் .அந்த காலத்து நட்புகள் கொள்கையினை தாண்டி சாகா வரம் பெற்றவை

சினிமாவில் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமென்றால் திருமணம் செய்து மரியாதைக்குரிய மனிதர் ஆகி விட வேண்டும் என்ற எழுதாத சட்டம் .அப்போது சிவாஜி தன்னோடு நடிக்கும் நடிகையும் பாடகியுமான ஒருவர் மீது காதல் கொண்டிருந்தார் .பராசக்தி படம் வெளிவரும்போது இந்த அவப்பெயர் 
வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்ததால் இந்த திருமணம் சுவாமிமலையில் நடைபெற்றது

அப்போது தான் எம்ஜியார் நடித்த அந்தமான் கைதி திரைப்படம் வெளி வந்தது கராச்சியில் இருந்து 1947 இல் புலம் பெயர்ந்த ஒரு தமிழன் எவ்விதம் தன் சொந்தங்களினால் வஞ்சிக்கப்படுகிறான் . என்பதை விவரிக்கும் படம் .கடைசியில் கொடுமை பொறுக்க மாட்டாமல் வில்லனை கொன்று விட்டு அந்தமான் கைதி ஆகிறார் இதில் சில இடங்களில் கோட்டு போட்டு வருவார் .இந்த படம் பெரும் தோல்வியில் முடிந்தது

திருமணம் முடிந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எம்ஜியாரிடம் என்னன்னே ! உங்க கத்தி வீச்சுக்கு எவ்வளவு மதிப்பிருக்கு - நீங்க போயி ...
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ..என்று சாதாரணமாக தான் சொன்னார் 
-
எம்ஜியாரின் முகம் மாறியது .பின்னர் கண்ணதாசனிடம் பாத்திங்கலானே !
-
கணேசு என்ன சொல்லிட்டு போதுன்னு ...இருக்கட்டும் ..எனக்கும் ஒரு காலம் வரும்னே ! என்கிறார் 
-
1961 இல் சின்னப்பா தேவரிடம் சத்தியம் வாங்கி கொண்டார் 
-
நீங்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் எடுங்கள் 
ஆனால் சிவாஜியை மட்டும் வைத்து எடுக்க கூடாது 
-
தேவர் தன் வாக்கை காப்பாற்றினார்

அப்புறம் 1954 இல் கூண்டுக்கிளியில் எம்ஜியார் கதாநாயகன் சிவாஜி வில்லன் கதாநாயகி ராமண்ணாவின் மனைவி பி எஸ் சரோஜா .

இந்த படத்திலும் ஒரு பாடலுக்காக இருவரும் இந்த டூயட் எனக்கு தான் வேண்டும் என்றனர் .பார்த்தார் ராமண்ணா

.அந்த பாடலை தன் அடுத்த படமான குலேபகாவலியில் 
சேர்த்து விட்டார் .

மயக்கும் மாலை பொழுதே போ போ ....என்ற பாடலே அது

No comments:

Post a Comment