Thursday 31 October 2019





என். எல். கானசரஸ்வதி ஒரு இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1950 களிலும், 1960 களின் முற்பகுதியிலும் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். அநேகமாக தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள இவர் ஏனைய தென்னிந்திய மொழிப் படங்கள் சிலவற்றிலும் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. அவை திரைப்படங்களில் நடனக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

பாடல்கள்
தமிழ்
பின்வரும் பாடல் விபரங்கள் "திரைக்களஞ்சியம் தொகுதி 1[1] "திரைக்களஞ்சியம் தொகுதி 2[2] ஆகிய நூல்களிலிருந்து திரட்டப்பட்டன.


N. L. Ganasaraswathi is an Indian playback singer who sang mainly in Tamil films and some Telugu and Malayalam films. She was active in the field during the 1950s and early 60s. She sang many songs based on Carnatic music ragas. Most of her songs were used for dance sequences in the films.
Music Directors
The music directors she sang for include G. RamanathanS. V. VenkatramanS. M. Subbaiah NaiduM. D. Parthasarathy, P. S. Anantharaman, K. V. MahadevanV. NagaiahViswanathan-Ramamoorthy, A. Rama Rao, M. S. Gnanamani, G. Govindarajulu Naidu, T. R. Ramnath, Arun, Raghavan, T. R. PappaAswathamaGhantasalaBr Lakshmanan, P. S. Divakar, K. G. Moorthy and T. A. Kalyanam.
Lyricists
She sang songs penned by SurathaM. P. SivamKothamangalam Subbu, Kanakasurabhi, Thandapani, A. Maruthakasi, Kuyilan, T. K. Sundara Vathiyar, Ka. Mu. Sheriff, Kavimani Kavimani Desigavinayagam PillaiBharathidasan, Surabhi, Kavi Lakshmanadas, Shuddhananda BharatiVempati Sadasivabrahmam and V. Seetharaman.
Singers
She has sung with most of the prominent singers of the time.



ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்பாடலாசிரியர்உடன் பாடியவர்/கள்
1951தேவகிஇல்லறம் காப்பதுவேஜி. இராமநாதன்திருச்சி லோகநாதன்
1952அமரகவிஎல்லாம் இன்பமேஜி. இராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
சுரதாஎம். கே. தியாகராஜ பாகவதர்
முல்லைச் சிரிப்பிலேலட்சுமனதாஸ்பி. லீலா
மூக்குத்தி மின்னுது
1952குமாரிநாட்டுக்கு நலம் நாடுவோம்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்
1952மூன்று பிள்ளைகள்உன்னருள் மறவேன் ஐயாபி. எஸ். அனந்தராமன்
எம். டி. பார்த்தசாரதி
கொத்தமங்கலம் சுப்பு
1952தாய் உள்ளம்பூ செண்டு நீவி. நாகையா
ஏ. ராமாராவ்
கனகசுரபிடி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி
1953அன்புவெந்தழலாய் எரிக்கும் வெண்மதியேடி. ஆர். பாப்பாதண்டபாணிஏ. பி. கோமளா
1953மதன மோகினிஆதி முதலானவர்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்ஏ. பி. கோமளா
1953நால்வர்அருள் தாரும் எமதன்னையேகே. வி. மகாதேவன்ஏ. மருதகாசி
1953உலகம்காதலினால் உலகமே இன்பமதேஎம். எஸ். ஞானமணிகுயிலன்திருச்சி லோகநாதன்
கலையே உயிர் துணையே
1954நல்லகாலம்கண்ணாலே காண்பதும்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்
1954பொன் வயல்நம்ம கல்யாணம் ரொம்ப நல்ல கல்யாணம்துறையூர் இராஜகோபால சர்மா
ஆர். இராஜகோபால்
டி. கே. சுந்தர வாத்தியார்டி. ஆர். இராமச்சந்திரன்
1954புதுயுகம்ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்கஜி. இராமநாதன்கா. மு. ஷெரீப்ஜிக்கிஏ. பி. கோமளாஏ. ஜி. இரத்னமாலா
1955கள்வனின் காதலிதமிழ்த் திருநாடு தன்னைப் பெற்றஜி. கோவிந்தராஜுலு நாயுடு
கண்டசாலா
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைஎம். எல். வசந்தகுமாரி
1955நல்ல தங்காள்எவளே அவளேஜி. இராமநாதன்ஏ. மருதகாசி
1955நம் குழந்தைபாலைவனமீதிலே ஜீவநதி போலவேஎம். டி. பார்த்தசாரதிதஞ்சை இராமையாதாஸ்
1955நீதிபதிஆனந்தமே ஆனந்தம்விஸ்வநாதன்-ராமமூர்த்திஏ. மருதகாசிடி. வி. இரத்தினம்
1956கண்ணின் மணிகள்மகேஸ்வரி உந்தன்எஸ். வி. வெங்கட்ராமன்பாபநாசம் சிவன்
வினையோ நின் சோதனையோ
நாயகர் பட்சமடிகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
1956நானே ராஜாஆடற்கலைக்கழகு சேரப் பிறந்தவள்டி. ஆர். ராம்நாத்பாரதிதாசன்பி. லீலா
1956ஒன்றே குலம்மாங்கிளை மேலே பூங்குயில் கூவியதுஎஸ். வி. வெங்கட்ராமன்சுரபிவி. என். சுந்தரம், கே. ராணிஎம். எஸ். இராஜேஸ்வரி, கல்யாணி
1956படித்த பெண்இருள் சூழ்ந்த உலகினிலேஅருண், இராகவன்கவி இலட்சுமணதாஸ்
வாழ்வினிலே காணேனே இன்பம்ஆரூர்தாஸ்
1956ராஜா ராணிஆனந்த நிலை பெறுவோம்டி. ஆர். பாப்பாஎம். கே. ஆத்மநாதன்எம். எல். வசந்தகுமாரி
1956ரம்பையின் காதல்கலைஞானம் உறவாடும் நாடுடி. ஆர். பாப்பாஏ. மருதகாசிபி. லீலா
1957அம்பிகாபதிகண்ட கனவு இன்று பலித்ததேஜி. இராமநாதன்பாலகவி
1957சமய சஞ்சீவிஆனந்தம் தருவது சங்கீதமேஜி. இராமநாதன்ஏ. மருதகாசி(ராதா) ஜெயலட்சுமி
1959மணிமேகலைபழங்கால தமிழரின் வாழ்க்கை நிலைஜி. இராமநாதன்ஏ. மருதகாசிஎம். எல். வசந்தகுமாரி
அவனியில் புது அறநெறியேதிருச்சி லோகநாதன்
1958நாடோடி மன்னன்வருக வருக வேந்தேஎஸ். எம். சுப்பையா நாயுடுசுரதாபி. எஸ். வைதேகி
1959தலை கொடுத்தான் தம்பிதலை கொடுத்தான் தம்பிவிஸ்வநாதன்-ராமமூர்த்திஏ. மருதகாசிஎஸ். சி. கிருஷ்ணன்சீர்காழி கோவிந்தராஜன்
பன்னீரில் தலை முழுகி
"அனைவரும் கருத்துடன்
1960நான் கண்ட சொர்க்கம்இளமை மாறாத இன்பம்அஸ்வத்தாமாபி. லீலா
1961மல்லியம் மங்களம்சிங்கார வேலா விளையாட வாடி. ஏ. கல்யாணம்வி. சீதாராமன்டி. எம். சௌந்தரராஜன்
தெலுங்கு

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்பாடலாசிரியர்உடன் பாடியவர்/கள்
1955கன்யாசுல்க்கம்சரசுடசரிச்சேரா[3]கண்டசாலா

MANOBALA,THE COMEDIAN OF TAMIL/TELUGU CINEMA




MANOBALA,THE COMEDIAN OF 
TAMIL/TELUGU CINEMA

“சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!”

சினிமா

``என் உண்மையான பெயர் பாலசந்தர். இயக்குநர் கே.பாலசந்தரின் ஊரான நன்னிலம் அருகில் இருக்கும் மருங்கூர்தான் என்னுடைய சொந்த ஊர். ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராக ‘ஃபிலிமாலயா’ பத்திரிகையில் எழுதும்போதுதான் பாலசந்தர் என்ற பெயரை ‘மனோபாலா’ என மாற்றிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விகடன் தீபாவளி மலரைத் தவறாமல் வாசித்து வருபவன், இன்று அதே தீபாவளி மலருக்குப் பேட்டி அளிப்பதை, எனக்குக் கிடைத்த கெளரவமாக நினைக்கிறேன்!''-மனோபாலாவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். `ஆகாய கங்கை' முதல் `நைனா' வரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 900-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர். பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலாவிடம் பேசியதிலிருந்து...


“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவில் இல்லை. ஆனால், எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமாமீது காதல். ‘சினிமாவில் சேரப்போகிறேன்’ என்றதும், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அப்போது நான் பெங்களூரில் இருந்த அக்கா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கே குடும்பத்தினர் சேர்த்துவைத்த உண்டியல் காசுதான் அப்போது என் கண்களுக்குத் தெரிந்தது. உண்டியலை உடைத்ததில் 300 ரூபாய் தேறியது. எடுத்துக்கொண்டு ரயில் ஏறிவிட்டேன். சென்னை எனக்குப் புதுசு. சாந்தி தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தேன். அப்போது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ராஜசேகர்தான் என்னைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார். `என்கூட வா. நான் ஓர் இடத்துல உன்னைத் தங்கவைக்கிறேன்' என்று சொல்லி சத்யமூர்த்தி பவனுக்குக் கூட்டிச் சென்று படுக்கவைத்தார். அருகில் இருந்த மிட்லேண்ட் தியேட்டரில் `அடிமைப்பெண்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நைட் ஷோ பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, கையில் காசு குறைவாக இருந்தது.

அடுத்தநாள் காலையில் சென்னையில் இருந்த அக்கா வீடு நினைவுக்கு வர... எப்படியோ அடித்துப் பிடித்து அட்ரஸ் கண்டுபிடித்தேன். அங்கே போனதும், `எப்படிடா தம்பி தனியா இங்க வந்த... வீட்டுக்குச் சொல்லலையா’ என்று அக்கா கேட்டது. `பசிக்குதுக்கா, முதல்ல சோத்தப் போடு' என்று சொல்லிச் சாப்பிட்டு முடித்த பிறகு எல்லாக் கதையையும் சொன்னேன். அதேநேரம், பெங்களூரில் என்னைத் தேட ஆரம்பித்திருந்தார்கள். நான் சென்னைக்கு வந்திருந்தது தெரிந்ததும், இங்கே வந்து தேடத் தொடங்கியிருந்தனர்.

அந்தச் சமயத்தில் என்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட ஒருவர் விபத்தில் இறந்திருந்தார். அவர்தான் நான் என நினைத்துக்கொண்டு என் குடும்பத்தார் கத்திக் கதறியிருக்கின்றனர். பிறகு, அக்கா வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கே
கிளம்பிவந்தார்கள். என் சென்னைப் பயணமும் சினிமாப் பயணமும் இப்படித்தான் தொடங்கியது. பிறகு, சினிமா சார்ந்த நபர்கள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்றேன். அப்படித்தான் பலரின் அறிமுகம் கிடைத்தது. அப்படி நான் முதலில் சந்தித்த நபர், சிவகுமார் அண்ணன். அவரைப் பார்த்து ஆலோசனை கேட்டுத்தான் ஓவியம் படிக்க `காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்'ல் இன்டர்வியூவில் கலந்துகொண்டேன். அடிப்படையில் இருவருமே ஓவியர்கள் என்பதால் என்னை அறியாமல் அவருடன் நெருங்கிவிட்டேன். பிறகு, எப்படியோ நடிகனாகிவிட்டேன். ஆனால், டைரக்‌ஷன் செய்வதற்குள்தான் போதும் போதும் என்றாகிவிட்டது...” என்று சிரிக்கும் மனோபாலா ‘நடிகன்’ அனுபவத்தைச் சொல்கிறார்.

``நடிகனாக `புதிய வார்ப்புகள்’ என் முதல் படம். ஆனால், என்னை முழுநேர நடிகனாக்கிய பெருமை கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் சேரும். அவர்தான் `நட்புக்காக' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ‘இவர் வந்தால், நடந்தால், பேசினால்... என அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது’ என்று கண்டறிந்து நடிகன் வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து இதுவரை 900 படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது நேரடி தெலுங்குப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கில் ‘ரமணா ரெட்டி’ என்ற ஒருவர் இருந்தார். கிட்டத்தட்ட அவரைப் போன்றே நான் இருப்பதால், அங்கேயும் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன். அப்பப்பா... ஒவ்வொரு படத்திலும் எத்தனை அனுபவங்கள்!” என்று பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தவர், தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களைப் பற்றிப் பேசினார்.


``கவுண்டமணி, செந்தில், வடிவேலு... இன்று இவர்களைத் தாண்டி சந்தானம், சூரி, ரோபோ ஷங்கர், யோகி பாபு... என நகைச்சுவை நடிகர்களின் கொடி உயரப் பறக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. அதேசமயம், வடிவேலு தொடர்ந்து நடிப்பதில்லை என்பதில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு. வடிவேலு என்பவர் மிகப் பெரிய கலைஞன். அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கலைஞன். வடிவேலு என்கிற கலைஞன் உருவாகாமல் போயிருந்தால், நம் கவலைகளுக்கெல்லாம் மருந்திட யார் இருந்திருப்பார்கள்? அப்படிப்பட்ட கலைஞன் இன்று தொடர்ந்து படம் செய்யாமல் இருப்பது என்னைப் போன்று உடன் நடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் வேதனையாக இருக்கிறது. வடிவேலு தன் மனத்தடைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டுத் திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை.

அதேபோல்தான் சந்தானம். `ஹீரோ மட்டும்தான் என்று ஒதுங்காமல் காமெடியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியிருந்தால், இன்று அவர் எங்கோ போயிருப்பார். இன்றைய சூழலில் மோஸ்ட் வான்டட் நடிகர் என்றால், அது நம் யோகி பாபுதான். ஆனால், யார் வந்தாலும் போனாலும் எனக்கான இடம் எப்போதும் இருக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம். என் ஒல்லி உருவம், ஸில்க்கி ஹேர்... எல்லா நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்திப்போகிறது என நினைக்கிறேன். அது ஒரு வரம். இந்த ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் தனி ஷாட் வைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்றவரிடம், டைரக்‌ஷன் அனுபவம் பற்றிக் கேட்டோம்.

``நான் டைரக்‌ஷனுக்கு வருவதற்கு முன்னால் கமல்ஹாசன்தான் என்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அப்படித்தான் அவரிடம் உதவி இயக்குநராக 16 படங்களில் வேலை பார்த்தேன். அங்கே வேலை பார்த்த பிறகுதான் இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய `ஊர்க்காவலன்' படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம். ரஜினி, ராதிகா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அந்தப் படப் பாடல்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு. இப்படி ஒவ்வொரு பட ஷூட்டிங்கின்போதும் ஒவ்வோர் அனுபவம். இதோ இப்போது தயாரிப்பாளராக `சதுரங்கவேட்டை-2' படத்தின் ரிலீஸுக்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

சினிமாவை இன்டோரில் இருந்து வெளியே கொண்டுவந்த பாரதிராஜா படங்களைப் பார்த்து வியந்தோம். பாலசந்தரின் வித்தியாசமான படங்களைக் கொண்டாடினோம், தொழில்நுட்பத்தைத் தன் கதைக்குள் கூட்டிவந்த மணிரத்னத்தைப் பாராட்டுகிறோம். இந்திப் படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த தியேட்டர்களில் கிராமிய இசையை ஒலிக்கவிட்ட நம் இளையராஜாவை வாழ்நாளெல்லாம் வாழ்த்துகிறோம். அதேசமயம், ரஹ்மான் என்ற புதுப்புயலைக் கண்டறிந்தோம். இந்தப் பரபர உலகில் இவர்களைப்போல் அரிதான கலைஞர்களே காலத்தைக் கடந்தும் இங்கு தங்குகிறார்கள். அப்படி ஓர் இயக்குநர் தனக்கான தடத்தைப் பதிக்க வேண்டியது மிகமிக முக்கியம். மலரும் நினைவுகளுக்காக எதையாவது செய்துவைத்துவிட்டுப் போகவேண்டும். இவர்களுடன் ஒப்பிடுகையில், நான் குறைவாகப் பங்களித்திருந்தாலும், பங்களித்திருக்கிறேன் என்ற வகையில் சந்தோஷம்” என்றார்.

``பேய்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?'' என்று கேட்டோம். ``தமிழ்நாட்டுக்குப் பேயைத் திறந்துவிட்டதே நான்தான் என்பேன். 1985-ம் ஆண்டு `பிள்ளை நிலா' படம்தான் பக்கா பேய்ப் படம். ஒரே இரவில் அந்தக் கதையை எழுதினேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட பேய்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு பேய் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சீரியலில் நடித்தால் சினிமா வாய்ப்பு கிடைக்குமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். நாசர் இந்தியில வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மனீஷா கொய்ராலா, பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே எனப் பலரும் வெப் சீரிஸ் செய்கிறார்கள். மீடியம் எதுவாகவும் இருக்கலாம். நடிப்பு நடிப்புதானே?! ‘மகா நடிகன்' படத்தில் சத்யராஜ் சாரைப் பார்த்துச் சொன்னதுதான், `என்னைக்கிருந்தாலும் டி.வி சீரியலுக்கு நீங்க வந்தாகணும். பஸ் நிற்குதானு பாருங்க. நின்னா உடனே ஏறிடுங்க. விட்டுட்டீங்கனா, வெறுமனே பஸ் ஸ்டாண்டுல உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அடுத்த பஸ் வரவே வராது!" என்று சொல்லிச் சிரித்தபடி நமக்கு விடை கொடுத்தார்.

- வே.கிருஷ்ணவேணி,

VIJAYAKUMARI ,LEGEND ACTRESS IN TAMIL CINEMA



VIJAYAKUMARI ,LEGEND ACTRESS 
IN TAMIL CINEMA


“நிறைவான வாழ்க்கைக்காக சந்தோஷப்படுகிறேன்!” - விஜயகுமாரி

காப்பியத் தலைவியாக இருந்த கண்ணகியை, தமிழ் மக்கள் பெருவாரியாக அறிய `பூம்புகார்' திரைப்படத்தில் கலைஞரின் வசனம் ஒரு காரணம் என்றால், அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த விஜயகுமாரி மற்றொரு காரணம். தன் அழகுத் தமிழ் உச்சரிப்பால், தமிழ் சினிமா வரலாற்றில் தடம்பதித்தவர். சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், கடற்கரைக்கு அருகே உள்ள வீட்டில் வாழ்க்கையை இனிதே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீட்டின் வரவேற்பறையில், ஆளுயர `கண்ணகி' புகைப்படத்துக்குக் கீழே சாந்தமாக அமர்ந்திருந்தவர், நம்மைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றார்.

சினிமாப் பயணம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடனான காதல், அந்தத் திருமண உறவில் விரிசல், உடன்பிறவா சகோதரர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருடனான அன்பு மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து மனம் திறக்கிறார்.

இளமைக்காலமும் சினிமா ஆர்வமும்!

``பிறந்து வளர்ந்தது கோவை, மேட்டுப்பாளையம். அப்பாவுக்கு மெக்கானிக் வொர்க்‌ஷாப் மற்றும் விவசாயம் பிரதான தொழில்கள். அப்போ சினிமா பார்க்க வீட்டுல நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். எனக்குச் சினிமா பார்க்கிறதில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனா, நடிகர் சிவாஜி கணேசன்மேல ஒரு ரசிகையா அளவில்லா அன்பு வெச்சிருந்தேன். தினசரி பேப்பர்கள்ல வரும் அவரோட போட்டோக்களை கட் பண்ணி நோட்டுல ஒட்டிவெச்சு ரசிப்பேன். நாளடைவில் எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உண்டாச்சு. ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது, `இனி படிக்க விருப்பமில்லை... சினிமாவுல நடிக்கப் போறேன்'னு பெற்றோர்கிட்ட சொன்னேன். ஆனா, அவங்க சம்மதிக்கலை. பல நாள்கள் சாப்பிடாம அடம்பிடிச்சேன். எந்த விஷயத்துக்கும் குடும்ப ஜோதிடர்கிட்ட ஆலோசனை கேட்கிற எங்கம்மா, இந்த விஷயத்திலும் கேட்டாங்க. `நிச்சயம் உங்க பொண்ணு எதிர்காலத்தில் நடிகையாதான் வருவாங்க. அதை யாராலும் மாத்த முடியாது'னு சொல்லியிருக்கார். அப்புறம்தான் அவங்க என் ஆசைக்கு அரை மனதா சம்மதிச்சாங்க.

`குலதெய்வம்' ஹிட்..!

`சினிமாவில் நடிக்கப் புதுமுகம் தேவை'னு ஏவி.எம் நிறுவனத்துல இருந்து ஓர் அறிவிப்பு வெளியானதை ஒருநாள் செய்தித்தாள்ல பார்த்தேன். வீட்டுக்குத் தெரியாம, படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினேன். சென்னை வரச்சொல்லி அழைப்பு வந்துச்சு. அந்த நேரம் எனக்கு 13 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். ஆடிஷன்ல என்னைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ஐயா, `நடிப்பு அனுபவம் இருக்கா? டான்ஸ் தெரியுமா?'னு கேட்டதுக்கு, `தெரியாது'னு சொன்னேன். `அப்போ சினிமாவில் என்ன பண்ணப் போறே?'னு கேட்டார். `எனக்கு ஆசையா இருக்கு'னு சொன்னேன். பிறகு, ஒரு டயலாக் பேப்பர் கொடுத்து மனப்பாடம் பண்ணிப் பேசச் சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல, `ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்'னு அந்த டயலாக்கைச் சரியான உச்சரிப்போடு பேசிக் காட்டினேன். அங்கிருந்த எல்லோரும் எழுந்திரிச்சு கைதட்டிப் பாராட்டினாங்க. உடனே என்னை செலக்ட் பண்ணின செட்டியார் ஐயா, அவங்க நிறுவனத்துல நான் நடிக்க மூணு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டார்.

என் பெற்றோர், அக்கா, தங்கை நால்வரும் எனக்காகச் சென்னைக்கே வர, தனி வீடு எடுத்துத் தங்கினோம். என் முதல் படம், `குலதெய்வம்.' `இந்தப் படத்தில், `பராசக்தி' படத்துல மாற்றுத்திறனாளியா நடிச்சவர்தான் உங்க பொண்ணுக்கு ஜோடி'னு ஏவி.எம் நிறுவன மேனேஜர் வாசுமேனன் சொன்னார். அவர் யார்னு எங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. அவரை நேர்ல பார்த்தப்போ, `ஆளு நல்லா இருக்காரே'னு எங்கம்மா சொன்னாங்க. அவர்தான் என் கணவர், லட்சிய நடிகர், எஸ்.எஸ் ராஜேந்திரன். அந்தப் படம் ஹிட். தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. அதனால, ஒரு வருஷத்துக்குள்ளேயே என்னோட ஒப்பந்தத்தை நீக்கின செட்டியார் ஐயா, எல்லா கம்பெனியிலயும் நடிக்க வாழ்த்து சொன்னார். என் இயற்பெயர், விஜயலட்சுமி. `இளமை நிலைக்கட்டும்' என்ற வாழ்த்தோடு, முதல் பட ஷூட்டிங்கில் என் பெயரை `விஜயகுமாரி’னு மாத்திட்டாங்க.

நட்சத்திரக் காதல்... விரிசல்!

`குலதெய்வம்' படத்தில் என்னோட முதல் காட்சியே, லட்சிய நடிகரும் நானும் முதலிரவில் பேசிக்கிறதுதான். அப்போ `ஆப்பிள் பழம் சாப்பிடு'னு அவர் பேசற டயலாக் வரும். அவர் டயலாக் பேசறதைக் கேட்டுச் சிரிப்பேன். அந்தக் காலகட்டத்தில், என் அம்மா உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாங்க. லட்சிய நடிகரும் அவருடைய குடும்பத்தாரும் எனக்கு ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வர, இரண்டு குடும்பத்துக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுச்சு. அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு. அதை, ஒருநாள் என்கிட்ட சொன்னார். முதலில் நான் ஒதுங்கியே இருந்தேன். `பையனுக்கு உன்மேல பிரியம் இருக்கு. அவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யலாம்னு இருக்கோம். நீ மருமகளா வந்தா நல்லா இருக்கும்'னு அவர் அம்மா ஒருநாள் என்கிட்ட சொன்னாங்க. நானும் சம்மதிச்சேன். `குலதெய்வம்' படம் முடியும் தருணத்தில், வீட்டிலேயே எளிமையான முறையில எங்க கல்யாணம் நடந்துச்சு. `குலதெய்வம்' படத்தின் மூலம், என் வாழ்விலும் ஒரு குலதெய்வம் கிடைத்தார்.

அவர் என்மேல நிறைய அன்பு வெச்சிருந்தார். அவர் சாப்பிடாம, ஒருநாளும் நான் சாப்பிட மாட்டேன். தனியா ஒரு நாடகக் குழு நடத்திட்டு வந்த அவருக்கு, அதில் மனோரமாதான் பிரதான ஜோடி. `குமுதம்' படம் ரிலீஸான நேரம். என் கணவர்கூட நான் நாடகங்கள்லயும் ஜோடியா நடிக்கணும்னு எனக்கு ஆசை வந்துச்சு. அவர்கிட்ட சொன்னேன்; அவரும் ஏற்றுக்கொண்டார். `மணி மகுடம்' நாடகத்துல இருந்து பல நாடகங்கள்ல அவருக்கு ஜோடியா நடிச்சேன். அந்த அளவுக்கு அவர்மேல எனக்குக் காதல்.

தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ-வாக ஆன முதல் தமிழ் சினிமா நடிகர், லட்சிய நடிகர்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால, அறிஞர் அண்ணாதுரையும், என் கணவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாங்க. விடுதலையாகும் வரை, அவங்க ரெண்டு பேருக்கும் தினமும் நியூஸ் பேப்பர், மூக்குப்பொடி, மாத்திரை, மருந்துகளைக் கொண்டுபோய்க் கொடுப்பேன். வீட்டில் தரையில் படுத்து, சாப்பிடாம அழுதுகிட்டே இருப்பேன். அப்போ நான் நடிச்சுக்கிட்டிருந்த `போலீஸ்காரன் மகள்' ஷூட்டிங்குக்குப் போகாம இருந்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீதர், `உன் கணவர் தப்புப் பண்ணிட்டா ஜெயிலுக்குப் போனார், நல்ல விஷயத்துக்காகப் போராடித்தானே ஜெயிலுக்குப் போயிருக்கார்? அதனால், பெருமைப்படு'னு சொன்னார். என் கணவரும் நானும் ஜோடியாவே 60 படங்களுக்கும்மேல நடிச்சிருப்போம். அப்போ எங்க ஜோடிதான் ரொம்பப் பிரபலம். எங்க ஜோடிப் படங்களின் விளம்பரங்களில், `சேடப்பட்டி சிங்கக்குட்டி - கொங்குநாட்டுத் தங்கக்கட்டி', `லட்சிய நடிகர் - லட்சிய நடிகை'னு குறிப்பிடுவாங்க. அப்போ நட்சத்திரத் தம்பதியா எங்களைப் பத்தின செய்திகள் நிறைய வரும். வீட்டில் நாங்க தம்பதி. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல கதாபாத்திரங்கள். அதனால, நடிக்கிற வேலையைச் சரியாசெய்துட்டு, வீட்டுக்கு வந்திடுவோம். வீட்டுல சினிமா, அரசியல், சமூகம்னு எல்லா விஷயங்களைப் பத்தியும் பேசுவோம். இருவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

1968-ம் ஆண்டு எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. இனியும் இணைந்து வாழ்வது சரியில்லைனு, என் மகன் ரவிக்குமாரை அழைச்சுக்கிட்டுத் தனியா வந்துட்டேன். எங்க பிரிவுக்கான காரணத்தை வெளிப்படையா சொல்ல விரும்பலை. அது விதியின் விளையாட்டு. அறிஞர் அண்ணாதுரை அண்ணன் மற்றும் என் மாமியார் இருவரும், `வாழ்க்கைக்காக நடிப்பைக் கைவிட்டுடாதே'னு சொன்னதுடன் எனக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தாங்க. அதன்படி, தனியாளா நடிச்சுக்கிட்டு, பையனை வளர்த்து ஆளாக்கினேன். சினிமாத் தொழிலும் பையனும்தான் எனக்கு எல்லாமுமாக ஆனது. ரொம்ப மனவேதனையுடன் வாழ்ந்த காலம் அது. அப்போது எனக்கு நான்தான் தைரியம். கவலைகளிலிருந்து மீண்டு வந்தேன். 2014-ம் ஆண்டு அக்டோபர்ல என் கணவர் காலமானார். அவரை விட்டுப் பிரிந்த 1968-ம் ஆண்டுல இருந்து அதுவரை அவரைப் பார்க்கலை; அவர்கிட்ட பேசலை. அவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு, அவர் உடலைப் பார்க்கப் போனேன். 46 ஆண்டுக்கால உணர்வுகளை, கண்ணீராக வடித்தேன். சடங்கு முறைகளை எல்லாம் சரியாகச் செய்தேன். என் மனசில் ஆழமாகப் பதிஞ்சிருக்கும் அவர் காதலும் நினைவுகளும் இப்போதும் எனக்குத் துணையா இருக்கு.

உயிர்பெற்ற `கண்ணகி!’

நிறைய ஹிட் படங்கள் கொடுத்துட்டிருந்த நிலையில், `பூம்புகார்' பட வாய்ப்பு வந்தது. அது என் பாக்கியம். முதலில் அந்தப் படத்தில் கோவலனாக சிவாஜியும், கண்ணகியாக பத்மினியும், மாதவியாக வைஜெயந்திமாலாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியாக நான் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். கோவலனாக என் கணவர் நடிச்சார். நான் பேச வேண்டிய வசனங்கள் எழுதப்பட்ட பேப்பர் பண்டலை ஒருநாள் என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தாங்க. `இவ்வளவு பக்கங்களா?'னு பயந்துட்டேன். `எதுக்கு பயம்? உன்னால சிறப்பா பேசி நடிக்க முடியும்'னு கணவர் ஊக்கம் கொடுத்தார். அப்போ தனியா டப்பிங் பேசுற தொழில்நுட்பம் கிடையாது. ஆன் தி ஸ்பாட்லயே உரக்கக் கத்திப் பேசணும். அப்படிப் பேசி, ஒருமுறை என் தொண்டையில் ரத்தமே வந்துடுச்சு. `இனி கண்ணகி என்றாலே எங்களுக்கு நீங்கதான் நினைவுக்கு வருவீங்க'னு மக்கள் பாராட்டியது அந்தப் படத்தினால் நான் அடைந்த பெரிய புகழ். இயல்பிலேயே தமிழ் உச்சரிப்பு எனக்கு நல்லா வரும். எனக்குக் கிடைத்த படங்கள்லயும், பக்கம் பக்கமா வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு அமைந்தது சிறப்பு. `பூம்புகார்' படத்தில் சிலம்புடன் நான் கோபமாக நிற்கும் காட்சியை மையப்படுத்திதான், தற்போது மெரினாவில் இருக்கும் கண்ணகி சிலை வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் பெருமை.

உடன்பிறவா சகோதரர்கள்!

அறிஞர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் - இவங்க மூவரும் என் உடன்பிறவா சகோதர்கள். உடன்பிறந்த சகோதரிக்கும் மேலான அன்பை என்னிடம் காட்டினாங்க. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கலைஞர்னு நாலு குடும்பமும் சொந்த பந்தங்களா இருந்தோம். எங்க வீட்டுல அடிக்கடி கட்சிக் கூட்டங்கள் நடக்கும். நால்வரும் எங்க வீட்டுலதான் சாப்பிடுவாங்க; சிரிச்சுப் பேசிகிட்டு இருப்பாங்க. நால்வரில், யார் வீட்டுல விசேஷம் நடந்தாலும், மத்த எல்லோரும் முதல் ஆளுங்களா இருப்போம். அவங்க எல்லோருக்கும் என்மீதும், என் கணவர்மீதும் அதீத அன்பு இருந்துச்சு.

அறிஞர் அண்ணாதுரையின் 51-வது பிறந்த நாளில் 51 சவரன் தங்க நாணயங்களைப் பரிசாக, கணவரும் நானும் கொடுத்தோம். `மணி மகுடம்' பிரிவ்யூ காட்சி. `புரட்சிகரமான வேடங்களில் நடித்தால் மட்டும் போதாது; என்னுடன் மேடைகளில் பேச வேண்டும்' எனச் சொன்னார். அரங்கத்தில் எல்லோரும் கைதட்டினாங்க.

காஞ்சிபுரத்தில் அண்ணாதுரையின் வளர்ப்பு மகன்கள் கெளதமன் மற்றும் பரிமளத்தின் திருமணம் ஒரே மேடையில், பொங்கல் திருநாளின்போது நடந்துச்சு. அதில் கலந்துகிட்டு, நானும் கணவரும் சென்னை திரும்பினோம். எம்.ஜி.ஆர் அண்ணனும் - ஜானகி அக்காவும் தனிக் காரில் வந்தாங்க. எங்களை அவங்க வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாங்க. சாப்பிட்டுவிட்டு, பேசிவிட்டு கிளம்பத் தயாரானோம். 'என் தங்கச்சி முதன்முதலா வீட்டுக்கு வந்திருக்கு. நான் சீர் செய்யணும்'னு சொல்லி, வெள்ளித்தட்டில் பத்தாயிரம் ரூபாய் பணம் வெச்சு சீர் வரிசைப் பொருள்களைக் கொடுத்தார், எம்.ஜி.ஆர் அண்ணன். `நாடோடி மன்னன்' உட்பட பல படங்கள்ல அவர்கூட ஜோடியா நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனா, `ஒரு பக்கம் நீ என் தங்கை, இன்னொரு பக்கம் நீ என் தம்பி மனைவி... உன்கூட ஜோடியா நடிக்க மாட்டேன்'னு உறுதியா சொல்லிட்டார். `காஞ்சித் தலைவன்' படத்தில் தங்கையா நடிச்சது உட்பட, அவருடன் ஐந்து படங்களில் நடிச்சேன். `பிள்ளையோ பிள்ளை' பட பிரிவ்யூ ஷோ. படம் பார்த்துட்டு, `எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அழகிய தமிழ் உச்சரிப்புடன் சிறப்பாகப் பேசி நடிக்கும் ஒரே நடிகை என் தங்கை விஜயாதான்' எனச் சொன்னார். எம்.ஜி.ஆர் அண்ணனின் மறைவு சமயத்தில், `நீயும் உன் அண்ணனுக்கு எல்லாச் சடங்குகளையும் செய்'னு ஜானகி அக்கா சொல்ல, மனநிறைவோடு செய்தேன்.

சிவாஜி அண்ணன்கூட எட்டுப் படங்களில் நடித்தேன். `வசந்தி' படத் தொடக்க பூஜை நிகழ்வு. `நானும் ஒரு பெண்' பட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து, மேக்கப்கூடக் கலைக்காம நேரா அந்தப் பட பூஜையில கலந்துக்கப் போனேன். அந்தக் கறுப்பு மேக்கப்பைப் பார்த்த அங்கிருந்த பத்திரிகையாளர்கள், `நல்லா பீக்ல இருக்கீங்க, எதுக்குக் கறுப்பு சாயம் பூசி நடிச்சு ரிஸ்க் எடுக்கிறீங்க? பிறகு வாய்ப்புகள் குறைந்துடும்'னு சொன்னாங்க. எனக்கு பயமாகிடுச்சு. அப்போ பக்கத்துல இருந்த சிவாஜி அண்ணன்கிட்ட என் வருத்தத்தைச் சொன்னேன். `நான் மட்டும் பொண்ணா இருந்திருந்தா, ஏவி.எம்.செட்டியார் ஐயாகிட்ட, இந்த கேரக்டர்ல நான் நடிக்கிறேன்னு கேட்டுச் சண்டை போட்டு நடிச்சிருப்பேன். இப்படியான ரோல் கிடைக்கிறது கலைஞர்களுக்கு வரம்'னு சொன்னார். அப்புறம்தான் எனக்கு நம்பிக்கையே வந்தது. அண்ணனின் வாழ்த்துப்படியே, `நானும் ஒரு பெண்' படம் பெரிய ஹிட். எனக்கு `சிறந்த நடிகை'க்கான தேசிய விருதும் கிடைச்சது. சக கலைஞர்களுக்குள் எங்க தலைமுறையில் இருந்த இந்த அன்பு, அடுத்தடுத்த தலைமுறையிலும் தொடரணும்.

கலைஞர்மீதான அன்பு!

`குலதெய்வம்' பட வெற்றிவிழா மதுரையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட கலைஞர், படத்தில் நடித்த கலைஞர்களுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசளித்தார். அப்போதான் அவரை முதன்முதலில் பார்த்தேன். பிறகு அவர் வசனத்தில் ஆறு படங்களில் நடித்தேன். ஹீரோயினாக நடிச்சுக்கிட்டிருந்த நான், கலைஞர் - தயாளு அம்மாள் கேட்டுக்கிட்டதால, `பிள்ளையோ பிள்ளை' படத்தில் மு.க.முத்துவுக்கு அம்மாவா நடிச்சேன். கோவை செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்துச்சு. ஆனா, என்னால கலந்துக்க முடியலை. அதனால கலைஞர் வீட்டுக்குப்போய் வெள்ளியில் செய்த சிலம்பைப் பரிசாகக் கொடுத்தேன். அவருடைய மறைவு எனக்குப் பெரிய அதிர்ச்சி. ரொம்ப வேதனைப்பட்டேன்.

நானாக இருக்கவே விரும்புகிறேன்!

நான் ஒருசில படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சேன். பிறகு முழுக்கவே புடவைதான். மாடர்ன் உடைகள் பயன்படுத்தினதேயில்லை. 1950-1975 வரை முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். 150 படங்களுக்குமேல நடிச்சிருப்பேன். 1980-களில் ரஜினி, பிரபுனு பல ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். 1960-களில் எங்க வீட்டில் 15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தோம். அப்போ தேனாம்பேட்டையில் எங்க வீடு. விடியற்காலை எழுந்து, மெரினா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அப்போதும் சரி... இப்போதும் சரி... வீட்டு வேலைகளை நானே செய்வது வழக்கம். நடிகைங்கிற பிம்பம் என் நிஜ வாழ்க்கையில் வந்ததில்லை. பகட்டான தோரணையுடன் இருந்ததில்லை. என் இயல்பான குணங்களுடன், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.

கடைசியாக, `காதல் சடுகுடு' படத்தில் நடிச்சேன். பிறகு சினிமாவை விட்டு விலகி, தனிமை வாழ்க்கையில் அடைக்கலம் ஆகிட்டேன். பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. என் பிள்ளை ரவிக்குமார் குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரங்க அடிக்கடி என்னை வந்து பார்ப்பாங்க. மத்தபடி, டி.வி பார்க்கிறதுதான் என் பிரதான பொழுதுபோக்கு. இந்த அமைதியான வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. `கற்றுக்கொள் கற்றுக்கொடு! ஏமாறாதே ஏமாற்றாதே! வாழு வாழவிடு!' - என் வாழ்வில் அனுபவ ரீதியா கடைப்பிடிச்ச, எல்லோருக்கும் ஆட்டோகிராபில் நான் எழுதிக்கொடுக்கும் வாசகம் இது. இந்த வாக்கியத்திலேயே என் வாழ்க்கைப் பயணமும் அடங்கியிருக்கு. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக சந்தோஷப்படுகிறேன்!''

- கு.ஆனந்தராஜ் படங்கள்: க.பாலாஜி படங்கள் உதவி: ஞானம்

எம்.ஜி.ஆரும் நானும் வாங்கின ஓட்டுகள்!

1960-களில், ஒவ்வோர் ஆண்டும் வெளியான தமிழ்ப் படங்களில் தங்களுக்குப் பிடிச்ச படம், நடிகர், நடிகைகளை மலேசியா, சிங்கப்பூர் ரசிகர்கள் தேர்வு செய்வாங்க. அது அப்போ பெரிய கெளரவமா இருக்கும்.
1968-ம் ஆண்டுக்கான போட்டியில, 34,938 வாக்குகள் பெற்று எம்.ஜி.ஆர் அண்ணன் சிறந்த நடிகராகவும் 23,493 வாக்குகள் பெற்று நான் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டோம். அந்த வெற்றித் தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் அண்ணன் உடனே போன் செய்து, எனக்கு வாழ்த்து சொன்னார். ரொம்ப சந்தோஷமான தருணம் அது!

வைரமுத்துவுக்கு நன்றி!

என் சுயசரிதையை, 2008-ம் ஆண்டு, ஒரு முன்னணி தினசரி பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தேன். அதைப் படிச்சுட்டு, கவிஞர் வைரமுத்து எனக்கு போன் செய்தார். `நீங்கள் குறிப்பிட்டிருந்த, `சென்ற ஜென்மம், அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கையில்லை. வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜென்மத்தை மட்டுமே நம்புகிறேன்' என்ற வரிகள் நெகிழ்ச்சியாக இருந்தன; எனக்கு மிகப் பிடித்திருந்தது'னு சொன்னதுடன், ஒரு கடிதமும் அனுப்பினார். அந்தத் தருணத்தில் அவரின் பாராட்டு எனக்குப் பெரிய ஆறுதலா இருந்துச்சு. இந்தப் பேட்டியின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.



9
2013
Vijayakumari
விஜயகுமாரி ஓர் 1950-களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.இவரது முதல் படம் அம்மையப்பன்.  ஸ்ரீதரின் ” கல்யாண பரிசு “, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய “பெண் என்றால் பெண் ” மற்றும் மல்லியம் ராஜகோபாலின் “ஜீவனாம்சம்”. இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும்.காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும்.ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.

பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததும் பின்னர் கண்ணகி சிலை வடிக்க துணை புரிந்ததும் குறித்து அவருக்கு மிக்க பெருமிதம்.

திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை திருமணம் புரிந்து கொண்டார். இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.

பழமையை விரும்பும் அபிமானி திரு.ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர் அவரது  http://rprajanayahem.blogspot.in வலைத்தளத்தில் விஜயகுமாரியைக் குறித்து சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தெரிந்து கொள்ளுங்கள். திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கு எனது நன்றி.
நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
 கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை ‘கலர்’ காஞ்சனா இப்போது முழுக்கிழவி. ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை.
இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ‘ உன்னைப்போல் ஒருவன் ‘ படத்தில் காண சகிக்கவில்லை.
 இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!’எங்க வீட்டுக்காரர் ‘ என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
 இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .’தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து ‘என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.
பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் ” கல்யாண பரிசு “.
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் ” சாரதா ” விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!
பி . மாதவன் முதல் படம் ” மணியோசை ” யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் “பெண் என்றால் பெண் ” படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் “ஜீவனாம்சம் “. மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.

கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி ” இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா ” என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன்  ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடையrapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.
பல வருடங்களுக்கு முன் மணியனின் ‘இதயம் பேசுகிறது ‘ வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம்.




Profiles of Cine Artist

Vijayakumari was the only Tamil artiste who had the rare talent of transforming herself into the character she did and pronouncing Tamil words perfectly with cent percent accuracy. Vijayakumari’s film career was a saga of successes thanks to her unparalleled acting and dialogue delivery.

She danced to the song ‘Vaasamulla pooparippaene ..’ of the film Vedaala Ulagam at her school’s annul day and won a prize for her performance. Her teacher and co-students sowed the seed of ambition for film acting in her mind after this incident and Vijayakumari got the permission of her parents to enter cinema, winning over their strong opposition.

When AVM Studios advertised for new faces, Vijayakumari applied with her photograph. She was selected and was given training in dancing and acting. She was enrolled on a monthly salary. She was introduced in AVM’s ‘Kula deivam’, opposite to S. S. Rajendran, who was the hero of the film. But before the movie released, VIjayakumari’s mother died and Vijayakumari was totally shattered.

It was SSR, who comforted her at that sorrowful moment and subsequently he gave her a place in his heart as well as his life by marrying her. Her debut movie got her recognition and a plethora of offers followed. ‘Vanjikkottai vaalibhan’, ‘Raajtilak’, ‘Kalyanaparisu’, ‘Petra maganai vitra annai’ were some of her unforgettable films of the period that followed. Side by side, Vijayakumari and SSR paired together and acted in stage plays also including ‘Mani makudam’, ‘Thenpaandiveeran’, ‘Pudhu vellam’, ‘Mudhalaali’ and ‘Muthu mandapam’.

A son was born to the couple. The child was named Ravikumar. After the birth of the child, SSR took Vijayakumari to his house at Teynampet where he was living with his first wife Pankajam. There were three houses inside the compound – Pankajam and her children lived in one house, SSR’s sister and her husband T. V. Narayanaswamy lived in the second house and Vijayakumari was provided the third house.

Vijayakumari’s career was a promised success story that included run-away hits like ‘Kumudam’, ‘Saradha’, ‘Kumgumam’, ‘Santhi’, ‘Aanandhi’, ‘Avan Pithan’, ‘Alli’, ‘Thedi vantha thirumagal’, ‘Pachai vilakku’, ‘Naanum oru penn’, ‘Paar magale paar’, ‘Kaakkum karangal’, ‘Poleeskaaran magal’, ‘Kodimalar’, ‘Aalayamani’ etc. She worked in films continuously without rest.

Vijayakumari participated in the 13th ‘Naadaka vizhaa’ organized by the Seshasayee Paper Mills at its colony on 27th August 1985. Best plays and best artistes were given awards. Vijayakumari had acted with the fourth generation heroes Rajini, Prabhu, Karthik, Rajkiran and Murali too. Her last film is ‘Kaadhal sadugudu’. Vijayakumari is by herself a school for acting. She should teach and train the present fifth generation artistes and make them understand the sanctity of the profession in the field of art. This is my humble and loving request to this great artiste.
Family Background

She was born to Ramasamy Gownder – Thangalakshmi Ammal as their second child. She belongs to Mettupalayam of Coimbatore District.

நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.

விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.

விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.

ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.

பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!

ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.

அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!

ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.

இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!

"உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்

கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.

அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.

அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!

விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.

ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்
சொன்னார்.

அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.

அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.

இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

"நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார். பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.

"சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''

இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 


HISTORY OF CEYLON TEA



HISTORY OF CEYLON TEA

சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

இன்றும் கூட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மலையகத் தமிழர்கள் இல்லை!

nithya pandianOctober 31, 2019 06:11:56 pm 
SHARE
History of Ceylon tea, Indian Tamils, Sirima – Shastri pact : 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியா முழுவதும் நில உடமை தொடர்பான சட்டங்களில்  மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ராயத்துவரி அமலாக்கப்பட்டது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்காகவும், ஐரோப்பிய சந்தைகளுக்காகவும் நம்முடைய நிலங்கள் அவர்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தது.  ஐரோப்பிய சந்தைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிரிட்டிஷ் தங்களின் காலனி நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களில் வேலைக்காக ஆட்களை சேர்க்கும் முடிவுக்கு வந்தது.



History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact
ஆரம்ப காலங்களில் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள்

சந்தைகள் விரிவடையும் போது உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நிறைய நிலங்களும், அதற்கேற்ற உழைப்பும் ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. உணவுக்கு வழியில்லாத சூழலாலும், சொந்த நிலமற்ற கையறு நிலையிலும் லட்சக்கணக்கான மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.   மக்களின் சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். “வெளிநாடுகளில் வேலை, மூன்று நேரமும் உணவுக்கு உத்திரவாதம், திரும்பி வரும் போது பெரும் பணக்காரனாக வரலாம்” என்று மூளைச்சலவை செய்வதற்காகவே ஆங்கிலேயர்கள் இடைத்தரகர்களை தேர்வு செய்து அனுப்பினர்.

இலங்கையின் தேயிலைக்காடுகள், பர்மா, மலேசியாவின் ரப்பர்த்தோட்டங்கள், கயானாவின் காஃபித் தோட்டங்கள் என தமிழர்கள் அடிமைகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். 24 மணி நேரமும் அவர்களின் வாழ்க்கை மேற்பார்வையிடப்பட்டது. தப்பித்து செல்லும் சூழல் வெளிநாடுகளில் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது. தென்னிந்திய பஞ்சத்திற்கு முன்பும் இலங்கையில் தமிழர்கள் ஏற்றுமதி, இறக்குமதி, காட்டுவேலைகள், மேம்பாட்டு  பணிகளுக்கு சென்றதால், அங்கு குடும்பங்களாக மீண்டும் செல்வதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பண்ணை அடிமைகளில் இருந்து பதவி உயர்வு பெற்று தோட்ட அடிமைகளாக பணி செய்யத் துவங்கினர். இன்றும் கூட அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக அம்மக்கள் இல்லை என்று கூறுகிறார் கண்டியை சேர்ந்த புவனேஷ். இணையதளம் ஒன்றின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.

ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்கள்

ஈழத்தமிழர்கள் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்த அந்நாட்டின் பூர்வ குடிகள். அவர்களுக்கும் மலையில் வாழும் மலையகத் தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. மலையகத் தமிழர்கள் இன்றளவும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அடையாளம் காணப்படுகிறார்கள். “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலருக்கும் இந்த வித்தியாசங்கள் புரிவதில்லை. ஈழப்பிரச்சனைகள் கூட பெரும்பாலும் அரசியல் நோக்கத்துக்காகவும், வெறுப்பரசியலை ஊக்குவிக்கவும் தான் பயன்பட்டது. மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட மலையக மக்களின் பிரச்சனைகளைக் காட்டிலும் ஈழத்து பிரச்சனை வீரியமாக இருக்கும் என்று அவர்கள் யோசித்திருக்க கூடும்” என மட்டக்களப்பை சேர்ந்த ரக்‌ஷனா நம்மிடம் அறிவித்தார்.

இதற்கான தேடலை நீங்கள் தான் தொடர வேண்டும் என திரிகோணமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் அறிவிக்கிறார்.

இலங்கையும் காஃபி விவசாயமும்

ஆரம்பத்தில் இலங்கையின் கண்டி, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 1820 – 1880 காலங்களில்  காஃபி பயிரட்டப்பட்டது. காஃபிக்கு முழுக்காடுகளையும் அழிக்க வேண்டியதில்லை. அடியில் இருக்கும் புதர்களை மட்டும் அழித்து 1849 வரையான 29 ஆண்டுகளில் 65 ஆயிரம் ஏக்கரில் காஃபி பயிரடப்பட்டது. காஃபியின் தேவை அதிகரிக்க அதற்காக அழிக்கப்படும் எண்ணிக்கையும், அந்த பணியில் அமர்த்தப்படுவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்பட்டது. 1868 ஆண்டின் முடிவில் இலங்கையில் சுமார் 2,75,000 ஏக்கர் அளவில் காஃபி பயிரிடப்பட்டது.

இலங்கையில் குடியேறிய தமிழர்கள்
தென்னிந்தியாவில் இருந்து இலங்கை சென்ற மக்களில் பலர் மன்னார் துறைமுகத்தில் இறங்கி கண்டி மலைக்காடுகள் வரை நடந்தே சென்றுள்ளனர். கண்டி, வத்தேகம, மடுல்கல, இரங்கல, கலகா, ஹேவாஎட்ட, கம்பொல, மாத்தளை, பேராதெனிய, பள்ளேகல ஆகிய இடங்களில் மக்கள் குடியேறினர். காஃபி பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க மக்கள் நாவலப்பிட்டி, கினிகஸ்த்தென்ன, கொத்மல, தலவாகெல, நுவரெலியா, அட்டன், ஊவா மாகாணங்களில் பின்னர் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 1830 முதல் 1840 வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த மக்கள் காடுகளை காஃபி தோட்டங்களாக மாற்றினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு மிகவும் அளப்பரியது. ஆனாலும் காஃபி பயிர்களில் நோய் தொற்றுகள் உருவாக காஃபி பயிரிடுதல் முடிவுக்கு வந்தது.



சிலோன் டீ வரலாறு
இலங்கைக்கு முன்பே இந்தியாவின் அசாம் பகுதியில் தேயிலைகள் பயிரிடப்பட்டு, வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது. காஃபியின் சாம்ராஜ்ஜியம் முடிவடைய தேயிலை அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. அடிக்காட்டினை அழிப்பது மட்டும் தற்போது வேலையில்லை. மொத்த காட்டினையும் அழித்து, தேயிலை பயிருக்கான நிலம் உருவாக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் மக்கள் வாழ லேன்களை அமைப்பது, பறிக்கப்பட்ட தேயிலையை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல சாலைகளை அமைப்பது,  தேயிலையை தூளாக மாற்ற கருவிகளை இயக்குவது, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை சந்தைப்படுத்துவது, துறைமுகங்களுக்கு அனுப்பவது என அனைத்தையும் மக்கள் செய்தனர்.

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact
கோத்தகிரி குயின் சோலா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை… Express Photo by Nithya Pandian

1860-ம் ஆண்டு கண்டியின் நூல் கந்துலாவின் லிப்டன் தேயிலைக்காட்டில் ஜேம்ஸ் டெய்லர்  என்பவரால் இலங்கையின் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது.  இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலோன் டீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இலங்கை பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை சிலோன் டீ உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. 1914ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு ரூ. 90 மில்லியன் ஆகும். அடுத்த ஆண்டில் ரூ. 122 மில்லியன் என்ற அபரீதமான இலக்கை  அவர்களின் பொருளாதாரம் எட்டியது.  இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் வெறும் 5%-த்தினர் மட்டுமே. ஆனால் இவர்களால் இலங்கை பொருளாதாரத்தில் 100 கோடி டாலர்கள் வருமானத்தை பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக செயல்படுகிறார்கள். 

“மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை  இன்று இல்லை. அவர்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்கள்.  ஆனாலும் அவர்களுக்கு சொந்தமாக நிலமோ வீடுகளோ கிடையாது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் தான் அனைத்தும் வருகிறது. தோட்டம் கைமாற்றப்படும்போதோ அல்லது விற்கப்படும்போதோ அம்மக்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாவலப்பிட்டியில் தோட்டமொன்றில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று முரளிதரன் கூறினார். “அவர்களுக்கான சம்பளம் போதுமானதாக இல்லை” இல்லை என்கிறார் புவனேஷ்.

இலங்கை குடியுரிமைச் சட்டமும் அதன் பின்னணியும்
1948 நவம்பர் 15ம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்பது முக்கிய அம்சமாகும்.  1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருக்கு முந்தைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே அவரால் இலங்கை குடியுரிமை பெற இயலும்.

அதற்கான காரணங்களாக பார்க்கப்பட்டது தமிழர்களின்  எண்ணிக்கை. அவர்கள் தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் வாக்கு வங்கிகள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருந்தது. வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இது போன்ற அதிகாரத்தை மாற்றும் காரணியாக இருப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்களை மீண்டும் தாயகம் அனுப்ப இந்தியாவுடன் 1951, 1953, 1954 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. புதிதாக லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவிலும், சிறிமாவோ பண்டாரநாயக்கே இலங்கையிலும் ஆட்சி அமைத்த போது அக்டோபர் 30, 1964ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து  கொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி மலையகத்தில் வசித்த 10 லட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தது இலங்கை அரசு. அந்நாட்டில் அவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் வாக்குரிமை அற்றவர்களாகும் நடத்தப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact
Express Photo by Nithya Pandian

ஒப்பந்தத்தின் படி 5 லட்சத்தி 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியாவும், 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் 1.5 லட்சம் நபர்கள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. நான்கு தமிழர்கள் தாயகம் திரும்பினால் ஒரு தமிழருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 20 ஆண்டுகளில் 4,45,519 நபர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிகவும் காலம்  தாழ்த்தியது இலங்கை அரசு. 1984ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரமடைய ராமேஸ்வரம் – தலைமன்னார் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி வெளியேற வேண்டிய தமிழர்கள் பலரும் நாடற்றவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் குடியுரிமை சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலையக தமிழர்களும் அந்த போராட்டத்தில் இணைந்து விடுவதை தடுக்க அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடிவு செய்தது இலங்கை அரசு.  1988ம் ஆண்டு நாடற்றோர் என்ற பதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஆனால் சில காலக்கட்டத்தில் மலையக தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறார் புவனேஷ்.

தமிழகத்திற்கு திரும்பி வந்தவர்கள்
1966ம் ஆண்டு முதல் 1984 ஆண்டுகள்  வரை 4,45,519 நபர்கள் தாயகம் திரும்பினார்கள். தேயிலைத் தோட்டங்களில் 2445 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன. ரப்பர் தோட்டங்களில் 225 குடும்பங்களும், சிங்கோனா வளர்ப்பிற்காக 125 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது.

பெரம்பலூரின் துரைமங்கலம், வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்க வைக்கப்பட்டனர். திருச்சியின் துவாக்குடி தென்மலை, திருச்சி நகரம், கரூரின் வெள்ளாளப்பட்டி, பெரியார் நகர், மணப்பாறையின் வேம்பனூர் காலனி, துறையூரின் சிறு நத்தம், முசிறி, ஜெயங்குண்டம், நாமக்கல் போன்ற பகுதியில் குடியேறினர். ஏற்காட்டின் கிளிப்டன் தோட்டம், ஆதியார் தோட்டம், சோமசுந்தரம் தோட்டம், கிரே தோட்டம் , நீலகிரி கூடலூரில் நெல்லியாளம் டீ எஸ்டேட், சேரங்கோடு தேயிலைத் தோட்டம், சின்கோனா சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நந்தட்டி, உதகையின் பார்சன் வேலி, சுனோ டவுன், தலையட்டு மந்து மற்றும் கோத்தகிரியின் பல்வேறு டீ எஸ்டேட்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இன்றைய மலையக தமிழர்கள் நிலை
அரசியலில் மலையகத் தமிழர்களின் பங்கீடு குறித்து முரளிதரனிடம் கேள்வி எழுப்பிய போது  “நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட மேலதிகமாக  பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர்கொள்கிறார்கள்.  முழுநாட்டுக்குமாக உருவாக்கப்படும் திட்டங்கள், நிர்வாகக்கட்டமைப்புக்கள், கொள்கைகளுள் இவர்கள் உள்வாங்கப்படாத காரணத்தால் இவர்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  தேசிய தொழிலாளர் கொள்கைக்குள்/ சட்டங்களுக்குள் மலையகத் தோட்டத்தொழிலாளர் உள்வாங்கப்படுவதில்லை. இதேபோன்று கல்விக்கொள்கை, காணிக்கொள்கை, சுகாதார/மருத்துவத்துறையிலும் நிகழ்கிறது. இவை அனைத்தும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. மருத்தவர் நியமனம் கூட இவ்வாறு தான். இதனால் மாகாணசபை, உள்ளூராட்சி சபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்களால் தோட்டப்புறத்தில் வாழும் மக்களுக்கு எதுவும் நேரடியாக செய்ய முடிவதில்லை. ஒரே நாட்டுக்குள் தோட்ட நிவாகத்தின் கீழான தனியான மக்களாக இவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அம்மக்களின் நிலை குறித்து விவரித்தார்.

வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்க இயலாது. நம்பி வந்த நாடு திரும்பப் போக  கட்டளையிடும் போது நிலைமை மோசமாவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19 லட்சம் மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை எதிர்காலம் தான் நமக்கு காட்டும்