Sunday, 13 October 2019

சூடு பட்ட பூனை short story



சூடு பட்ட பூனை

காலையில் எழும்போதே நல்ல தலைவலி.

‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது.

“என்ன ராதா… எழுந்திரிக்கலையா?” என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கேட்டான் விக்ரம்.

“இல்ல! இன்னைக்கு என்னவோ ஒரே தலைவலியா இருக்கு. ஆனா, ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு ‘பிளானை’ முடிச்சாகμம். நேத்தே சொல்லிட்டாங்க.”

விக்ரம் ஒரு ‘எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்’. ஒரு பெரிய ‘கம்பெனி’யில் வேலை செல்கிறான். இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன். ராதா அவன் மனைவி.

அவள் ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’. கட்டுமான நிறுவனத்தில் வேலை செல்கிறாள். பல ஆண்கள் மட்டுமே வேலை செல்யும் இடத்தில் ஒரே பெண்ணாக வேலை செல்து கொண்டிருப்பவள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரே பெண் குழந்தை. பெயர் பூஜா.

வீட்டின் தலைப்பிள்ளையாக இருப்பதால் தங்கைகளின் திருமணத்தை நடத்தி வீட்டின் பொறுப்பையும் கவனித்தாக வேண்டிய கடமை இருந்தது. தம்பதியர் இருவரின் சம்பளத்தையும் வைத்து ‘லோன்’ எடுத்து ஒரு வீடு வாங்கி இருந்தார்கள்.

ராதாவின் திறமையை உணர்ந்து மேலதிகாரி மைக்கேல், தான் இருக்கும் ‘சைட்’களில் தன்னுடனே வைத்துக்கொண்டு அவளின் திறமைக்கேற்ற வேலையைக் கொடுத்து மரியாதையான இடத்தில் வைத்திருப்பவன்.

விக்ரம் & ராதா இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டு. வீட்டு வேலைகளைக்கூட பகிர்ந்துகொள்வார்கள்.



“நீ கொஞ்சநேரம் கழிச்சே எழுந்திரு ராதா. பூஜாவை நான் பார்த்துக்கிறேன்.”

“சரிங்க! சாரி… என்னால முடியல. ஆனா, கண்டிப்பா வேலைக்கு போயேதான் ஆகணும்.”

“ஓ.கே.! நான் ஒண்ணும் சொல்லலையே? நீ நிம்மதியா தூங்கு. குட்டிம்மாவை ‘ஸ்கூலுக்கு’ அனுப்பிட்டு நான் வர்றேன்.”

அதன் பிறகு பூஜாவை குளிக்க வைத்து ‘பிரட் டோஸ்ட்’ செல்து கொடுத்து வேனில் ஏற்றிவிடும் வரை வேலை ‘பெண்டு’ நிமிர்ந்தது.

காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்து ‘சோபா’வில் அமர்ந்தவனுக்கு… ‘பாவம், இந்தப் பெண்கள் வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு
அலுவலகத்திலும் என்னமா கஷ்டப்படுகிறார்கள்?’ என்று தோன்றியது.

அறையில் போல்ப் பார்த்தால் குழந்தை போல் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள் மனைவி. அவளை எழுப்பிவிட்டு, தானும் கிளம்பி வண்டியை எடுக்கும்போது… “நான் வேணா இருந்து ‘டிராப்’ பண்ணிட்டு போகட்டுமா ராதா?” என்றான்.

“வேண்டாம். நீங்க கிளம்புங்க . நான் போய்க்கிறேன்.”

இரண்டு பஸ் மாறி ‘சைட்’க்கு வந்து சேருவதற்குள் போதும்போதும் என்று ஆனது. தன் இருக்கையில் சென்று அமர்ந்து ஒரு அரை ‘பாட்டில்’ தண்ணீர் குடித்த பிறகே சற்று தெம்பு வந்தது. அதற்குள் மைக்கேலிடம் இருந்து அழைப்பு. எழுந்து அவன் அறைக்குப் போகும் நேரம் எதிரே அமர்ந்திருந்த மேனேஜர் ராமனும், வசந்தும் பேசுவது நன்றாகவே காதில் விழுந்தது.

“பார்த்தியா… உடனே கூப்பிட்டுட்டான். இவளை எங்கேயும் விடமாட்டான். வந்ததும் வராததுமா மடியிலேயே வச்சிக்கிறான்…” என்றான் ராமன்.

“ஆமா சார்… எந்த ‘சைட்’க்கு போனாலும் சொல்லி வச்ச மாதிரி இவளையேதான் கூட்டிட்டுப் போறான். ஏன்… ‘கம்பெனி’யில வேற ‘ஆர்க்கிடெக்ட்’ இல்லையா என்ன..-.?”

“இவ இல்லாம அவனால இருக்க முடியாது. அதுதான்…”

“அவ புருஷனுக்குத் தெரியுமா? ஒண்ணுமே சொல்லமாட்டானா சார்?”

“அவனுக்கென்ன… இவ சம்பாதிச்சு கொடுத்தா போதும்ன்னு இருப்பான் போல…”

இது போன்ற பேச்சுகள் தினமும் காதில் விழுந்தாலும். . . அன்று உடல் சோர்வுடன் மனச்சோர்வும் வந்து சேர்ந்தது. “சே… என்ன
மனிதர்கள்? கொஞ்சம்கூட நாக்கில் நரம்பில்லாமல் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி எளிதாக விமர்சித்துவிடுகிறார்கள். அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்.”

உள்ளே சென்று மைக்கல் கொடுத்த வேலைகளை முடித்துவிட்டு வரும்போது தன்னை பார்த்து இருவரும் ஏளனமாக சிரிப்பது தெரிந்தது.

மனதுக்குள் ஒரு முடிவு எடுத்தவளாக நேராக அவர்களிடம் வந்தாள். “சார்… நீங்க இப்போ ‘பிரீயா’ இருக்கீங்களா? உங்ககிட்ட கொஞ்சம் பேசμம்.”

“ஓ… பேசலாமே! என்ன பேசணும் சொல்லுங்க” என்றான் ராமன்.

சூடாக டீ வந்தது. குடித்தாள்.

அதற்குள் அவசரப்பட்டான் வசந்த். “என்ன பேசணும் ‘மேடம்’ ?” என்று போலி மரியாதையுடன் கேட்டான்.

“ஏன் ராமன். . . உங்க மனைவி வேலை பார்க்கறாங்களா?”

“ஆமா.”

“அங்க பெண்கள் மட்டும்தான் வேலை செல்றாங்களா?”

“இல்லையே… ஆண்களும் இருக்காங்க.”

“தினமும் என்னைப் பத்தி நீங்க பேசுற மாதிரி, உங்க மனைவியைப் பத்தியும் அவங்க ‘ஆபீஸ்’ல வேலை செல்றவங்க பேசுவாங்க இல்ல?”

சட்டென்று கோபமானான். “என் மனைவி இப்படி இல்ல. அவளைப் பத்தி பேச…”

“என்னைப் பத்தி எனக்குத் தெரியும். உங்களுக்கு… உங்க மனைவியைப் பத்தி தெரியுமா சொல்லுங்க. உங்களை மாதிரி ஆண்கள் எல்லா ஆபீஸ்லேயும் இருக்காங்க… அடுத்தவன் மனைவியைப் பத்தி அசிங்கமா பேசுறதுக்கு.”

“……………”

“ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போற ஒவ்வொரு பொண்ணும் காலையில தூக்கத்தை இழந்து, குழந்தைகளை கவனிச்சு… நிம்மதியா உட்கார்ந்து ஒரு வால் சாப்பிடக்கூட முடியாம பஸ்ல கூட்டத்துக்கிடையே நசுங்கி ‘இடி ராஜா’க்கள்கிட்ட மாட்டி அவஸ்தைப்பட்டு ஆபீசுக்குள்ள நுழையும்போது… நீங்க வீட்ல எந்த வேலையும் செய்யாம காலையில எழுந்து கிளம்பி நல்லா சாப்பிட்டுட்டு ‘டூ வீலர்’ல ‘ஹாயாக’ வந்து இறங்கி வேலைக்கு வருகிற பெண்களைப் பத்தி ரொம்ப ‘ஈஸியா’ கண்டபடி ‘கமெண்ட்’ அடிக்கிறீங்க…”

“…………..”

“உங்க மனைவிகிட்ட பேசிப் பாருங்க… அவங்க ஆபீஸ்ல இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவங்கன்னு! அவங்களும் எங்களை மாதிரிதானே வேலைக்குப் போயிட்டு வர்றாங்க. என்னிக்காவது சோர்ந்து இருக்கிறப்ப ஒரு வாய் காப்பியாவது போட்டு
கொடுத்திருக்கீங்களா?” என்றவள், அடுத்தவன் பக்கம் பார்த்தாள்.

“ஏன் தம்பி… உங்க வீட்டிலேயும் பெண்கள் இருப்பாங்கதானே! அதெப்படி வேலைக்கு வர்ற பெண்கள் எல்லாம் சோரம் போனவங்க மாதிரி கூச்சமே இல்லாம பேசுறீங்க? அப்புறம் என்ன சொன்னீங்க… என் கணவரை பத்தி? அவர் தன்னை மாதிரி எல்லாரையும் நினைச்சு இத்தனை ஆண்களுக்கு மத்தியில் என்னை வேலை செய்ய விட்டு இருக்காருன்னா என்ன ஒரு நம்பிக்கை இருக்கும்? நமக்குத்தான் பேசுகிற சக்தி இருக்கேன்னு நினைச்சு தயவுசெஞ்சு எதை வேண்டுமானாலும் பேசிடாதீங்க. உங்க நாக்கை சுழற்றும் முன் கொஞ்சம் யோசிங்க. நாங்க பல காலம் கழிச்சு கூட்டைவிட்டு வர்றோம். கூட்டு புழுவா எங்க திறமைகளை அடக்கி அடுக்களைக்குள் முடங்கிக் கிடந்தவங்க இப்போதான் தைரியமா வெளியில வர ஆரம்பிக்கிறோம். இந்த மாதிரி பேசி மறுபடியும் எங்களை கூட்டுக்குள் அடங்க வச்சிடாதீங்க. பேசுறதுக்கு முன்ன உங்க வீட்டுப் பெண்களையும் ஒரு நிமிஷம் அந்த இடத்துல வச்சிப் பாருங்க. அப்போ நிச்சயமா இப்படிப் பேச மாட்டீங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறு என தன் இடத்துக்கு வந்தாள்.

“நல்லா கேட்டீங்கம்மா… இந்த மாதிரி ஆட்களுக்கு செருப்பால அடிக்கிற மாதிரி சொன்னாதான் புத்தி வரும்” – டீக்காரப் பெண் இயல்பாக கூற… இவள் வேலையில் ஆழ்ந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது… சூடு பட்ட பூனைகளின் தலை குனிந்திருந்தது.

- ராணி இதழில் ஆகஸ்ட் மாதம் 2015

No comments:

Post a Comment