OLD FACE பழையமுகம் (சிறுகதை) சிறுகதை. ஜெயமோகன்
பழையமுகம் (சிறுகதை) சிறுகதை. ஜெயமோகன் பதினொரு மணிக்கு மேலேதான் கூட்டி வருவதாகச் சொல்லியிருந்தான் கல்யாணம். அதுவரைக்கும் அவனுக்கு செய்யும்படியாக வேலை என ஏதும் இல்லை. அவன் சென்று பார்க்கவேண்டியிருந்தவரை மதியமே சந்தித்துவிட்டான். மாலைவரை, இரவு வரை கூட நீளும் என அவன் நினைத்திருந்த வேலை பத்து சொற்றொடர்கள் மற்றும் சில சங்கடமான புன்னகைகள், இறுக்கமான மௌனத்துடன் முடிந்து விட்டது. அவன்கு மணிக்கு அவன் அந்தப் பெரிய மரக்குடோனில் இருந்து வெளியே கிளம்பியபோது விடுதலை உணர்வையே அடைந்தான். சில நிமிடங்கள் நீடித்த தளர்ச்சி சாலையில் நடக்க நடக்க கரைந்து இல்லாமலாகியது. சாலையின் வலப்பக்கம் நல்ல நீலநிறமான ஆறு வந்துகொண்டே இருந்தது. அதில் சில சிறிய படகுகள் சென்றுகொண்டிருந்தன. ஆற்றின் மீதிருந்து குளிரான காற்று வந்து சட்டைக்குள் புகுந்து உடம்பை தழுவி சிலுசிலுவென ஓடியது. மழைவிட்டு வரும் வெயில் போல வெப்பமில்லாத வெளிச்சம். அவனுக்கு ஒரு டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. சற்றுமுன்புதான் அவன் சந்திக்க வந்தவர் அவனுக்கு ஒரு டீ கொடுத்திருந்தார். கம்பிவளையங்களில் மாட்டப்பட்ட கண்ணாடி டம்ளரில் வந்த டீ ...