Posts

Showing posts with the label BOXER`S

BOXER`S REBELLION

Image
BOXER`S REBELLION சீனாவில் பாக்ஸர் கலகம் வெடித்தது. காரணம் இதுதான். பல வெளிநாட்டுப் பொருட்கள் சீனாவில் திணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மத மும்தான். இதனால் பெரும் கோபம் அடைந்தார்கள் கணிசமான சீனர்கள். ‘‘நாட்டின் பொருளாதாரமும், ஒழுக்க நெறிகளும் சீரழியும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா’’ என்று துடித்தார்கள். என்றாலும் மஞ்சூ ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. குத்துச் சண்டை, கத்தி விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுக் கொண்ட இந்தக் குழு தங்கள் அணியை ‘பாக்ஸர்கள்’ என்று அறிவித்துக் கொண்டார்கள். தாங்கள் வல்லவர்கள் என்றும் ஆதிக்க சக்திகள் தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிக் கொண்டார்கள். தங்களை சீனக் கலாச்சாரத்தின் காவலர்கள் என்றும் அறிவித்துக் கொண்டனர். அரசும் பாக்ஸர்களுக்கு ஆதரவு தரத் தொடங் கியது. இதனால் வெளிநாட்டினர் அதிருப்தி அடைந்தனர். ஆங்கில இதழ்கள் சீன அரசைத் தாக்கி கட்டுரைகள் எழுதின. இதெல்லாம் அப்போது லண்டனில் இருந்த சன்யாட் சென்னுக்கு மேலும் கசப்பை அளித்தது. தனது புரட்சிகரமான அமைப்பை ஓர் அரசியல் க...