AMALA SHANKAR DANCER BORN 1919 JUNE 27 - 2020 JULY 24
AMALA SHANKAR DANCER BORN 1919 JUNE 27 - 2020 JULY 24 காந்தி தலைமையில் திருமணம் செய்துகொண்ட நடனம் கலைஞர் அமலா சங்கர் மரணம்! . 25/07/2020 2:12:11 PM இனம், மொழி, நிறம், வர்க்கம் எல்லாம் கடந்து மனிதர்களை இணைப்பது கலைகளே. அவைதாம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத் தன்மையைக் குறைக்கச் செய்து மனிதநேயம் அளிப்பவை. பலரின் துயரங்களைப் போக்குவதே கலைகள்தாம். அப்படி பலருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்த கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமலா சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. PC: Google 1919 இல் ஜூன் 27 வங்கத்தில் பிறந்த அமலா. அவரின் தந்தை மகளை எல்லாமும் கற்ற ஒருவராக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். நடனம் கற்ற இவர் சங்கர் என்பவரோடு சேர்ந்து உலகமெங்கும் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகள் செய்தார். ரஷ்யாவின் பாலே நடனத்தோடு இந்திய நாட்டியத்தையும் இணைத்து புதிய பாணி நடனத்தை தோற்றுவித்தார்கள். அந்த முறை நடனத்திற்கு ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் இவர்களை நடன நிகழ்ச்சிகாக அழைத்துக்கொண்டே இருந்தார். PC: Google அப்படித்...