WORLD FATHER`S DAY JUNE 17,2018
FATHER`S DAY JUNE 17,2018 தந்தையர் தினம் இன்று ஜூன் 17,2018 வாழ்க்கையில் தன் மகன் நல்லவனாக ,வல்லவனாக வளர வேண்டும் என்று பிரியப்படாத தந்தை எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறார்கள் .ஆனால் மகனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யக்கூடிய தந்தைகளும் அபூர்வமாய் காணப்படுவதுண்டு .ஆனால் சராசரி தகப்பனார் தான் 75 % மிக அதிகம் என் தந்தை சுமாரான நிறைகளையும் அதற்கு சமமான குறைகளையும் பெற்றவர் .அவருடைய வாழ்க்கையில் 36 வயதில் இருந்து 44 வயது வரை வறுமை -அதாவது எனது 8 வயதில் தொடங்கிய வறுமை 16 வயதில் மங்க தொடங்கியது எனலாம் .அதற்கு பின்னாலும் முற்றிலும் வறுமை ஓய வில்லை .அப்பப்ப தலையை நீட்டி கொண்டுதான் இருந்தது எங்கள் வாழ்கையில் பெரிதாக நோய் எதுவும் பாதித்து விடவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் .காய்ச்சல் வந்தா விருதுநகர் முனிசிபல் ஆஸ்பத்திரி .கொடு போட்ட 6 வெள்ளை மாத்திரை ,கொஞ்சம் இனிப்பான மருந்து கலந்த நீர் தேவலை ஆகாவிட்டால் விருதுநகர் காட்டாஸ்பத்திரி இதுக்கு மேல் நோய் நீடிக்காது என் தகப்பனாருக்கு முன் கோபம் மிகமிக அதிகம் .ஒரு கஷ்டம் வந்தா பொறுமையா தங்கி கொள்ள தெரியாது .ஒரே கத்தல்...