FATHER`S DAY JUNE 17,2018
தந்தையர் தினம் இன்று ஜூன் 17,2018
வாழ்க்கையில் தன் மகன் நல்லவனாக ,வல்லவனாக வளர வேண்டும் என்று பிரியப்படாத தந்தை எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறார்கள் .ஆனால் மகனுக்காக எதுவேண்டுமானாலும்
செய்யக்கூடிய தந்தைகளும் அபூர்வமாய் காணப்படுவதுண்டு .ஆனால் சராசரி தகப்பனார் தான் 75 % மிக அதிகம்
என் தந்தை சுமாரான நிறைகளையும் அதற்கு சமமான குறைகளையும் பெற்றவர் .அவருடைய வாழ்க்கையில் 36 வயதில் இருந்து 44 வயது வரை வறுமை -அதாவது எனது 8 வயதில் தொடங்கிய வறுமை 16 வயதில் மங்க தொடங்கியது எனலாம் .அதற்கு பின்னாலும் முற்றிலும் வறுமை ஓய வில்லை .அப்பப்ப தலையை நீட்டி கொண்டுதான் இருந்தது
எங்கள் வாழ்கையில் பெரிதாக நோய் எதுவும் பாதித்து விடவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் .காய்ச்சல் வந்தா விருதுநகர் முனிசிபல் ஆஸ்பத்திரி .கொடு போட்ட 6 வெள்ளை மாத்திரை ,கொஞ்சம் இனிப்பான மருந்து கலந்த நீர் தேவலை ஆகாவிட்டால் விருதுநகர் காட்டாஸ்பத்திரி இதுக்கு மேல் நோய் நீடிக்காது என் தகப்பனாருக்கு முன் கோபம் மிகமிக அதிகம் .ஒரு கஷ்டம் வந்தா பொறுமையா தங்கி கொள்ள தெரியாது .ஒரே கத்தல் ,அதுவும் காட்டு கத்தல் சரியாக சொல்லப்போனால் இழவு வீட்டில் கத்துவது போல் அலறல் ..
அந்த காலத்தில் நூறு குடும்பத்தில் ஒருவர் இப்படித்தான் இருப்பர் .இந்தி நடிகை மதுபாலா வின் தந்தைக்கும் இப்படி அடிக்கடி டென்ஷன் வரும் . .என் நண்பர்கள் தன் தகப்பனார் வரும்போவது ஓடிப்போய் கையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு வர்றது என்னுள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .
என் தகப்பனார் ஒரு நாளும் அதற்கு இடம் கொடுத்ததில்லை .என் தாயார் கூட பெரும்பாலும் என் தந்தையின் முகத்தை பார்த்து பேச மாட்டார் . அவருடைய தோற்றம் ,மீசை ஹிட்லரை த்துஇருந்தது
வறுமை தாண்டவம் ஆடிய நாட்களில் அடுப்படியில் மௌனமாக அழுகை .இது அன்றாட வாழ்க்கை என் தாயாருக்கு !
தந்தையை வெறுக்க ஆரம்பித்தேன் .என் வாழ்வின் சதோசமான நாள் எது என்று கேட்டால் அது என் தகப்பனார் ஊருக்கு போன நாளா இருக்கும் .
மொத்தம் ஆறு பிள்ளைகளில் நான் நான்காவது .இரண்டு அக்கா ,ஒரு அண்ணன் ரெண்டு தம்பிகள் .காலையில் கிளம்பினால் மதியம் சாப்பாட்டிற்கு அப்புறம் இரவு அநேகமா 10 மணி இப்படி வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டேன். என்னுடைய அண்ணன் மனோகரன் என்று பெயர் தன் 26 வயதில் இறந்தான் .1976 DECEMBER 7 இறக்கும் போது இரவு 3 மணி .நானும் பக்கத்திலே தான் இருந்தேன் .ஒரு நாள் கூட என் அண்ணன் என் தகப்பனாரிடம் கடைசி வரை பேசியதே இல்லை .
அதுக்கு அப்புறம்தான் என் கவனம் குடும்பத்தின் மேல் திரும்பியது . ஒவ்வொரு துயரத்திற்கும் காரணம் யார் என்று யோசித்தபோது அவை என் தந்தையையே கை காட்டி நின்றது . இந்த நிலை பெரும்பாலும் நீறுபூத்த நெருப்பாய் குமுறிக்கொண்டும் ,அவ்வப்போது தலையும் நீட்டியது .1984 அவர் இறக்கும் வரை சுமூகமான உறவு ஏற்படுவதில் சிக்கல் நீடித்தது .ஒரு ஒரு ஆறுதலான விஷயம் யாதெனில் அவரைப்போல் எவருடைய காசுக்கும் ஆசைப்படவில்லை பொய் ,ஏமாற்று என் அகராதிகளில் இன்று வரை .இல்லை .என் தந்தை ,என் வழிகாட்டி ,என் புத்தன்
No comments:
Post a Comment