Friday 22 June 2018

L.V.PRASAD ,PIONEER OF INDIAN CINEMA BORN 1908 JANUARY 17-1994 JUNE 22







L.V.PRASAD ,PIONEER OF INDIAN CINEMA BORN
 1908 JANUARY 17-1994 JUNE 22






ஹிந்தியில் முதல் படம் அலம்அரா ,
தமிழில் முதல் படம் காளிதாஸ் 1931 
ஆகிய படங்களில் நடித்த எல் .வி .பிரசாத் 
1994 ஜூன் 22 இல் காலமானார்

1983 ஆம் வருடம் தமிழ் சினிமா சாpத்திரத்தில் மறக்க முடியாத வருடம். 1930 முதல் சினிமாவில் இயங்கி வந்த தயா‌ரிப்பாளர், இயக்குனர் எல்.வி.பிரசாத்துக்கு இந்த வருடம்தான் இந்திய அளவில் திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உய‌ரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருடன் மூன்றாம் பிறை படத்துக்காக கமல்ஹாசனும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார். விருது பெற்ற இருவரையும் வைத்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது அப்போது வெளிவந்து கொண்டிருந்த தமிழின் முன்னணி சினிமா பத்தி‌ரிகையான பொம்மை. இரு ஜாம்பவான்களின் மறக்க முடியாத அந்த உரையாடல் உங்களுக்காக.

கமல் - வணக்கம் சார். உங்களோட பேசறதிலே எனக்கு எப்பவுமே சந்தோஷம்தான். எனக்கு ரொம்பப் பெருமையாயிருக்கு. இப்ப உங்களுக்குக் கிடைத்துள்ள விருதால் நம்ம திரைப்படத் தொழிலுக்கே பெருமை. குறிப்பா தமிழ்ப்பட உலகுக்குப் பெருமை. ஆனால் உங்களைக் கேட்டா உங்களுடைய வயசுக்காக இந்த விருது கொடுத்தாங்கன்னு நீங்க சொல்வீங்க... எனக்குக் கிடைச்ச சிறந்த நடிகர் விருதெல்லாம் இந்த வருஷத்துக்கு மட்டும்தான். ஆனா உங்க விருது அப்படியில்லையே. நீங்க எவ்வளவு வருஷமா இந்த இண்டஸ்ட்‌ரிக்கு உழைச்சிருக்கீங்க. உங்களுடைய உழைப்பு, சாதனைக்காக இந்த விருதை உங்களுக்குக் கொடுத்திருக்காங்க. விருதுக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை.

எல்.வி.பிரசாத் - நீங்க பெருமைப்படலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை இந்த விருது வந்தாலே நான் கொஞ்சம் அஞ்சுகிறேன். ஏனெனில் அன்று நான் உழைத்ததற்காகதான் இந்த விருது. இன்று நான் உழைத்ததற்காக இல்லையே? ஆனா நீங்க புதியவர்களானாலும் சிறந்தவங்க. நானும் உங்களைப்போல இந்த வருஷத்தில் ஏதாவது ஒருவகையில் இந்தத் திரைப்பட உலகில் உழைத்து இம்மாதி‌ரி ஒரு விருதைப் பெற வேண்டும் என்ற ஆசைதான். அதே சமயத்திலே ஒரு விஷயத்தில் நான் ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கேன். என்னுடைய மகனைப் போல இருக்கிற நீங்க சிறப்பா நடிக்கிறீங்கன்னா எனக்கு மகிழ்ச்சிதானே?

கமல் - உங்க மகனைப் போலன்னு நீங்க சொன்ன உடனேயே எனக்கு இன்னொரு சிறந்த நடிகர் விருது கிடைச்ச மாதி‌ரி இருக்கு. உங்களுக்கு ஒண்ணு ஞாபகம் இருக்கா சார்? இதே ரூம்லதான் நான் தை‌ரியமா வந்து ராஜபார்வையிலே நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டேன்.

எல்.வி.பிரசாத் - உங்கப் படத்திலே நடிச்சதினாலே ஒரு புது வாழ்க்கையே அமைஞ்ச மாதி‌ரி இருந்தது எனக்கு.

கமல் - இந்த வார்த்தையை நான்தானே சார் சொல்லணும். ஏன்னா உங்க ஏக் தூஜ கே லியே இந்திப் படத்திலே நான்தானே ஹீரோ.

எல்.வி.பிரசாத் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் சொல்றேன். நான் வெளிலே எங்கே போனாலும் குழந்தைங்களெல்லாம் அதோ ராஜபார்வை தாத்தா போறார் அப்படீன்னு சொல்லும்போது அது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்குத் தெ‌ரியுமா? அப்படி அவங்க கூப்பிடும் போதெல்லாம் நான் உங்களைத்தான் நெனச்சுக்கறேன். 25 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்பவோ நடிச்சிருக்கேன். யாருக்கு அது நினைவிருக்கும்? உங்க படத்திலே நடிச்சதனாலே திரும்பவும் மக்கள் மத்தியிலே அவங்க அன்புக்கு நான் பாத்திரமாயிட்டேன்.

கமல் - உங்க நடிப்பு அப்படி அவங்களை கவர்ந்திருக்கு.

எல்.வி.பிரசாத் - நடிக்க வாய்ப்பு கிடைக்கணும் இல்லையா? 1930 -ம் ஆண்டிலே சினிமா உலகிலே நுழைஞ்சேன். நான் ஒரு நடிகனா ஆகணுங்கிற ஆசையிலே மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு பம்பாய்க்கு ரயிலேறினேன். அப்ப என் கையிலே நுhறு ரூபாய்தான் இருந்தது. பம்பாய் போய்ச் சேர்ந்த உடனே ஒரு ஓட்டல்லே ரூம் எடுத்துண்டு தங்கினேன். மூணே நாள்லே நுhறு ரூபா கரைஞ்சு, கையிலே 20 ரூபாதான் இருந்தது. என்னுடைய நிலைமையைப் பார்த்த ஓட்டல் முதலாளி வேறு இடம் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அந்தச் சமயத்தில் ஒரு தையற்காரர் இடம் கொடுத்தார். காலையில் எழுந்தவுடன் அந்தத் தையற்கடையை சுத்தம் செய்து விட்டு வேலைத் தேடி கிளம்பிவிடுவேன். ஒரு நண்ப‌ரின் உதவியால் ஸ்டார் ஆஃப் த ஈஸ்ட் என்ற ஊமைப் படத்திலே ஒரு சின்ன வேஷத்திலே நடிச்சேன். அன்று மேக்கப் போட்டுக் கொண்டவர்கள் நடிகர்கள் மட்டுமல்ல. பல்வேறு உதவியாளர்களும்கூட. ‌ரிப்ளெக்டர், காமிரா ஸ்டாண்டு தூக்குவது முதலிய வேலைகளை நடிகர்களே செஞ்சாக வேண்டும். இப்படித்தான் வாய்ப்புகள் கிடைச்சுது. கொஞ்சம் கொஞ்சமாக உயர முடிந்தது. நான் உழைச்சேன். இல்லைன்னு சொல்லலே. ஆனா அதுக்கும் ச‌ரியான வாய்ப்புக் கிடைக்கணும் இல்லையா? உங்க படம் ராஜபார்வையிலே கிடைச்ச மாதி‌ரி நல்ல வாய்ப்பு அப்போ கிடைக்கல்லே.

கமல் - நீங்க எங்க படத்திலே நடிச்சது என்னோட பாக்கியம்னு நான் நினைச்சுண்டிருக்கேன். பாலசந்தர் சார்கூட ராஜபார்வை பட சமயத்திலே எப்படி இவ்வளவு பெ‌ரியவரை நடிக்க வைச்சேன்னு ஆச்ச‌ரியத்தோட கேட்டார். நான் சமீபத்திலே பொம்மை இதழ்லே நீங்க சொன்னதாக சில வாpகளை படிச்சேன். நான் பெ‌ரிய தமிழ்ப்பட தயா‌ரிப்பாளர் அல்ல, அதிகமான இந்திப் படங்களும் தெலுங்குப் படங்களும்தான் எடுத்திருக்கிறேன் என்று. இப்படி நீங்க சொன்னதால் தமிழ்ப் படங்களுக்கு பெருமை சேர்க்கற மாதி‌ரி நீங்க ஒரு படம் எடுக்கணும். அது என்னோட ஆசை.

எல்.வி.பிரசாத் - வெற்றிப் பாதையில் நான் வலம்வர ஆரம்பித்ததே தமிழ்ப் படங்களின் மூலம்தான். அந்தச் சமயத்தில் தெலுங்குப் படங்கள்கூட எனக்கு அந்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை. மனோகராவில் ஆரம்பித்த வெற்றிக்குப் பிறகுதான் நான் இந்திப்பட உலகிற்கே சென்றேன். எனக்கும் தமிழ்ப் படம் எடுக்க ஆசைதான். அதுவும் உங்களைப் போன்ற ஒரு நடிகர் கிடைத்தால் அது நலக்கேடு போலத் தோன்றும். நலம் (Blessing in disguise) தானே?

கமல் - நீங்க படம் எடுக்கிறதா இருந்தா நான் எந்த disguise nya லேயும் வந்து நடிக்கத் தயார் (இருவரும் சி‌ரிக்கிறார்கள்).

எல்.வி.பிரசாத் - இந்த மனப்பான்மைதான் வளர்ற கலைஞர்களுக்கு வேணும். எல்லா‌ரிடமும் நான் உங்களைப் பற்றி ஒரு விஷயத்தை சொல்றதுண்டு. நடிகர் கமலஹாசனால் இயக்குனருக்கு நன்மை, தயா‌ரிப்பாளருக்கு நன்மை, சக நடிகர்களுக்கும் நன்மை. இப்படி அந்தப் படத்திற்கே கமலஹாசன் என்ற பெயர் பெருமை சேர்க்கும் என்று சொல்வேன். இந்த விருது பெறுவதற்கு நீங்க ரொம்பத் தகுதியானவர். அதுவும் இந்த வருஷம் பாதிக்குமேலே தென்னகத்துக்கு ப‌ரிசுகள் கிடைச்சிருக்கு, ரொம்பப் பெருமை.

கமல் - இந்த வருஷம் மட்டுமல்ல, கடந்த மூணு வருஷங்களாகவே தென்னகம் முன்னணியில் நிற்கிறது. நல்ல படங்களைத் தயா‌ரிக்கிறோம். இது தென்னகத்துக்கு பெருமையே. நீங்க சிறப்பு விருது பெற்ற மற்ற படங்களைப் பார்த்தீர்களா?

எல்.வி.பிரசாத் - ஓ. எல்லாப் படங்களையும் பார்த்தேன். ஒன்பதாவது சர்வதேசத் திரைப்பட விழா டெல்லியிலே நடந்த போது இந்தியப் படங்களைத் தேர்வு செய்யும் குழுவிலே நான் இருந்ததாலே அப்படங்களைப் பார்க்க முடிஞ்சுது.

கமல் - மூன்றாம் பிறை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றி பாலுமகேந்திராவிடம் பேசினீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

எல்.வி.பிரசாத் - உண்மைதான். கிளைமாக்ஸைப் பற்றி பாலுமகேந்திரா சொன்னவுடன் நான் அவருடன் கலந்து பேசினேன். ஆனால் அவரோ இந்த கிளைமாக்ஸ்தான் சிறப்பாக வரும் என்று கூறினார். அவர் கூறியது படம் வெளிவந்தவுடன் உண்மையாயிற்று. ஆனால் அப்போது விருதுகளைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே இல்லை.

கமல் - அதென்னவோ உண்மைதான். படம் எடுக்கும் போது யாருமே அவார்ட்ஸைப் பற்றி சிந்திக்கிறதே இல்லையே. நல்ல படமா எடுக்கணும் படம் நல்ல போகணும் என்கிற நினைப்புதான் எல்லாருக்குமே.

எல்.வி.பிரசாத் - நல்ல படம் அப்படின்னு சொன்ன உடனே மரோசாpத்திரா வை நான் ஹிந்தியிலே எடுக்கணும்னு முடிவு செஞ்சேனே, அதுதான் ஞாபகத்துக்கு வரது. பாலசந்தருக்காக நான் ஆறு மாசம் காத்துண்டிருந்தேன்.

கமல் - பாலசந்தர் சாருக்காக நீங்க காத்துண்டிருந்தீங்க. ஆனா உங்க மனோகரா படத்தைத் தியேட்டர்லே பார்க்க அவர் அறுபது நிமிஷம் காத்துண்டிருந்தாராம்.

இந்த வயசிலேயும் உங்களால எப்படி சுறுசுறுப்பா படங்களை பார்க்கவோ திரைப்பட உலகிலுள்ள முக்கிய சங்கங்களுக்குத் தலைவராகவும், சென்ஸார் போர்டு உறுப்பினராகவும் உழைக்க முடியறது என்பது அதிசயமாக இருக்கு. நாற்பது வயசிலே என்னால் உங்க அளவுக்கு உழைக்க முடியுமா என்பது சந்தேகம்தான். யார் கூப்பிட்டாலும் அவங்கப் படங்களைப் பார்க்கிறீங்க. ஏதோ இப்பதான் படங்களைப் பார்த்து கத்துக்கற மாணவர் மாதி‌ரி அமைதியா உட்கார்ந்து படத்தை ரசிக்கிறீங்க. உங்களால சும்மாவே இருக்க முடியாது. ஏக் தூஜ கே லியே வந்து இரண்டு வருஷங்களாறது, இந்த இடைவெளிலே கண்டிப்பா நீங்க ஆறு ஸ்கி‌ரிப்டாவது எழுதியிருப்பீங்க இல்லையா?

எல்.வி.பிரசாத் - நான் எதிர்பார்க்கற அளவுக்கு எந்த ஸ்கி‌ரிப்டும் ச‌ரியா வரல்லையே.

கமல் - அதைச் சொல்லுங்க. நீங்க வேலை செஞ்சிருக்கீங்க. ஆன எந்த ஸ்கி‌ரிப்டுமே ச‌ரியா அமையலே. படப்பிடிப்புக்குப் போவதற்கு முன் ஹோம்வொர்க் நிறைய செய்யறீங்க. அதனாலதான் உங்க படங்கள் எல்லாமே தரத்தில் என்றுமே குறைவதில்லை.

எல்.வி.பிரசாத் - இந்த நேரத்திலே ஒரு வேண்டுகோள். இன்னொரு தமிழ்ப் படம் நீங்க எடுக்கணும். அதுலே எனக்கொரு வேஷம் கொடுக்கணும்.


கமல் - நான் என்னெல்லாம் உங்களைக் கேக்கணும்னு நினைக்கிறேனோ அதெல்லாம் எனக்கு முன்னாடியே நீங்க கேட்டுக்கறீங்க.

(இருவரும் சி‌ரிக்க உரையாடல் முடிகிறது)

நன்றி - பொம்மை ஜுன் 1983.

இதே நாளில், இன்னொருவரைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகிறேன். இதே 17-ம் தேதி பிறந்தவர்தான் இந்தியாவிலேயே சிறந்த தயாரிப் பாளர்களில், இயக்குநர்களில் ஒருவ ரான எல்.வி.பிரசாத்.

சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்ப வராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘அலெம் அரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார்.

சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். அது பிரபலமாக வளர்ந்தது. நான்கு மாநிலங்களில் கலர் லேபரெட்டரி ஆரம்பித்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தி படத்தை தயாரித்தார். அப்படத்தின் வெற்றி விழா மும்பை மராத்தா மந்தீர் தியேட்டரில் நடந்தபோது, பிரசாத் அவர்கள் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்த எல்லோரும் பதறிவிட்டார்கள். அப்போது பிரசாத் அவர்கள் சொன்னார்: ‘‘இந்த தியேட்டரில்தான் ஒரு காலத்தில் நான் வாட்ச்மேனாகவும், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவனாகவும் வேலை செய்தேன். அதே தியேட்டருக்கு ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளராக வந்தபோது பழைய நினைவுகளெல்லாம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டது’’ என்றார்.

இதை இந்த இடத்தில் நான் சொல்லக் காரணம் - பிரசாத் அவர்களின் ஆரம்பத்தையும், அவர் பெற்ற வெற்றிகளையும் அவருடைய பிறந்த நாளில் நாம் நினைவில் கொள்ளத்தான். சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு பிரசாத் அவர்கள் ஒரு பாடம். தமிழில் ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பிரசாத் அவர்கள் இயக்கிய ‘மிஸ்ஸியம்மா’ படத்தை ஹிந்தியில் ‘மிஸ் மேரி’ என்ற பெயரில் ஏவி.எம். தயாரித்தது. ஹிந்திப் படத்தையும் எல்.வி.பிரசாத் அவர்களே இயக்கினார். அந்தப் படத்துக்கு கே.சங்கர் எடிட்டர். நான் உதவி எடிட்டர். இதனால் பிரசாத் அவர்களின் திறமையை நேரில் பார்த்து, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேன்மக்கள் மேன்மக்களே!

திரைப்படங்கள் என்றால் கண்டிப்பாக எல்.வி.பிரசாத்தின் பங்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடியாது.17-1-1908ல் ஆந்திராவில் பிறந்த அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் தான் எல்.வி.பிரசாத் என்னும் நடிகர்,தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்..இவர் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

நடிக்கும் ஆசையோடு 1930ஆம் ஆண்டு பம்பாய் சென்றவர்க்கு ,,அந்த ஆசை எளிதில் நிறைவேறவில்லை.Star of the East என்னும் மௌனப் படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது.பின்னர் 1931ல் வெளியான ஆலம் ஆரா என்னும் முதல் பேசும் படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

பின்னர் காளிதாஸ், பக்த பிரகலாதா ஆகிய படங்களில் நடித்தவருக்கு அலிஷா என்னும் ஹிந்திப் பட இயக்குநரிடம் உதவி இயக்குநர் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது.எட்டு ஆண்டு காலம் உதவி இயக்குநர் ஆகியும் , ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1949ல் இயக்குநர் ஆகும் ஆசை நிறைவேறியது.'மனதேசம்' என்னும் தெலுங்கு படத்தை இயக்கிநார்.என்.டி.ராமராவ் இப்படத்தில் தான் அறிமுகமானார்.1950ல் விஜயா பிக்சர்ஸ் சார்பில் 'சாவுகாடு' படம் இயக்கினார்...

பின்னர் சம்சாரம், மனோகரா (தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),ராணி (ஹிந்தி) ஆகிய படங்கள் இவரை பிரபல இயக்குநராக ஆக்கின.

1956ல் பிரசாத் ஸ்டூடியோ உருவானது..பின்னர் சில காலம் நோய்வாய்ப் பட்டார்.

பின்னர் 1956ல் பிரசாத் புரடக்சன்ஸ் உருவாக்கினார்.அவர் தயாரிப்பில் மிலன்,கிலோனா,சசுரால்,ஏக் துஜே கேலியே ஆகிய மாபெரும் வெற்றி படங்கள் உருவாயின.

நடிகர்,உதவி இயக்குனர்,தயாரிப்பாளராய் இருந்ததுடன்..இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மும்மொழியிலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப்   படங்கள்..மனோகரா, மிஸ்ஸியம்மா, கல்யாணம் பண்ணிப் பார்,பூங்கோதை,கடன் வாங்கிக் கல்யாணம்,மிஸ் மேரி,மங்கையர் திலகம்,தாயில்லாப் பிள்ளை (கலைஞர்..கதை,வசனம்), இருவர் உள்ளம் (கலைஞர்..கதை,வசனம்) ஆகியவை.

மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 35 படங்களை இயக்கியுள்ளார். எல்.வி.பிரசாத் நடிப்பை பார்க்காதவர்களுக்கு ஒரு நினைவூட்டல்..ராஜ பார்வை படத்தில்..கமல்,மாதவியின் காதலுக்கு உதவும் தாத்தா ஞாபகம் இருக்கிறதா...அந்த பாத்திரத்தில் நடித்தவர் இவர்தான். ஹைதராபாத்தில் கண் மருத்துவ மனைக்கு பல ஏக்கர்கள் இடத்தை அளித்தவர் இவர்.

இந்திய அரசின்'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றவர்.

No comments:

Post a Comment