SHAHU IV MAHARAJ ,ACTIVIST
BORN 1874 JUNE 26 - 1922 MAY 6
நான்காம் சாகுமகராசர் (Shahu IV -Rajarshi Shahu 26 ஜுன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர். 'இராஜர்சி சாகுஜி சத்திரபதி' எனவும் 'சத்திரபதி சாகுஜி மகராஜ்' எனவும் அறியப்பட்டார். சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர். 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர்.
‘சாதியத்தோடு இணக்கம் கொள்ளாத சாகு மகாராசர்’ எனும் கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் முதன் முதலில் 1895-இல் மைசூர் மன்னராட்சியில் பார்ப்பனரல்லாதாருக்கு இட ஓதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து பார்ப்பனர்கள் முறையிட்டதின் விளைவாக இந்த அரசாணை 1921-இல் நடைமுறைக்கு வந்தது. மைசூர், கோல்காபூர், பரோடா ஆகிய மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது.
இதற்கு மூலக்காரணமாக திகழ்ந்தவர் மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்கிற டி. எம். நாயரே ஆவார். இவர்தான் இட ஒதுக்கீட்டின் தேவையை மன்னராட்சிக்கு உட்பட்ட மேற்கண்ட மூன்று இளவரசர்களுக்கும் கற்பித்தார் என்பது வரலாறு. இந்த ஒதுக்கீட்டின் தந்தை மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவது நமது கடமையாகும்.
No comments:
Post a Comment