Sunday 24 June 2018

THE GREAT SHOCK OF M.S.VISWANATHAN




THE GREAT SHOCK OF M.S.VISWANATHAN

எம் எஸ் விஸ்வநாதனுக்கு ஏற்காட்டில் ஒரு பங்களா உண்டு .அதில் கவிஞரும் விஸ்வநாதனும் மெட்டு போட்டு பாடல் எழுதுவார்கள் .

எதிர் வீட்டில் ஒரு வயதான பெண்மணி இவர்கள் பாடலையே எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார் .எம் எஸ் வி - கண்ணதாசன் கூட்டணி பாடல் மேல் அவ்வளவு பிரியம்.ஒரு நாள் அவர் இறந்து விட்டார் .

எம் எஸ் விஸ்வநாதன் -அவர் மனைவியும் துக்கம் விசாரிக்க சென்றனர் .
வழக்கமான தாரை தப்பட்டை எல்லாமே மிஸ் ஆகியிருந்தது மாறாக விசுவநாதன் கண்ணதாசன் கூட்டணியில் உருவான பாடல்களே பாடிக்கொண்டிருந்தது

வீடு வரை உறவு ,வீதிவரை மனைவி 
மனிதன் நினைப்பதுண்டு 
போனால் போகட்டும் போடா 
ஆறு மனமே ஆறு போன்ற பாடல்கள் தான்

காரணம் கேட்டார் எம் எஸ் வி

அவர்கள் சொன்ன பதிலில் உறைந்து 
போனார் எம் எஸ் வி

நான் இறந்து போனால் வாத்திய சத்தம் கேட்க கூடாது 
எம் எஸ் வி -கண்ணதாசன் பாடல்கள் மட்டுமே போட வேண்டும்

No comments:

Post a Comment