PROGRESS OF LOVE IN TAMILNADU
தமிழகத்தின் காதல் பரிமாணங்கள் ..பிரயாணங்கள்
காதல்களும் கொலைகளும் 1950- 59
களில் காதல் என்பது ஒரு கனவு . கனவே தான்.மீறி காதலித்தால் அடி உதை சூடு ...மரணம் இல்ல தற்கொலை -இவை தான் தமிழ்நாட்டு தலை எழுத்து .இதை விடுத்து பெண்கள் ஓடிப்போவதும் உண்டு -அப்படி ஓடிப்போய் விட்டால் நிரந்தரமாய் பெற்றோரை மறந்து விட வேண்டியது தான் .எனவே காதல்கள் ஜன்னல் வரை வந்து ஜன்னலோடுமே முடிவடைந்து விடும்
1960-69
சினிமாக்களின் தாக்கம் அதிகமா இருந்த ஆண்டு இது -காதல் முளைப்பதற்கு அதை வெட்டி எறிவதற்கு என்று போட்டா போட்டி நடந்த காலம் இது -காங்கிரஸ்கா ரர்கள் கருப்பு சட்டைக்காரர்கள் என்ற பேதம் உருவாகி அதுவே சிவாஜி எம்ஜியார் போட்டியாய் உருவெடுத்த காலம்
1965 களிலே தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணிடம் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஒரு சினிமா பாட்டை பாடுவார்கள் - அந்த பெண் வீட்டிலே தண்ணீர் பிடிக்க போக மாட்டேன் என்று அழும் - பின்னர் ஒருநாள் அந்த பையனுக்கு நாலு பேர் வந்து தரும அடி தருவார்கள் - அப்புறம் அந்த பெண் வந்தால் இதர வாலிபர்கள் ஓட்டம் கிண்ணி விடுவார்கள்
அப்போது எனக்கு வயது 10. பனியனோ, இல்ல சட்டையோ அணிந்திடாத நாட்கள் அவை -வறுமையை பறை சாற்றி கொண்டிருக்கும் வரிவரியாக எலும்புகள் .
ஒரு பாடலை பாடினால் அடி விழுமா ? புரியாத அந்த வயதில் எனக்கு ஆச்சரியம் தந்த அந்த பாடல்
" குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் "
மறு வருஷத்தில் இன்னொரு பாட்டுக்கு இளைஞர்கள் அதிக அளவில் தெருவுக்கு தெரு அடி வாங்கி புயலைக்கிளப்பினார்கள் - அந்த பாடல் " சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா "
1968- 1980
1967 இல் திமுக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின - காதல்கள் பெற்றோர்கள் எதிர்பார்ப்பை மீறி ஓடிப்போய் திருமணங்கள் நடை பெற ஆரம்பித்தன . பணக்கார பெண்களை திருமணம் செய்வது சமூக கௌரவமாக பார்க்கப்பட்டது .ஆண்மையின் அடையாளமும் ஆயின
1960 களில் அடிதடி களில் ஈடுபட்ட பெண்ணை பெற்றோரோர்கள் திமுக ஆட்சியில் மிரட்டபட்டனர் - MLA கட்ட பஞ்சாயத்து ஆகி போலீஸ் ஸ்டேஷன் டம்மி ஆக்கப் பட்டது பெண்ணை பெற்றவர்கள் பொறுத்துக்கொள்ளும் காலம் மலிந்தது
1975 களிலிருந்து காதல் திருமணம் தப்பு இல்ல என்ற எண்ணம் மலர ஆரம்பித்தது - முதலில் பணக்காரர்கள் வீட்டு பையன்கள் காதல் நிறைவேற ஆரம்பித்தது -அப்படியே நடுத்தர வர்க்கம் என்று விரிந்தது . பெற்றோர் சொன்னால் போதும் என்ற நிலை மாறியது - ஆண்களும் பெண்களும் பார்த்து சம்மதம் சொன்னால் தான் திருமணம் என்ற முடிவு அனுசரிக்கப்பட்டது -ஏனென்றால் பெற்றோருக்கு பயந்து கழுத்தை நீட்டிய பெண்கள் மாமியார் ,கணவன் ,கொடுமைகளால் அவதிக்கு உள்ளானார்கள்
இந்த கால கட்டம் இளைஞர்களை நம்பி பெண் கொடுத்த காலகட்டம் ஆகும் . திருமணம் ஆண்களால் முடிவு செய்யப்பட்டது - பெண்கள் தலை அசைத்தா ர்கள். ஒரு பையனை விசாரிப்பதென்றால் முழு விவரமும் பல ஆட்களிடம் விசாரிப்பார்கள் . மருமகளை கொலை செய்தவர்கள் ,முறை கேடாய் சொத்து சேர்த்தவர்கள் ஸ்த்ரீ லோலன் ,மது ,சிகரெட் வரை விசாரணை உண்டு -இவர்கள் பெண் கேட்டால் நடுத்தர வர்க்கத்தினர் பெண் கொடுக்கவே மாட்டார்கள்
1980-89
பொம்பளைனா நாலு பேரு பாக்கத்தான் செய்வான் -அதுக்காக அடிச்சிருவியோ ! எங்க இவனை விட்டு உன் பொண்ணை தூக்க சொல்றேன் ..என்ன செய்ய முடியுமோ செய் -
இது 1982 களின் ஆரம்பத்தில் விருதுநகர் MLA சுந்தரராஜ் நடு ரோட்டில் செய்த பஞ்சாயத்து -
நான் நேரில் கண்டது...பார்த்தது ..மிரண்டது
No comments:
Post a Comment