Tuesday 26 February 2019






திராவிட நாட்டை பாவாடைக்குள் தேடிய தலைவன்  இங்கு முரசொலி படித்துக்கொண்டிருக்கிறான் 





வெட்கம் சூடு சொரனை இல்லையா? - ஸ்டாலின்.

இதை பற்றி நீங்கள் பேசலாமா ஸ்டாலின் அவர்களே

ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க தமிழகத்திற்கு வந்த போதும்,

திருவாரூரில் இருந்து டிக்கெட் எடுக்காமல் கக்கூஸில் ஒளிந்துக் கொண்டே ரயிலில் சென்னை வந்த போதும்,

விஞ்ஞான ஊழல் செய்தீர்கள் என சர்க்காரியா கமிஷனால் காரி உமிழப்பட்ட போதும்,

மனைவி, துனைவி, இணைவி என சீயான் மூன்று தாரங்கள கட்டி வாழ்ந்ததுக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பதில் சொன்ன போதும்,

முதல் தாரத்தின் முதல் பிள்ளையான முக.முத்துவை எம்.ஜி.ஆருக்கு பிறந்த எம்.ஜி.ஆரோட பிள்ளையென ஊரே சிரித்து நக்கலடித்த போதும்,

ஸ்டாலினை பேராசிரியர் பிள்ளை என முகஜாடையை ஒப்பிட்டு பேசி உலகமே சிரித்த போதும்,

அடுத்தவன் பொண்டாட்டியான ராசாத்தியை தனது வைப்பாட்டியாக மாற்றி ஆட்டைய போட்ட போதும்,

கனிமொழி தனக்கு பிறந்த மகளே இல்லை என நீதிமன்ற படியேறி பதில் சொன்ன போதும்,

தயாளு அம்மாவுக்கு அல்சிமர் நோய் உள்ளது, மனநிலை சரியில்லாமல் பைத்தியமாக உள்ளார் என நீதிமன்றத்தில் ஊழல் வழக்குக்கு பயந்து வாக்குமூலம் கொடுத்த போதும்,

ஊழலால் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்,

அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கத்தை குடும்ப உறுப்பினர்களை கொண்டு நிரப்பி கம்பெனியாக மாற்றிய போதும்,

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் விரல் சூப்பிய போதும்,

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்த வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் ஆ பார்த்துக் கொண்டிருந்த போதும்,

கூட்டணி தயவில்லாமல் இதுவரை தேர்தலையே சந்திக்க திராணி இல்லாத போதும்,

மைனாரிட்டியாக காங் மற்றும் பாமக-வின் ஆதரவு பிச்சையில் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதும்,

காங்கிரஸ் அண்ணா அறிவாலயத்தின் மேல்தளத்தில் சிபிஐ ரெய்டும், கீழ்தளத்தில் கூட்டணி பேசி மிரட்டி பணிய வைத்த போதும்,

விமர்சனத்தை தாங்க முடியாமல் குடும்ப வாரிசு சண்டை போட்டு தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்ற போதும்,


அந்த படுபாதக செயலை சில மாதங்களிலேயே மறந்து "கண்கள் பணிந்தது, இதயம் இனைந்தது-னு" அழகிரியோடு உறவாடிய போதும்,

நல்லிரவில் கைதாகும் போது ஐயோ அம்மா கொல்றாங்களே என கதறி அழுத போதும்,

எமர்ஜென்சி காலத்தில் கைதாகி போலிஸ் லத்தியால் வாயின் திசை மாறி கோணவாயாக போன போதும்,

பாத்திமா பாபுவை பலாத்காரம் செய்த போதும்,

கனிமொழியோட கனவரின் பெயரை அவரால் கூட சரியாக கூற முடியாத போதும்,

ஸ்பெக்ட்ரம் ஊழலில் செய்து உலகமே கேவலமாக பார்த்த போதும்,

ஊழல் வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் கக்கூஸ் கழுவிய போதும்,

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் நீதிமன்ற குற்றவாளி கூண்டுகளில் தற்போது நின்று கொண்டிருக்கும் போதும்,

கடவுளே இல்லைனு சொல்லிட்டு புட்டபர்த்தி சாயிபாபா-விடம் மோதிரம் வாங்கி அணிந்துக் கொண்ட போதும்,

ஊர் தாலியை மேடை போட்டு அறுத்து விட்டு தன் மனைவிமார்களின் தாலியை தங்கத்தில் தொங்கவிட்டு கொண்டிருக்கும் போதும்,

காசி, ராமேஸ்வரம் முதல் தெருகோடி பிள்ளையார் தெரு வரை எந்த கோவிலையும் விடாமல் துர்கா ஸ்டாலின் விழுந்து புரண்டு கும்பிடும் போதும்,


அரசு பணத்தில் இலவசத்தை லஞ்சமாக திணித்து ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்ட போதும்,

காங்கிரசோடு இனி கூட்டணி கிடையாதென கூறிவிட்டு அதனுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கும் போதும்,

குலத்தொழிலான நாதஸ்வரம் வாசிக்க போ-வென சாதியை சொல்லி திட்டிய வைகோவுடன் தோழமை என கூறி மேடை ஏறிய போதும்,

மக்கள் நல கூட்டணி என கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஆப்படித்த திருமா மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கைகுலுக்கும் போதும்,

சாதிகட்சி சாதிகட்சி என கூறிவிட்டு பாமகவுடன் பல்லை இளித்துக் கொண்டு கூட்டணி வைத்த போதும்,

பழம் நழுவி பாலில் விழுமா என விஜயகாந்துக்காக கடந்த தேர்தலில் இளவு காத்த கிளியாக காத்திருந்த போதும்,







பாமக தயவிலாவது வெற்றி பெற்று விடலாமென நேற்று வரை கூட்டணிக்காக காத்திருந்த போதும்,

சாதி ஒழிப்பு பேசிவிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து சாதி சங்க மாநாட்டு மேடைகளிலும் ஏறி பேசிய போதும்,

அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஒரே கட்சி என்ற பெருமையுடன் சுத்திக் கொண்டிருக்கும் போதும்,

அன்புமணி முதல் நேற்று அரசியலுக்கு கமல் வரை எவரையும் விடாமல் காப்பி அடித்து காலத்தை தள்ளும் போதும்,

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தி அஜித்திடம் மேடையிலேயே செருப்படி பட்டு அவமானபட்ட போதும்,

நயன்தாராவை ஒருதலையாக காதலித்து மகன் உதயநிதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய துனிந்த போதும்,

நாற்பது நாடாளுமன்ற தொகுதியிலும் தோல்வியை சந்தித்து அவமானபட்ட போதும்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்ட கட்சியாக இருந்து எதிர் கட்சியாக கூட தகுதியில்லாமல் விஜயகாந்திடம் தோல்வி அடைந்த போதும்,

ஆர்.கே.நகர் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு டெபாசிட் இழந்த போதும்,

ஒரு பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாமல் மைக்கில் உளறிகொட்டி அசிங்கப்படும் போதும்,

துண்டுசீட்டு பார்த்து படிக்க கூட துப்பில்லாமல் தடுமாறும் போதும்,

ஈழ தமிழர்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் கூட்டணியில் பதவியில் ஒட்டிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்த போதும்,

பிரபாகரனின் தாய்க்கு காங்கிரசை பகைத்து கொள்ள நேரிடுமென சிகிச்சை தரமுடியாமல் திருப்பி அணுப்பிய போதும்,

காலை உணவு உண்டுவிட்டு மாலை உணவிற்கு இடையிலான இரண்டு மணிநேரம் ஏசி சகிதம் படுத்திருந்ததை உண்ணாவிரத போராட்டம் என கூறிய போதும்,

இடுப்புகிள்ளி திமுக, ஓசி பிரியாணி திமுக, ஓசி பஜ்ஜி திமுக, ஈனபெருஞ்சுவர் என்பன போன்று பல விதங்களில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி அவமான பட்ட போதும்,

திமுக ரவுடிகள் செய்த அட்டுழியங்களுக்காக கடைகடையாக ஏறி மண்ணிப்பு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த போதும்,

உலக அரசியல் வரலாற்றிலேயே இருநூறு ரூபாய்க்கு பதிவு போடும் வேலைக்கு ஆள் அமர்த்திய போதும்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பத்தாண்டுகள் தண்டனை பெற்ற போதும்,

நாற்பதாண்டுகளாக முதல்வர் கனவில் இன்னும் கோலம் போட்டுக் கொண்டே இருக்கும் போதும்,

ஒவ்வொரு தேர்தலிலும் அடுத்த தேர்தலில் உயிரோடு இருப்பேனோ செத்திடுவேனோ என அழுது பரிதாப பிச்சையால் கலைஞர் வெற்றி பெற்ற போதும்,

எடப்பாடி ஆட்சியை கூட கலைக்க முடியாத அளவுக்கு ரொம்ப வீக்கான எதிர்கட்சி தலைவனாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும்,

அப்பனோட சொந்த தொகுதியிலேயே இடைதேர்தலில் நிற்க திராணி இல்லாமல் தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்த போதும்,

கலைஞர் இறந்த போது எடப்பாடியாரின் காலில் விழுந்து புரண்டு மெரினாவில் இடம் கேட்டும் கிடைக்காமல் கதறிய போதும்,

மேற்கண்ட நிகழ்வுகள் நடந்தேறிய போதெல்லாம் ஸ்டாலினாகிய உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாகவோ, மானகேடாகவோ இல்லையா? சூடு சொரனையே வரலையா?

சரி இவ்வளவு அசிங்கமாகவும் வாழ்ந்துவிட்டு நீயெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனைய பத்தி பேச கொஞ்சம் கூட கூச்சமாவே இல்லையா???

சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க

நன்றி : ஆனந்த் வாண்டையார்...

Sunday 24 February 2019



உலக நாயகனும் ,
உலக்கை நாயகனும் 








’்எட்டப்ப நாயக்கர்களின் பெருமைகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எட்டையாபுரத்தில் இன்று வரை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் திரையிட பட்டதே இல்லை 
காரணம் இருக்கும் ஒரு சினிமா கொட்டகை எட்டப்பரின் வாரிசுகளால் நடத்தப்படுவதே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஜுலியஸ் சீசர் "யூ டூ ப்ரூட்டஸ்?' என்று கேட்கும் வாசகம் போல எட்டப்பர் பெயர் சொன்னாலே காட்டிக் கொடுத்தவர் என்ற பழிச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இதனை மறுக்கிறார்கள்.

எட்டப்பர் ஆங்கிலேயர்களோடு நெருக்கமாக இருந்தது உண்மை. வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தார் என்றும், சூழ்ச்சிகள் செய்தார் என்றும் வலம் வரும் செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

எட்டையபுரத்தினை ஆண்ட எட்டப்ப வம்சத்தினர் கலை இலக்கியத்திற்கும், மக்கள் நலத்திற்கும் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை.

கி.பி.856-ஆம் ஆண்டு சந்திரகிரி பகுதியினை ஆண்ட மன்னர் பரம்பரையில் பிறந்தவர் நல்லம நாயக்கர். அவர் ஒரு சமயம் விஜயநகரம் செல்லும்போது சோமன் என்ற மல்யுத்த வீரன் பாதையை மறைத்துக் கொண்டு, தன்னுடன் யுத்தம் புரிய வேண்டுமென்று அவரை நிர்பந்தித்தான். இருவரும் போரிட்டனர். இறுதியில் நல்லம நாயக்கர் வென்று விடுகிறார்.

உயிர் போகும் தருவாயில் சோமன் தனது எட்டு தம்பிகளும் ஆதரவில்லாமல் போய்விடுவார்களே என்று வருந்தினான். அப்போது "கவலை வேண்டாம், உன் தம்பியர் எட்டு பேரும் இனி என் பிள்ளைகள்' என நல்லம நாயக்கர் வாக்களித்தார்.

எட்டுப் பிள்ளைகளுக்கு தந்தை ஆனதால் "எட்டப்பர்' என்றும், விஜயநகர அரசர் தன் உயிர் காத்தமைக்கு அய்யன் என்ற பட்டத்தை வழங்கியதால் "எட்டையன்' என்றும் அழைக்கப்பட்டார். எட்டப்ப நாயக்கர் வம்சாவளியினர் இளம் புவனம் பகுதியை எட்டையபுரம் என்று பெயர் சூட்டி தங்கள் தலைநகராக மாற்றிக் கொண்டு ஆட்சி புரியத் துவங்கினர்.

ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின், மூன்றாம் மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம், தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையினை கம்பெனியினர் பெற்றுக் கொண்டனர்.

நில அளவையின்போது பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான மூன்று ஊர்களை எட்டையபுரத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிவிட்டனர். இது பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டையபுரத்திற்கும் இடையே பிரச்னை உருவாகக் காரணமானது.

தமிழ்நாட்டில் அப்போது இருந்த 72 பாளையங்களில் 30 பாளையங்கள் நெல்லைச் சீமையில்தான் இருந்தன. அவற்றில் எட்டையபுரம் ஜமீனே அளவில் பெரியது. சுமார் 500 கிராமங்கள் அடங்கிய சமஸ்தானம்.

வெங்கடேஸ்வர எட்டப்பரின் மரணத்திற்குப்பின் வாரிசு இல்லாத நிலையில் குருமலை துரை ஜமீன் ஆட்சிக்கு வந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எட்டையபுரத்தின் வெங்கடேஸ்வரபுரம் கோட்டைமீது படையெடுத்தார். இதனைத் தடுக்க எட்டையபுர தளபதிகளான ராமநாத பிள்ளை, மாணிக்கவாசகம் பிள்ளை ஆகிய இருவரும் போருக்குச் செல்ல, போர்க்களத்தில் ராமநாத பிள்ளை இறந்து விட்டார். பாஞ்சாலங்குறிச்சிக்காரர்கள் ஆதனூர் கோட்டையினைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

மன்னர் குருமலைத் துரை 1783-இல் இயற்கை எய்த, அவருடைய மூன்றாம் தலைமுறையான முத்து ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் கட்டபொம்மனுக்குமான வரி பாக்கி பிரச்னையில் பகை வளர்ந்தது. நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட, வெள்ளையர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் அடக்கப்பட்டனர்.

1799 செப்டம்பர் 4-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெள்ளையர்களால் முற்றுகையிடப்பட, கட்டபொம்மன் தன்னுடைய படை வீரர்களோடு கோலார்பட்டி வந்து, பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்று காடுகளில் மறைந்திருந்தார். அங்கு கைது செய்யப்பட்டு 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் கயத்தாறு சாலையிலிருந்த புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வு இது. வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வீரதீரம் இன்றைக்கும் போராளிகளுக்கான பால பாடம்.

பாஞ்சாலங்குறிச்சி போர்களுக்குப்பின், அதன் ஆறு பகுதிகள் எட்டயபுரத்தோடு சேர்க்கப்பட்டன. முத்து ஜெகவீரராம குமார எட்டப்பர் 1783 முதல் 1816 வரை ஆட்சி செய்தார்.

நாகலாபுரம், குமாரட்டையாபுரம், கழுகுமலை, குளத்துவாய்பட்டி, எட்டையபுரம், வேடநத்தம், புதியம்புத்தூர் ஆகிய ஊர்களில் கோயில்கள், குடிதண்ணீர் குளங்கள், அன்னச் சத்திரங்களைக் கட்டியெழுப்பினார்.

முத்து ஜெகவீரராம குமார எட்டப்பரின் மூத்த புதல்வர் ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் 1839 முதல் 1852 வரை ஆட்சி செய்தார்.

அவருக்குப் பின், 1852}இல் ஆட்சிக்கு வந்த வெங்கடேஸ்வர எட்டப்பர், எட்டையபுரம் நடுவப்பட்டிக்குச் சாலை அமைத்ததோடு, கழுகுமலை கோயிலில் பெரிய மண்டபமும், எட்டையபுரத்தில் சண்முக விலாசம் என்ற புதிய கோட்டையையும் கட்டினார். நடுவப்பட்டி, புதுப்பட்டி குளங்களும் தூர் வாரப்பட்டன.

வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கருக்குப் பின், 1868-ஆம் ஆண்டு ஜமீனாக ஆட்சிப் பொறுப்பேற்றவர் குமார எட்டப்பர். 1877-78}இல் எட்டையபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

திருவாங்கூரில் செயல்பட்டுவந்த ஊட்டுப்பாறை என்னும் உணவு விடுதிகளைப் பார்த்து, எட்டையபுரத்திலும் 64 உணவு விடுதிகள் அமைத்து மக்களுக்கு உணவும், கால்நடைகளுக்குத் தீவனங்களும் இனாமாக வழங்கினார். திண்ணைப் பள்ளிக் கூடங்களைக் கட்டியெழுப்பினார்.

தாமிரவருணியின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் பாலம் கட்ட 3,500 ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

சுப்புராம தீட்சிதர் மகாபாரதத்தை மொழிபெயர்த்தது, கடிகை நமச்சிவாய புலவர் வில்லிபாரதம் நாட்டிய நாடகத்தில் உள்ள பாடல்களுக்கு வர்ண மெட்டுக்களையும் ஸ்வரங்களையும் ஏற்படுத்தியது, தீட்சிதர் தமிழில் வம்சமணிதீபிகை என்ற நூலை இயற்றியது இவையனைத்தும் வெங்கடேஸ்வர எட்டப்பரின் சமஸ்தானத்தில்தான்.

1890-இல் வெங்கடேஸ்வர எட்டப்பரின் மறைவுக்குப் பின் அவருடைய மகன் 12 வயது சிறுவனாக இருந்ததால், 1890 முதல் 1899 வரை ஆங்கிலேய சர்க்காரின் கையில் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. 1899-இல் தனது 21-ஆம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைனர் ராஜா, எட்டையபுரத்தில் நவீனமுறையில் 64 விவசாயப் பண்ணைகளை அமைத்து வேளாண்மையைப் பெருக்கினார்.

பண்ணை விவசாயத்தின் விளைபொருள்கள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு தானியங்களே மக்களுக்குக் கூலியாக வழங்கப்பட்டன.

எட்டையபுரம் 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பேஷ்கார் என்ற ரெவென்யூ இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெங்கு ஐயர் என்பவர் எட்டையபுரத்தின் முதல் தாசில்தாராகப் பொறுப்பேற்றார். தனது ஆசிரியராகவும், வளர்ப்புத் தந்தையாகவும் இருந்த ராவ்பகதூர் ஜெகந்நாத செட்டியாரையே திவான் பொறுப்பேற்க வைத்தார்.

கிராம கணக்கு வழக்குகள் ஜாமபந்தி முறையில் சரிபார்க்கப்பட்டன. சுமார் 12 மைல் தூரம் விளாத்திக்குளம் சாலை அமைக்கப்பட்டது. மருத்துவமனை, உயர்நிலைப் பள்ளிகள், பெண்களுக்குத் தனிப் பள்ளிகள், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, குழந்தைகளுக்கு பால் என்று கல்விக்கும் உணவுக்கும் வகை செய்தார் எட்டப்ப நாயக்கர்.

தமிழ், ஆங்கில, சம்ஸ்கிருத நூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்றை அமைத்தார். "இளசை வித்தியா விலாசினி' என்ற அச்சுக்கூடம் நிறுவப்பட்டு முதன் முதலில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு அச்சு எழுத்துகளைக் கொண்டு வந்து "சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி' என்ற இசை நூல் அச்சிடப்பட்டது.

எட்டையபுரம் ஜமீன்தாரே "ஞானவல்லி', "சுத்தசேனன்' ஆகிய இரண்டு நாடகங்களை எழுதினார். ஜமீனின் ஆங்கிலப் பேராசிரியர் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாடக அரங்குகள் கட்டி "வந்தே மாதரம்' பாடலை அரங்கில் ஒலிக்கச் செய்தார்.

உமறுப்புலவர், மகாகவி பாரதி, நாவலர் சோமசுந்தர பாரதி, சங்கீத வரலாற்றில் முத்திரை பதித்த முத்துசாமி தீட்சிதர், பாலுசாமி தீட்சிதர், நாடக உலக மும்மூர்த்திகளில் ஒருவரான் காசி விஸ்வநாத பாண்டியன் ஆகியோர் எட்டையபுரம் ஜமீன்களால் ஆதரிக்கப்பட்டவர்கள்.

இசைப்பள்ளு என்கிற நாடோடி இலக்கியம், ராமநூத்து மணிமுத்துப் புலவர் இயற்றிய வைணவப் பாசுரங்கள் ஆகியவை எட்டையபுர சமஸ்தானத்தால் வழங்கப்பட்டவையே. இசைஞானியாகிய விளாத்திகுளம் சாமிகளை சீராட்ட நினைத்த எட்டப்பருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எட்டையபுரம் மக்கள், நெல் குவியலை மரக்காலால் அளக்கும் போது, ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக்கொண்டே வந்து, ஏழுக்குப் பிறகு, எட்டு என்று கூறாமல் "மகாராஜா' என்று எண்ணுவார்களாம்.

எட்டாம் எண் மகாராஜாவின் பெயர் போல இருப்பதால் தங்கள் அரசனை பெயர் சொல்லி அழைக்கக் கூடாதென்று இப்படி எண்ணி இருக்கிறார்கள். பதினெட்டாவது எண்ணுக்கு "பத்து மகாராஜா' என்று கூறுவர்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் பகை இருந்திருக்கலாம். எட்டையபுர மண்ணின் வீரத்தையும் எட்டப்ப நாயக்க வம்சத்தினர் ஆற்றிய அரும்பணிகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.

எட்டையபுரம் மன்னரின் மரணத்தைக் கூறும் நாட்டுப்புறப் பாடலொன்று, "ஆடழுக மாடழுக அஞ்சு லட்சம் ஜனமழுக, பட்டத்து யானையெல்லாம் பாதையிலே நின்னழுக...' என்று விவரிக்கிறது. குறையொன்றுமில்லை எட்டப்பா...

WANTED DEATH OF ELDERS DECIDED BY SONS AND DAUGHTER INLAWS






பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்; பெற்றோருக்கு பஞ்சுப்பால்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாட்டின் பல பாட்டிகள் மற்றும் தாத்தாக்களுக்கும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாமலே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப்போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன்.
நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களுக்கு பஞ்சில் நனைத்தோ, பாலாடை மூலமாகவோ அல்லது தேக்கரண்டி கொண்டோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பால் ஊற்றும் நடைமுறை வெளிப்பார்வைக்கு அன்பான மரபுவழிச் சடங்காக தெரிந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் அந்த வயதானவரை சீக்கிரம் மரணிக்கச் செய்வதே என்கிறார் கி ரா.

இப்படி ஊற்றப்படும் பால் அந்த முதியவருக்கு கபத்தை அதிகப்படுத்தி மூச்சுத்திணறி இறக்கச் செய்யும் அல்லது அவருடைய நுரையீரலுக்குள் சென்று அதன் விளைவாக அவரது மரணத்தை வேகப்படுத்தும் என்கிறார் கி ரா. அந்தப்பால் ஊற்றப்படுவதன் நோக்கமும் அதுவே என்கிறார் அவர்.
வெறும் பஞ்சுப்பால் மட்டுமல்ல, முதியவர்களின் உயிரை உடனடியாக பறிப்பதற்கு இன்றளவும் ஏராளமான நடைமுறைகள் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன. நாணயத்தை பானை ஓட்டில் தேய்ந்து ஊற்றுவது, தங்கத்தை பானை ஓட்டில் அல்லது கல்லில் தேய்த்து அதைக்கழுவி அந்த தண்ணீரை ஊற்றுவது, வீட்டு மண் அல்லது வயல் மண்ணை கரைத்து வாயில் ஊற்றுவது என்கிற பழக்கங்கள் எல்லாமே படுக்கையில் இருக்கும் முதியவரை வேகமாக இறக்கச் செய்வதற்கான செயல்களே என்கிறார் கி ரா.

தலைக்கூத்தல்: ஊரும் உறவும் கூடிச் செய்யும் முதியோர் கொலை
இப்படியான நடைமுறைகளில் தலைக்கூத்தல் என்கிற நடைமுறை இன்றும் பரவலாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. அது முன்பு குளிப்பாட்டி படுக்க வைத்தல் என்கிற பெயரில் கரிசல்காட்டுப்பகுதியில் கடைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் கிரா. அந்த நடைமுறைகளை நேரில் கண்டவர் அவர்.
அதன்படி, கரிசல்காட்டுப்பகுதியில் நீண்டநாட்களாக ஒரு முதியவர் படுத்த படுக்கையாக இருந்தால் அவரது வீட்டுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் தத்தம் அளவில் பல குடங்களை சேகரிக்கத்துவங்குவார்கள். சுமார் நூறு குடங்கள் வரை இப்படி சேகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த குடங்கள் அனைத்தும் இந்த முதியவர் வீட்டு முற்றத்திள் கொண்டுவந்து வைக்கப்பட்டு அந்த குடங்கள் அனைத்திலும் நீர் நிரப்பப்படும்.

அந்த குறிப்பிட்ட நாளில் அந்த முதியவர் அவர் படுத்திருக்கும் கட்டிலோடு வீட்டில் இருந்து வெளியில் முற்றத்திற்கு கொண்டுவரப்படுவார். அவர் தலைமுதல் பாதம்வரை உடல் முழுக்க அடர்த்தியாக விளக்கெண்ணெய் அழுத்தித்தடவப்படும். அடுத்து அந்த முதியவரை ஒருவர் அந்த கட்டிலில் உட்கார்ந்த நிலையில் பிடித்துக்கொள்ள கூடியிருக்கும் ஆட்கள் அந்த குடங்களில் இருக்கும் தண்ணீரை மளமளவென முதியவர் தலையில் கொட்டுவார்கள். ஒரு அருவி போல தொடர்ச்சியாக கொட்டப்படும் இந்த குளிர்ந்த தண்ணீரில் அந்த முதியவர் மூச்சுத்திணறி இறக்கும் சம்பவங்கள் நடக்கும். ஒருவேளை அதற்கும் தப்பிப் பிழைப்பவர்கள், விளக்கெண்ணெய் மற்றும் குளிர்நீர் குளியலால் வரும் ஜன்னிக்காய்ச்சலுக்கு பலியாவார்கள் என்கிறார் கிரா. இப்படியான மரணங்களை கலியாண சாவு என்று அழைப்பதுடன், இந்த மரணத்துக்காக யாரும் அழக்கூடாது என்று சொல்வதும், இறுதி ஊர்வலத்தை வெகு விமரிசையாக செய்வதும் கரிசல் காட்டில் வழமை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஏதோ தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியான கரிசல் காட்டில் மட்டுமல்ல, கடலைப்போல ஏரியைக்கொண்ட கடலூர் பகுதியில் இன்றுவரையிலும் கடைபிடிக்கப்படுவதாக சொல்கிறார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ஜே ஆர் சிவராமகிருஷ்ணன்.

கடலூர் பகுதியில் இந்த நடைமுறை தலைக்கூத்தல் என்கிற பெயரில் நடப்பதாக கூறுகிறார் சிவராமகிருஷ்ணன். பொதுவாக நீண்டநாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள் அமாவாசையன்று இறந்துவிடுவார்கள் என்று கிராமங்களில் நம்பிக்கை நிலவுவதாக தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், அமாவாசையன்று இறக்காத முதியவர்களுக்கு அடுத்த சிலநாட்களில் இந்த தலைக்கூத்தல் சடங்கு நடத்தப்படும் என்கிறார்.
இப்படியான நடைமுறையை சம்பந்தப்பட்டவரின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரும் உறவும் கூடிப்பேசி திட்டமிட்டே செய்வதாக சொல்கிறார் சிவராமகிருஷ்ணன். குறைந்தது 50 பேராவது கூடிப்பேசி முடிவெடுத்த பிறகு எல்லோரும் அந்த வீட்டில் குழுமி இந்த தலைக்கூத்தலை நடத்துவார்கள் என்கிறார் அவர்.
படுத்தபடுக்கையாக இருக்கும் முதியவரின் தலையிலும் உடலிலும் விளக்கெண்ணெயை நன்கு தடவி ஊறவைத்து பச்சைத்தண்ணீரில் குளிக்கச் செய்து, குளித்து முடித்ததும் இளநீரை அவருக்கு குடிக்கச் செய்வார்கள். இப்படிச் செய்தால் இரண்டு மணிகளில் அவருக்கு ஜன்னி வந்து இறந்துவிடுவார் என்று தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், இதில் இந்த எண்ணெய்க்குளியலை அந்த முதியவரின் மனைவி, அல்லது படுக்கையில் இருப்பது மூதாட்டியாக இருந்தால் அவரது கணவர் வீட்டுப்பெண்கள் நடத்துவது மரபு என்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுமே அந்த நோய்வாய்ப்பட்ட முதியவரின் உடலை விட்டு நீங்க மறுக்கும் அவரது ஆன்மாவுக்கான விடுதலை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறதே தவிர, அது ஒரு உயிர்க்கொலையாக பார்க்கப்படுவதில்லை என்று கூறும் சிவராமகிருஷ்ணன், இன்றளவும் இந்த நடைமுறை நீடிக்கவே செய்கிறது என்கிறார்.
இவர் சொல்வது போன்ற இரண்டு சம்பவங்களை தன் சொந்தவாழ்வில் பார்த்ததாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரதிபா. இவரது தாய்வழிப்பாட்டிக்கு தலைக்கூத்தல் நடந்த பிறகே அவர் உயிர் பிரிந்தது. தந்தை வழிப்பாட்டியின் மரணத்தை எதிர்பார்த்து அவரது பிள்ளைகள் மற்றும் பேரன்கள் எல்லோரும் குடும்ப சகிதமாக கிராமத்துக்குப் போய் காத்திருந்த போதும் அவர் உயிர் பிரியாத நிலையில் அவரது உயிர் பிரியவேண்டும் என்பதற்காக பஞ்சுப்பால் ஊற்றியது முதல் இறப்புக்கான சிறப்பு பிரார்த்தனை வரை பலதும் செய்து, கடைசியில் கோவில் மண்ணை கரைத்து ஊற்றுவதற்காக அந்த குறிப்பிட்ட கோவில் மண்ணை எடுத்துவரப்போன பிறகு தான் அவரது மரணம் நடந்ததாக கூறினார் பிரதிபா.
பிரதிபாவின் பாட்டிகளுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. தமிழ்நாட்டின் பல பாட்டிகள் மற்றும் தாத்தாக்களுக்கும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாமலே..



Baaram (transl. The Burden) is a 2018 Indian Tamil-language film written, directed and edited by Priya Krishnaswamy. It won the National Film Award for Best Feature Film in Tamil, the only Tamil film to win at the 66th National Film Awards.Plot
Karuppasamy, a widowed night watchman, lives with his sister and three nephews – Veera, Mani and Murugan – at a town in Tamil Nadu. One morning after returning from his shift, he breaks his hip in an accident. While his nephews want him to be treated in town, his son Senthil takes him to his ancestral village, to be healed by a traditional healer. Eight days later, Karuppasamy dies. His mysterious death gets Veera, an activist, suspicious.

Production
After making her debut feature film, Gangoobai, Priya Krishnaswamy chanced upon news items regarding the practice of Thalaikoothal in online news portals. Upon further research, she realised that Thalaikoothal, a phenomenon she had never heard of before, was, in fact, an ongoing cultural practice which enjoyed social sanction in wide swathes of rural Tamil Nadu. Concerned with the burgeoning problem of an ageing population in India, and a complete lack of social and medical infrastructure to cater to the elderly, she wrote the script of Baaram in two weeks in mid-2016, and decided to produce the film herself, under her banner, Reckless Roses, in collaboration with Ardra Swaroop. Accordingly, they approached the Department of Performing Arts, Pondicherry University, where Priya conducted acting workshops, and succeeded in sourcing the main cast.[1] Additional roles, numbering more than 80, were played by local non-actors. The film was shot in a realistic style akin to the Dogme school of cinema, with long takes, handheld shots and sync sound. No dialogue dubbing was done.[2] It was shot in Pondicherry and Tirunelveli in 18 days in January 2017.[3][4]

Festivals and awards
Baaram premiered in November 2018 in the Indian Panorama section of the 49th International Film Festival of India (IFFI), Goa.[5] It was also one of two Indian films nominated for the ICFT UNESCO Gandhi Medal at the IFFI, Goa, 2018.[6][7] The ICFT UNESCO Gandhi Medal is an international competition section of IFFI that is evaluated by a jury in Paris.[8] Baaram later won the National Film Award for Best Feature Film in Tamil,[9] the only Tamil film to win at the 66th National Film Awards.[10] It is scheduled to be released in Indian theatres on 21 February 2020.[11]

Critical reception

Cinestaan gave the film 4 out of 5 stars at the 49th IFFI, saying, "Baaram is a beautifully crafted social film which will make you question your own actions and rethink your stand on the grave subject of mercy killing."[12]



ம.தி.மு.க. தோன்றிய வரலாறு..!

'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வினை சென்ற வார 'ஜூனியர்விகடன்' இதழ் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய செய்திக்குள் நுழையும் முன்னர், ம.தி.மு.க. தோன்றியதன் பின்னணியை எனக்குத் தெரிந்தவரையிலும் முன்கதைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.. ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்..!

“திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோவுக்கு புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன..” என்றெல்லாம் பல்வேறு செய்திகள் 1988-ம் ஆண்டில் இருந்தே பத்திரிகைகளில் கிசுகிசுவாக சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வந்ததுதான்..!

இந்த கிசுகிசுவின் முக்கிய சாரமே தனது மகன் மு.க.ஸ்டாலினை தனது கட்சி வாரிசாக கொண்டு வருவதற்காக கருணாநிதி, வைகோவை கொஞ்சம், கொஞ்சமா புறம்தள்ளி வருகிறார் என்றுதான் தகவலைப் பரப்பி வந்தன..! இதில் உண்மை இல்லாமல் இல்லை..!

ஆனால் கலைஞரின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்து 20 ஆண்டு காலம் கட்சியின் சார்பில் எம்.பி.யாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த வைகோவின் மீது தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களும், கலைஞரும் கசப்புணர்வை உமிழத் துவங்கியது வைகோ யாரிடமும் சொல்லாமல் ஈழத்திற்குச் சென்று வந்தபோதுதான்..!

1989-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி டெல்லியில் பிதமர் ராஜீவ்காந்தியை தனது மதியூக அமைச்சர் முரசொலி மாறனுடன் சந்தித்துப் பேசினார் முதல்வர் கலைஞர். அதே நாள் இரவில்தான் வைகோவும் கோடியக்கரை கடற்கரையில் இருந்து புலிகள் அனுப்பிய படகில் ஏறி வவுனியா சென்றார்.

இந்தப் பயணம் குறித்து அவர் கருணாநிதியிடமோ, கட்சிப் பொறுப்பாளர்களிடமோ எந்தத் தகவலையும் சொல்லவில்லை. அவர் ஊரில் இல்லை என்ற தகவலுடன் ஈழத்திற்குப் பயணமாயிருக்கிறார் என்பதையும் தினமணி இதழ் செய்தியாக வெளியிட்டது. இதன் பின்புதான் தமிழ்நாட்டுக்கே இந்த விஷயம் தெரிய வந்தது..!

“ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இப்படி முறையான அனுமதியில்லாமல், வேறோரு நாட்டுக்குள் போகலாமா..?” என்றெல்லாம் கூச்சல்கள் தமிழ்நாட்டில் எழத் தொடங்கியவுடன் அறிவாலயம் சங்கடப்பட்டது..!

இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் 19.02.1989 அன்று விடுத்த அறிக்கையில், “வைகோ இலங்கை சென்றது குறித்து என்னிடமோ, தலைவரிடமோ அனுமதி பெறவில்லை. பிரதமர் ராஜீவ்காந்தியுடன், முதல்வர் கலைஞர் அண்மையில் பேசியதற்கும் இந்தப் பயணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..” என்று சொல்லியிருந்தார்.

அப்போது நடைபெற்று வந்த சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் குமரி அனந்தன் இதைப் பற்றி கேள்வி எழுப்பியபோதும் இதையேதான் சொல்லியிருக்கிறார் கலைஞர்.

பிப்ரவரி 24-ம் தேதியன்றுதான் கலைஞருக்கு, வைகோ எழுதியனுப்பிய ஒரு கடிதம் கிடைத்தது..!

அந்தக் கடிதத்தில் வைகோ எழுதியிருந்தது இது..!

05-02-1989

என் உயிரினும் மேலான சக்தியாய் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருந்து என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன்..!

கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என் மீது எந்தக் கட்டத்திலும் ஏற்படாத வண்ணம் பயம் கலந்த பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான், பல இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக நான் எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத் திருநாட்டில் வவுனியா காட்டுப் பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்..

தமிழகத்தில் வரலாறு இதுகாறும் கண்டறியாத மகத்தான அத்தியாயத்தைப் படைத்துவிட்டீர்கள்.. தரணியெங்கும் வாழும் தமிழர்கள் களிப்புடனும், பெருமிதத்துடனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்குத் தங்களால் விடிவும், விமோசனமும் பிறக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் உலகமெங்கும் வாழும் தன்மான உணர்வுள்ள தமிழர்கள் ஏகத்தோடும், தவிப்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் உலகம் உள்ளவரை சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி உயிரோவியங்களாக சங்கத் தமிழையும், குறளோவியத்தையும் எண்ணற்ற பல காவியங்களையும் தமிழன்னைக்கு ஜொலித்துடும் ஆபரணங்களாகச் சூட்டிவிட்டீர்கள். சராசரி முதலமைச்சராக உங்களை என் மனம் கணிப்பதில்லை. செந்நீரில் கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மாற்றித் தரணியில் தமிழனுக்கும் தலைநிமிர்ந்து வாழும் நிலை அமைந்திட என் தலைவன் காரணமானார் என்பதையும் அகிலம் காண வேண்டும் என்பது எனது தணியாத தாகம்.

ஈழப் போர்க் களத்தில் பிரபாகரன் உறுதியான நிலையொன்றை எடுத்துக் கொண்டு அதிலேயே வலுவாக ஊன்றி நிற்கிறார். அந்தக்காரத்துக்கு இடையே மின்னிடும் ஒரு ஒளி ரேகையாக உங்களை நம்பியிருப்பதாக மரண பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து எழுதினார்.

காலமறிந்து, இடமறிந்து, மாற்றால் வலியறிந்து, தன் வலியையும் கணித்து வியூகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனது ஈழப் பயண எண்ணத்துக்குக் காரணமாயிற்று..!

13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல், மத்திய அரசுடன் மோதுகிற நிலையையும் தவிர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாகக்கக் கூடிய வழிமுறைகளைக் காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சினையை விவாதித்து கருத்துக்களைப் பரிமாறி அதன் மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற மனப்பான்மையை உருவாக்கிடவும், உண்மை நிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

சிங்கள ராணுவத்தினிடமோ, இந்திய ராணுவத்தினிடமோ நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக அரசுக்கோ இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எதுவும் ஏற்படாவண்ணம் நான் செயல்படுவேன். என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்..!

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஈரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்கிறேன் என்று எனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறியுள்ளேன். எனது பயணத் திட்டத்தை எவரும் அறிய மாட்டார்கள். ஆனால் எதையும் அறிந்து கொள்ளும் தங்களின் உள்ளுணர்வுதான் பாயும் புலி பண்டாரக வன்னியனின் இந்த வார அத்தியாதத்திற்கு நண்பர்கள் சந்திப்பு என்னும் தலைப்பு தந்தது போலும்..

'இரத்தம் கசியும் இதயத்தின் குரல்' என்ற எனது நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் 'நான் தாயானேன்' எனக் குறிப்பிட்டீர்கள்.. 'மானம் எனது மகன் கேட்ட தாலாட்டு..' 'மரணம் அவன் ஆடிய விளையாட்டு' என்ற தங்களி்ன் வரிகளை ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்கியுள்ளேன். தொண்டைக் குழியில் ஜீவன் இருக்கும்வரை தங்கள் புகழையே என் உதடுகள் உச்சரிக்கும்.

வாழ்நாளில் தங்களின் அன்பையும், பாசத்தையும் பிறவிப் பெரும் பயனாகப் பெற்றிருக்கின்ற தங்களின் தம்பி வை.கோபால்சாமி..

இப்படி தனது பாணியிலேயே வைகோ உருக வைத்திருந்தாலும், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், பத்திரிகைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது தி.மு.க. தலைமை..!

அந்தக் காலக்கட்டத்தில் ஈழப் பிரச்சினையில் சற்றுத் தெளிவான நிலைமைக்கு வந்திருந்த ராஜீவ்காந்தி இதனை வைத்து அரசியல் செய்யவில்லை. “வைகோ ஈழத்திற்கு ரகசியப் பயணம் சென்றிருக்கிறார்..” என்பதை கலைஞர்தான் தர்மசங்கடத்துடன் ராஜீவ்காந்தியிடம் பிப்ரவரி 10-ம் தேதியன்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு சற்றும் வித்தியாசப்படாத ராஜீவ்காந்தி.. “சரி அவர் திரும்பி வந்ததும் ஈழப் பிரச்சினை குறித்து நாம் மேலும் பேசுவோம்..” என்று கலைஞரிடம் அன்போடு சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு தி.மு.க.வை கேள்வி கேட்டு குடைந்தார்கள். அதிலும் வாழப்பாடி ராமமூர்த்தியின் அட்டூழியம்தான் அதிகம்..!

இன்னொரு பக்கம் தி.மு.க.விலேயே கடும் புகைச்சல். 13 ஆண்டு கால வனவாசம் கழித்து ஆட்சி பீடம் ஏறியிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய சர்ச்சைகள் நமக்குத் தேவைதானா..? இப்போது யார் இவரை அங்கே போகச் சொன்னது என்று முரசொலி மாறன் முதற்கொண்டு பல முக்கியஸ்தர்களும் கேட்டுத் தொலைக்க.. அத்தனைக்கும் கலைஞர் மெளனமாகவே இருந்திருக்கிறார்.

சரியாக 23 நாட்களுக்குப் பின்பு போன வழியிலேயே தாயகம் திரும்பினார் வைகோ. கோபாலபுரம் சென்று கலைஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். கடிதமும் கொடுத்திருக்கிறார்..!

இதனால் வைகோவுக்கு பொதுவான தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு இமேஜ் கிடைத்தது என்றாலும், தி.மு.க.வில் அவர் மீது கசப்புணர்வுகள் தொடங்கின. தலைமையை மீறி உருவெடுக்கிறார் என்கிற உள்ளுணர்வின் எச்சரிக்கையின்படி இதன் பின்புதான் வைகோவை ஓரங்கட்டுதல் அதிகமானதாகத் தெரிகிறது..!

இரண்டாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சி சுப்பிரமணிய சுவாமியின் தூண்டுதலில் சந்திரசேகரால் கலைக்கப்பட்டு பின்பு தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி கொலையும் செய்யப்பட்டுவிட.. புலிகள், ஈழம் என்று தமிழகத்தில் சிறிது காலத்திற்குப் பேசவே முடியாத நிலையும் உருவானது.

வைகோவின் புலி பாசம்.. அவருடைய பிரபாகரன் பிரச்சார உரைகள்.. அவர் வவுனியாவுக்கு ரகசியமாகச் சென்று வந்தது.. புலித் தொடர்பினால் ஆட்சிக் கலைப்பு.. என்ற கோபம் தி.மு.க.வின் தொண்டர்களைவிட தி.மு.க.வின் மேலிடத்திற்கு வைகோ மீது கடும் கசப்புணர்வை ஊட்டிவிட்டது. வராது வந்த மாமணிபோல் கிடைத்த பொன்குடத்தை இப்படியொரு மனிதர் வந்து உடைத்துவிட்டாரே என்று வைகோ மீது அவர்கள் கொண்ட தனிப்பட்ட வெறுப்பு அதிகமாகிவிட்டது..!

இதன் பின்பு வைகோவை கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைப்பதும், பேச வைப்பதும் பல மாவட்டங்களில் அறவே நின்று போனது. கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமண விழாவில்கூட வைகோவால் பேச முடியவில்லை. இதுதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் வைகோவின் அதிருப்தியைக் கூட்டிக் கொண்டே போனது.

1991 நவம்பர் 26-ம் தேதி நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் வைகோவை முன் வைத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க சதி நடப்பதாக சிலர் பேசி.. அதற்கு வைகோ எழுந்து பதில் சொல்லி.. அப்போதே சர்ச்சைக்குள்ளாக்கியிருந்தது..!

இந்தச் சம்பவத்தின்போது அதாவது 1991-1992 காலக்கட்டங்களில் வைகோ கட்சிக் கூட்டங்களுக்காக 12 மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் நுழைய முடியவில்லை.. தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் அங்கு மாவட்டச் செயலாளரின் அனுமதியில்லாமல் கட்சிக் கூட்டத்தை நடத்த முடியாது. இதனால் அவருக்குப் பிடித்தமான 12 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தத்தமது மாவட்டங்களுக்கு அவரை அழைத்து கூட்டம் நடத்தி வந்தனர்.

இது பற்றி அன்பழகனிடம் சென்று வைகோ புகார் செய்தபோது, “யார் கூட மோதுற..? ஸ்டாலின் அவர் பெத்த புள்ளை.. அவர் எப்ப வேண்ணாலும் தலைவர் மடில உக்காந்துக்கலாம். நீ போய் உக்கார முடியுமா. இதையெல்லாம் பொறுத்துதான் போகணும்.?” என்று அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டாராம்..! இதையும் வெகுநாட்கள் கழித்து வைகோவை ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தார்..!

வைகோ மீதான தி.மு.க. தலைமையின் கசப்புணர்வை நானே ஒரு முறை நேரில் பார்த்தேன்..!

1991, டிசம்பர் 21, 22 தேதிகளில் திராவிட இயக்கத்தின் பவள விழா மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தெப்பக்குளம் பகுதியில் இருந்து மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தி.மு.க.வினர் பேரணியாக தமுக்கம் மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் உற்சாகத்துடன் படையெடுத்து வந்தனர்.

தமுக்கம் மைதானத்தில் நட்ட நடுவில் கையில் கிளவுஸுடன் ஒயிட் அண்ட் ஒயிட்டில் மு.க.ஸ்டாலின் நுழைந்தவுடன் பெரும் கரகோஷம். பேசிக் கொண்டிருந்த பேச்சாளர் தனது உரையை நிறுத்திக் கொண்டு வேடிக்கை பார்க்க.. மு.க.ஸ்டாலின் மேடை நோக்கி வரும்வரையிலும் கலைஞரும், மேடையில் இருந்த தலைவர்களும் அவரை அவ்வளவு பாசத்துடன் பார்த்தபடியே இருந்தார்கள்..!

இன்னும் சிறிது நேரம் கழித்து வைகோ தொண்டர்களுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். இம்முறை அதனைவிட அமோக கைதட்டல்.. உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் எழுந்து நின்று கை தட்டத் துவங்க.. தனது கருப்புத் துண்டை மேலும், கீழுமாக இழுத்துவிட்டபடியே மேடை நோக்கி கர்ம சிரத்தையாக நடந்து வந்தார் வைகோ. இம்முறை கலைஞர், வைகோவை தூரத்தில் ஒரு முறை பார்த்ததோடு சரி.. அதற்குப் பிறகு அவர் பக்கமே திரும்பவில்லை.

வைகோ, மைதானத்தின் வாசலில் இருந்து மேடையேறும்வரையிலும் கூட்டம் தொடர்ந்து கை தட்டியபடியேதான் இருந்தது. நடந்து வந்தபடியே வைகோ மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கையசைக்க மேடையில் இருந்து பதிலுக்கு கையசைத்த ஒரே நபர் நாஞ்சில் மனோகரன் மட்டும்தான்..! கலைஞரின் இந்த பாராமுகத்திற்கு என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை.. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து புரிந்தது..!

வைகோ மேடையேறி கலைஞருக்கு பொன்னாடை போர்த்த அவரருகில் சென்றபோது, அப்போதுதான் அவரைப் பார்த்ததுபோல பாவித்து சட்டென்று சிரித்து, வைகோவின் கரத்தைப் பற்றிக் குலுக்கி... கலைஞரின் பாச நடிப்பை இன்றைக்கு நினைத்துப் பார்த்தால்.. ம்ஹூம்.. அரசியல் உலகில் சிவாஜிகணேசனை மிஞ்சியவர் இவர்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது..!

ஸ்டாலின் அப்போது தி.மு.க. இளைஞரணித் தலைவர். கலைஞரை அவரது வீட்டில் சந்திக்கப் போகும்போது எப்போதும் உடனிருக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு வணக்கம் போட்டு வைத்துப் பழக ஆரம்பித்த தி.மு.க. புள்ளிகளால், அதற்குப் பின் அதிலிருந்து மீள முடியவில்லை. கடைசியில் தலைவரின் பிள்ளையாச்சே என்ற பாசமும்கூட அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்த ஸ்டாலினின் சொல்லுக்கு மாற்றில்லை என்றானது.

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதே என்ற நிலைமைக்கு ஆளானது தி.மு.க. ஒரு பக்கம் தனது ஆர்ப்பரிய பேச்சுத் திறமையால் இளைஞர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் வைகோ.. இன்னொரு பக்கம் தலைவரின் பையன் என்கிற பாசத்தினாலும், இளைஞரணித் தலைவர் என்கிற முகவரியினால் தி.மு.க. தொண்டர்களிடத்தில் பிரபலமாகியிருக்கும் ஸ்டாலின்.. என்று இரண்டு தளபதிகள் இருந்து வந்த நிலையில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்கிற பிரச்சினை வரத்தானே செய்யும்.. வந்தது..!

“வைகோ எனது உறைவாள்.. அதனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்போது அதனைப் பயன்படுத்துவேன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்கள் இதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம்..” என்று இது பற்றிய பத்திரிகை செய்திகளுக்கு பதிலடி கொடுத்தார் கலைஞர்..!

ஆனாலும் வைகோவை அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க.வின் நந்தி பெருமகன்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் வாயிலாக அறிவுறுத்தப்பட்டிருந்ததாக பின்னாளில் வைகோவும், பிற மாவட்டச் செயலாளர்களும் தெரிவித்தார்கள்..!

இதன்படிதான் ஸ்டாலினை முன்னிலைப்படுத்த, வைகோவை அடக்கி வைக்க தி.மு.க. தலைமை அன்றைக்கு முயன்றது.. தலைமையென்ன..? கலைஞர்தான் திட்டமிட்டு முயற்சிகள் செய்திருக்கிறார்..! கல்லில் நார் உரித்தால்கூட கல்லுக்கு வலிக்காமல் உரிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் கலைஞர். அதனால்தான் வைகோவை கொஞ்சம், கொஞ்சமாக கார்னர் செய்து கொண்டே வந்தார்..!

ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்துவோம் என்று காத்திருந்தவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் உளவுத்துறை..!

1993, அக்டோபர் 3-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து கலைஞருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்,

“அன்புள்ள அய்யா..

திரு.வை.கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் தீர்த்துக் கட்ட எல்.டி.டி.யினர் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை உங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உங்களுக்கு வழங்கவும் எனக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”

என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கிடைத்த உடனேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்து அந்தக் கடிதத்தைக் காண்பித்தார் கலைஞர். “தமிழக அரசு அளிக்கும் பாதுகாப்பை ஏற்கப் போகிறீர்களா..?” என்று நிருபர்கள் கேட்டதற்கு “பொதுச் செயலாளர் ஊரில் இல்லை. சென்னை திரும்பியதும், அவருடனும் கழக முன்னணியினருடனும் கலந்து பேசி அரசு தரும் பாதுகாப்புப் பற்றி முடிவெடுப்பேன்..” என்றார் கலைஞர்..! “பாதுகாப்பை ஏற்றுக் கொள்வது என்றால் என்ன காரணத்திற்காக..?” என்று நிருபர்கள் கேட்க.. “அதுதான் காரணத்தை தமிழக அரசு கடிதத்தில் சொல்லியிருக்கிறதே..?” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

இதுதான் ம.தி.மு.க. ஆரம்பித்ததன் அதிகாரப்பூர்வமான துவக்கப் புள்ளி..!

கலைஞரின் இந்தப் பேட்டி அன்றைய மாலை தினசரிகளில் வந்தவுடனேயே வெளியூரில் இருந்த வைகோ உடனடியாக இதற்கு மறுப்பறிக்கையை வெளியிட்டார்.

அதில், “என் வாழ்நாளில் நான் கனவிலும், நினைத்துப் பார்க்க முடியாத பேரிடி என் தலையில் விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன்..” என்று தொடங்கி, மத்திய அரசின் உளவுத் துறையினர் தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கலைஞர் பல முறை கூறியிருப்பதை நினைவு கூர்கிறேன்.. என்னால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கோ, அல்லது கட்சிக்கோ கடுகளவும் கேடு வராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன்..” என்று கூறியிருந்தார்.

மறுநாளில் இருந்து தமிழக அரசியல் பற்றிக் கொண்டது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வைகோவை ஆதரித்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். தி.மு.க. தலைமையோ என்னதான் நடக்கும் பார்ப்போம் என்கிற ரீதியிலேயே கண்டும் காணாததுமாக இருக்க வைகோவுக்காக தீக்குளிப்புகளும் நடந்ததுதான் கொடுமை..!

நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் என்று தி.மு.க. தொண்டர்கள் வரிசையாக தீக்குளித்து இறந்துபோக ஒவ்வொருவரின் தகனத்தின்போது சுடுகாட்டில் படுத்திருக்கும் பேய்களே அழுதுவிடும் அளவுக்கு கண்ணீர்விட்டுக் கதறியழுதார் வைகோ.. பத்திரிகைகளுக்கு பெரும் தீனி கிடைத்தது இந்த நேரத்தில்..!

அப்போதும் வைகோ, கலைஞரை சந்திக்க வரவில்லை. அன்பழகனே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துதான் வைகோவை அழைத்தார். “நாங்க இங்கதான இருக்கோம். அவரும் கட்சிலதான இருக்கார். நேர்ல வந்து பேசட்டுமே..?” என்றார். ஆனால் வைகோ வரவில்லை. கூடவே அவருக்காக 8 மாவட்டச் செயலாளர்களும் களமிறங்கினார்கள்.

தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள் உள்ள ஊர்களிலெல்லாம் கூட்டம் போட்டு நியாயம் கேட்டு முழங்கினார் வைகோ. இதனை அவர் நேராக அறிவாலயம் சென்று கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை..! பொதுக் குழுவைக் கூட்டும்படியும் அதில் தான் நியாயம் கேட்க விரும்புவதாகவும் மேடைக்கு மேடை முழங்கினார் வைகோ..

அந்தச் சமயத்தில் நடந்த ஒரு கூட்டத்தைத்தான் இப்போது ஜூனியர்விகடனில் நேர்முக வர்ணணையாகக் கொடுத்திருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!

03.11.1993

கடந்த 26-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் தி.மு.க-வின் எட்டு மாவட்டச் செயலாளர்களுடன் மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டுப் புறப்பட்டார் வை.கோபால்சாமி!

தி.மு.க. தலைமைக்கு முழு வீச்சாக ஒரு பதிலடி தர, வை.கோ. தேர்ந்தெடுத்த இடம் - குடவாசல்!

வை.கோ-வின் தீவிர ஆதரவாளரான இடிமழை உதயன் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் குடவாசலுக்கு ஒரு தனி முக்கியத்துவம்!

8.9.93 அன்று குடவாசலில் நடத்தவிருந்த பொதுக் கூட்டம், கட்சியில் ஏற்பட்ட திடீர்க் குழப்பத்தால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வை.கோ. பழிவாங்கப்படுவதைக் கண்டித்து, தண்டபாணி, இடிமழை உதயன் ஆகிய தொண்டர்கள் தீக்குளித்தார்கள். அதைத் தொடர்ந்துதான் ரத்தான கூட்டம் முன்னிலும் ஆவேசமாக மீண்டும் நடந்தது!

அஷ்டதிக்குப் பாலகர்களாய் எட்டு மாவட்டச் செயலாளர்கள் க்ரீன் சிக்னல் காட்டவே, குடவாசல் பொதுக்கூட்ட மேடை போராட்டக் களமாகியது!

திருச்சி செல்வராஜ், நெல்லை லட்சுமணன், குமரி ரத்தினராஜ், மதுரை பொன்.முத்து, தென்ஆற்காடு செஞ்சி ராமச்சந்திரன், பெரியார் மாவட்ட கணேசமூர்த்தி, கீழத் தஞ்சை மீனாட்சி சுந்தரம், கோவை கண்ணப்பன் என எட்டு மாவட்டச் செயலாளர்களும்... எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், திருச்சி மலர் மன்னன், புதுவை முன்னாள் அமைச்சர் சிவகுமார் எனப் பிரமுகர்களும் ஏறி நிற்க, மேடை களை கட்டியது!

''கழகத்தின் போர் வாள்... வருங்காலத் தமிழக முதல்வர் வை.கோ.!'' என்று ஆரவாரக் கோஷங்களுக்கு நடுவே, மேடை ஏறினார் வை.கோபால்சாமி.

மதுரை மாவட்டம் சார்பில் பேச வந்த பொன். முத்துராமலிங்கம், மைக் முன்பாக வந்தபோது தொண்டர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு...

''வாலிபப் பட்டாளத்தின் தளபதி வை.கோ., இனி எனது வழிகாட்டி. மதுரையில் இதற்கு முன்னுரை எழுதப்பட்டுவிட்டது. குடவாசலில் இன்னொரு அத்தியாயம். 'சதியை முறியடித்துக் கூட்டம் நடத்தியே தீருவேன்’ என்று முழங்கிய மீனாட்சி சுந்தரத்துக்குத் தலை வணங்குகிறேன். தி.மு.க-வில் வை.கோ. எனும் வானம்பாடியின் சிறகுகள் வெட்டப்பட்டன. அந்த லட்சிய வானம்பாடியைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் சுற்றி வர அனுமதியுங்கள்.

இப்போது தி.மு.க. தலைமை, எரிமலையைச் சந்தித்திருக்கிறது. மகத்தான சக்தியான வை.கோ-வை அழிக்கத் தீட்டப்பட்ட திட்டம், பொடிப் பொடியாக்கப்பட்டு விட்டது. ஊர்ஜிதம் செய்யாத ஒரு செய்தியை, பொதுக் குழுவைக் கூட்டாமல், பொதுச் செயலாளர் ஊரில் இல்லாத சமயத்தில், (இந்த இடத்தில் நிறுத்தி, 'இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று பொன்.முத்து சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை.).

மத்திய அரசு தந்த ஃபோர்ஜரி அறிக்கையைப் பத்திரிகைகளுக்குத் தந்துள்ளார் கலைஞர். எத்தனையோ முறை கலைஞரின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய கோபால்சாமி, இன்று கொலைகாரப் பட்டம் சுமத்தப்பட்டு இருக்கிறார். நேரடிப் பேச்சுவார்த்தை என்பது, புண்ணுக்குப் புனுகு தடவுகிற மாதிரிதான். எங்களுக்குத் தேவை அறுவை சிகிச்சை. அதற்கு, பொதுக் குழுவைத்தான் கூட்ட வேண்டும்.

வை.கோ. தனி மனிதர் அல்ல! அவர் ஒரு இயக்கம். அவர் ஒரு நிறுவனம். அவர் கேட்கிற கோரிக்கையை நிராகரிக்கச் சட்டம் தேவைப்படுகிறது. தி.மு.க-வில் கட்டுப்பாடு மிகுந்த தொண்டர்களாக இருந்தோம். கட்டுப்பாட்டை மீறியது தலைமைக் கழகம்தான். வை.கோ. தலைமையில் இது ஒரு போராட்டம்... கலாசாரப் புரட்சி!'' என்று ஆவேசமாகப் பேசி முடித்தார் பொன்.முத்துராமலிங்கம்.

தொடர்ந்து, கோவை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன், கோவை கொங்குத் தமிழில் பேசப் பேச... கூட்டம் கூடவே சேர்ந்து ஆரவாரம் செய்தது!

''சின்ன வயசில் இருந்து நான் பல பதவிகளை வகிச்சிருக்கேன். இப்போ இருக்கிற மாவட்டச் செயலாளர் பதவி, நான் கோவைக்குப் போய்ச் சேருவதற்குள் இருக்கிறதோ... இல்லையோ...? நாற்பது வருஷத்துக்கும் மேல் பண்ணையாட்களைப்போல, கை கட்டி உழைத்தோம். அதற்குப் பரிசாக, ஏதோ விடுதலைப் புலிகளைப் பார்ப்பதைப்போல எங்களைப் பார்த்தஜர்கள். இரக்கம் இன்றி அநீதி இழைக்கப்படுகிறது!'' - என கண்ணப்பன் பேசும்போதே, மேடையில் விசும்பல் ஒலி. அனைவரது கவனமும் திரும்ப, உணர்ச்சி மேலீட்டில் வை.கோ. தன் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தார்! பதறியபடி மேடையில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த... தொண்டர்கள் மத்தியில் இருந்தும் சமாதானக் குரல்கள்!

கண்ணப்பன் தன் பேச்சைத் தொடர்ந்தார்... ''கோயம்புத்தூரில் மாநாடு நடந்துட்டு இருக்கு, மதியம் - பசி நேரம்... எல்லாரும் சாப்பிடப் போயிட்டாங்க தலைவர் உட்பட! ஆனா, சாப்பாட்டு நேரத்துல வை.கோபால்சாமியைப் பேசச் சொல்லிவிட்டார்கள். மணிக்கணக்காப் பேசினார் வை.கோ.! சாப்பிடப் போன கும்பல்கூடக் கையை உதறிக்கிட்டு வந்து பேச்சைக் கேட்க ஆரம்பிச்சது. பிறகு, கோவை சூரியா ஹோட்டலுக்குக் கலைஞர் வரச் சொன்னதா முரசொலிமாறன் என்னை அழைத்துப் போனார்.

அங்கு ஒரு சோபாவில் எனக்கு இடது புறம் கலைஞர், வலது புறம் மாறன்! 'கோபால்சாமி ரொம்பப் பயங்கரமான காரியத்தைக் கடந்த காலத்துல செஞ்சதால, '91-ல் தி.மு.க. ஆட்சியை, சந்திரசேகர் கலைச்சுட்டார்’னு கலைஞர் சொன்னார். நான் திகைச்சு நின்னுட்டேன். இந்த விஷயத்தை, கோவை மாநாடு முடிந்ததும் வை.கோ-விடம் கேட்டேன். கலைஞர் உத்தரவின் பேரில்தான் இலங்கைக்கு ஒரு தகவலை அனுப்பியதாகச் சொன்னார்.

தமிழ்நாட்டுல வை.கோ-வுக்குத் துண்டு, மாலை போட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி நீக்கம் செய்யப்பட்டார்கள். எனக்குக் கட்சிப் பிரச்னை எதுவானாலும் கவலை இல்லை. நான், வை.கோ. பக்கம் நிற்கிறேன். அவரிடம் நீதி, நேர்மை, நியாயம் இருப்பதால், துணை நிற்கிறேன்!'' என்று தனது உணர்ச்சி உரையை முடித்தார் கண்ணப்பன்.

எல்.கணேசன் மைக் முன்பு வந்து நின்றபோது இரவு மணி, 1.20... ''இதுவரை கலைஞரின் போர்வாள் வை.கோ.! இன்று இரவு முதல் இவர்... தமிழினத்தின் போர்வாள். இது சம்பிரதாயக் கூட்டம் அல்ல... சரித்திரக் கூட்டம். இது அரசியல் திருப்பத்தின் துவக்கம். வீழ்ச்சியடைவதற்கு முன்னால் தோன்றும் பலவீனம், கலைஞருக்கு வந்துவிட்டது. கடந்த தேர்தலில் தி.மு.க. வெட்கக்கேடான தோல்வியைத் தழுவியதற்குத் தலைமைதான் காரணம். வை.கோ. அல்ல!

தமிழினத் தலைவர் கலைஞரைக் கொன்றுவிட்டால், வை.கோ. உயிரோடு நடமாட முடியுமா? சொல்வோர் சொன்னாலும், இதை நம்பத்தான் முடிகிறதா? விடுதலைப் புலி என்ற உணர்வை வை.கோ-வுக்கு ஊட்டிய கலைஞரே இப்படிக் கூறலாமா? கலைஞரே, என்ன சாதுரியம் செய்கிறீர்கள்? என்ன சாமர்த்தியம் பண்ணுகிறீர்கள்? சாதுரியமும் சாமர்த்தியமும் உண்மை இல்லை என்று தெரிந்தால், அது நொறுங்கிப் போய்விடும். 'உடன்பிறப்பே’ என்றபோது ஓடி வந்தோமே... எங்களுக்குக் காட்டும் நன்றி இதுதானா?'' (எல்.கணேசன் பேச்சைத் தொடர முடியாமல் உடைந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டார்! தழுதழுத்தபடி தொடர்ந்து பேசினார்...)

''தலைவரே! நீங்க எட்டடி பாய்ஞ்சா, நாங்க பதினாறு அடி பாய்வோம். இது என்ன அ.தி.மு.க-ன்னு நெனைச்சுட்டீங்களா? விட மாட்டோம்... தி.மு.க. நாற்பது லட்சம் தொண்டர்களின் சொத்து. அதைப் பங்கு போட யாருக்கும் உரிமை இல்லை!'' என, ஏகப்பட்ட கைதட்டல்களை வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்தார் கணேசன்!

திரண்டு இருந்த மனிதக் கடலைப் பார்த்துவிட்டு, ''இங்கு என்ன பேசுவது? எதைப் பேசுவது? இப்படி ஒரு சூழலில் இங்கு நான் பேசுவேன் என்று இதுவரை கனவிலும் நினைத்தது இல்லை...'' என்றபடி, உணர்ச்சிப்பூர்வமாகப் பேச ஆரம்பித்தார் வை.கோ.!

''ஒரு முறை கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கட்டிக்கொண்டு, 'அண்ணா வழியில் எனக்குப் பிறகு கட்சியை உன்னால்தான் வழி நடத்த முடியும்’ என்றார். அவரே இப்போது, நான் போட்டித் தலைவராக முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார். என்னால் கழகம் மாசுபட்டுவிட்டது என்றால், தூக்கி எறிய வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு... கோபால்சாமி வருத்தம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு? கோபால்சாமி, விடுதலைப் புலிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு? சுப்பிரமணியன் சுவாமி என்னை, 'தி.மு.க-வின் புற்று நோய்’ என்று அறிக்கை கொடுத்தபோது, நாஞ்சிலார் மட்டுமே மறுப்புக் கொடுத்தார்.''

இந்த சப்ஜெக்ட்டைப்பற்றி பேசும்போதே, கண்கள் கலங்க ஆரம்பித்தன வை.கோ-வுக்கு!

''அரசியலில் உணர்ச்சிவசப்படுதல் நல்லது அல்ல... கண்ணீர் விடுவதும் கோழைத்தனம்...'' என்று ஆரம்பத்தில் பேசியவர், மேடையில் அழுவதைப் பார்த்ததும் கூட்டத்தினர் நிஜமாகவே பரபரப்பாகிவிட்டார்கள்! ''நான் அழுவதால் கோழை அல்ல...'' என்று மறுபடியும் பேச்சின் வேகத்தை முடுக்கிக்கொண்டார் வை.கோ. ''என்னைக் கொலைகாரன் என்று அறிக்கை தந்த பிறகுதான், உண்மை புரிந்தது. மாறனும், ஸ்டாலினும், அழகிரியும்தான் எனக்கு எதிராக சதி செய்ததாக இந்த நிமிடம்வரை தவறாக நினைத்துக்கொண்டு இருந்தேன். இப்போது புரிகிறது... அவர்கள் பாவம்!

கொலைகாரன் என்று சொன்னால்தான் கோபாலசாமியை அழிக்க முடியும் என்ற ஆழமான சிந்தனை, கருணாநிதியைத் தவிர யாருக்குமே வராது. ஆற்றல் நிறைந்த எனது தலைவரின் உள்ளத்தில்தான் வருகிறது. இதை நீங்கள் செய்யலாமா தலைவரே...?!'' என்று வை.கோ. பேசப் பேச, கூட்டத்தினரின் உணர்ச்சி வேகமும் எகிறிக்கொண்டு இருந்தது!

''தலைவர் அவர்களே! உங்களிடம் வித்தை கற்றவன் நான். சிஷ்யனை அழிக்க நினைக்கிறபோது... அந்த வித்தை பலிக்காது. என்னை அழிக்க முயல்வதால்தான், பேச்சு, எழுத்து எல்லாம், உங்களுக்கு வர மாட்டேன் என்கிறது. தமிழ் மகள் வர மறுக்கிறாள். பதினான்கு வயது முதல் உங்கள் எழுத்தில் இடறல் ஏற்பட்டது கிடையாது. உங்கள் விசுவாசமான தம்பியை ஒழிக்கத் திட்டமிட்டவுடன், உங்கள் எழுத்தும் உங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. பேச்சும் துணை நிற்கவில்லை. அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைக்கும் உங்கள் ஆற்றல், இப்போது எங்கே?

என்னைக் கொலைகாரன் என்று சொன்னபோது, கலைஞருடைய அடிப்படைத் தொண்டன் என்கிற தகுதியையும் நான் இழந்துவிட்டேன். இனிமேல் பேசிப் புண்ணியம் இல்லை!'' என வை.கோ. சொன்னது... 'அடுத்து, செயலில் இறங்குவேன்!’ என்ற அர்த்தத்தில்தான் என்று தொண்டர்களுக்குப் புரிந்தது!

கடைசி நேரச் செய்தி :

நவம்பர் 1-ம் தேதி கலைஞர் சுற்றுப் பயணம் முடித்து, சென்னைக்குத் திரும்புகிறார். 'வை.கோ-வை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை எடுக்கலாம். அந்தத் தீர்மானத்தை முன்மொழியப் போவது வீரபாண்டியாராக இருக்கும்’ என்பது வை.கோ. வட்டாரத் தகவல்!

நன்றி – ஜூனியர்விகடன்-16-05-2011

இனி நான்..!

இதே போன்றதொரு கூட்டம் மதுரையில் மேலமாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு நானும் சென்றிருந்தேன்..!

வழக்கமாக கலைஞருக்கு மட்டுமே அப்படியொரு கூட்டம் கூடியிருக்கும். அதனை நேரில் பார்த்தபோது தி.மு.க. உடையத்தான் போகிறது என்று பத்திரிகைகள் எழுதின.

அந்தக் கூட்டத்தில்தான் போடி முத்துமனோகரன், “அரண்மனை நாயே.. அடக்கிப் பேசு..” என்று பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை மனதில் வைத்து பேச.. மதுரையே குலுங்கியது போன்ற கை தட்டல்கள் ஒலித்தது. அப்போது மதுரையில் பொன்.முத்துவுக்கும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுக்கும் இடையில் கடும் பனிப்போர்.

இந்தக் கூட்டம் நடந்தபோது மேடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த காண்டஸா கிளாஸிக் காரில் அமர்ந்திருந்தார் வீரபாண்டி ஆறமுகம். பொன்.முத்துவும், மற்றவர்களும் வீரபாண்டியாரை கையைப் பிடித்திழுத்தும் மேடைக்கு வர மறுத்துவிட்டு, கடைசிவரையில் காரிலேயே அமர்ந்திருந்தார் வீரபாண்டியார்.

இந்த நிகழ்வுவரையிலும் வீரபாண்டி ஆறுமுகம் வைகோ கூட்டணியில்தான் இருந்தார். சமாதானம் பேசுவதற்காக கோபாலபுரம் சென்ற வீரபாண்டியாரை உட்கார வைத்து பழம்கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி தானும் அழுது, அவரையும் அழுக வைத்து அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கலைஞர்..!

இந்தக் காலக்கட்டத்தில் ஆள், ஆளாளுக்கு கட்சிப் பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கினார்கள். பொதுக்குழுவில் பலத்தைக் காட்ட வேண்டி இந்த இழுபறி என்றாலும், கட்சியை உடைத்து தி.மு.க.வை கைப்பற்றுவது என்பதுதான் ‘வைகோ அண்ட் கோ’வின் நோக்கமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சமரசம் பேச அனுப்பி வைக்கப்பட்ட பொன்.முத்துராமலிங்கத்தை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் சந்தித்துப் பேசிய ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும் "வைகோவை ஒரு தடவை நேர்ல வந்து தலைவர்கிட்ட பேசச் சொல்லுங்க.. எல்லாம் சரியாயிரும்.." என்றார்களாம்.. பின்பு வீரபாண்டியாரும் பொன்.முத்துவிடம் வந்து கேட்டுக் கொண்டும் பொன்.முத்து மசியவில்லை. "பொதுக்குழுவைக் கூட்டுங்கள். வைகோவுடன் தொடர்பு என்ற ரீதியில் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களை திரும்பவும் கட்சியில் சேருங்கள். அதன் பின்புதான் அனைத்துமே.." என்று கூறினாராம்..

இதைவிடக் கொடுமை.. பொன்.முத்துவின் மகன் திருமணம் காரைக்குடியில் அந்தச் சமயத்தில்தான் நடந்தது..! பொதுவாக கலைஞரிடம் தேதி கேட்டு அவரின் ஒப்புதல் பெற்றுதான் பத்திரிகையே அச்சடிப்பார்கள். ஆனால் பொன்.முத்துவோ பத்திரிகையை அச்சடித்துவிட்டு அதன் பின்பு கலைஞரிடம் வந்து பத்திரிகையை கொடுத்து கல்யாணத்துக்கு வாங்க என்றழைக்க தனக்குக் கிடைத்த இந்த திடீர் மரியாதையை வழக்கம்போல அன்பழகனிடம் இப்படி பகிர்ந்து கொண்டாராம்.. "பாருங்க.. நான் வரக் கூடாதுன்னே இப்படி செய்யறாரு.." என்று..!

வைகோவை அந்த நேரத்தில் கலைஞர் சார்பாக சந்தித்துப் பேசியவர்களில் கவிக்கோ அப்துல்ரகுமானும் ஒருவர். ஆனாலும் வைகோ கலைஞரை சந்திக்க மறுத்துவிட்டாராம்..! வைகோ தி.மு.க.வில் விரும்பி அழைத்த ஒரு நபர் நடிகர் சந்திரசேகர்..! "மருது நாட்டு வேங்கையே.. நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்.. வந்துவிடு.." என்று தொலைபேசியில் அழைத்ததற்கு சந்திரசேகர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்..!

இந்த நேரத்தில் வைகோவுக்கு கிடைத்த மிகப் பெரும் பலம் ‘தினகரன்’ பத்திரிகை. அதன் உரிமையாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.கந்தசாமி பகிரங்கமாக வைகோவுக்கு ஆதரவளித்து தனது பத்திரிகை மூலமாக வைகோவை இந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். அளவுக்கு பிரபலமாக்கினார் என்பது உண்மை. பாவம்.. இவரது மரணம்கூட வைகோவுக்கு பெரும் இழப்புதான்..!

ரொம்ப நாளாக கண்ணா மூச்சி ஆடிய இரு தரப்பினரும் தத்தமது அணிகளின் சார்பில் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். வைகோ தரப்பு பொதுக்குழு கோவையில் நடந்ததாக நினைவு. அதேபோல் தி.மு.க. தலைமையின் பொதுக்குழுக் கூட்டம் 29-12-1993 அன்று தஞ்சையில் நடந்தது..!

இருவருமே தாங்கள்தான் உண்மையான தி.மு.க. என்று தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தார்கள். அப்போது தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனில் வாதிட்டவர் யார் தெரியுமா? இன்றைய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான கபில்சிபல்தான்..! இறுதியில் கலைஞர் தலைமையிலான தி.மு.க.தான் உண்மையான தி.மு.க. என்று தேர்தல் கமிஷன் 03-05-1994 அன்று அறிவித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் வைகோ பிரிவினர் தனிக் கட்சியைத் துவக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6-ம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் ம.தி.மு.க. என்ற கட்சி துவக்கப்பட்டு, அதன் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் உதிர்த்த ‘அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி’ என்ற முழக்கங்கள் பெருவாரியான தமிழகத்து இளைஞர்களை ஈர்த்தது..!

“இனி தி.மு.க. மீது எனது கவனமில்லை. தமிழகத்தின் ஹிட்லர், பெண் இடி அமீன் ஜெயலலிதாவின் இந்தக் கேடு கெட்ட ஆட்சியைத் தூக்கியெறிந்து நல்லாட்சி தர வேண்டுமென்பதே எனது லட்சியம்..” என்று சூளுரைத்த வைகோ, அதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரையிலும் 51 நாள்கள் நடைப் பயணப் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளில் சென்னை கடற்கரையில் விடிந்தும், விடியாத அந்தப் பொழுதுவரையிலும் பேசிய வைகோவின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தது கொள்ளை அழகாக இருந்தது...!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது ம.தி.மு.க. நியாயமாகப் பார்த்தால் ம.தி.மு.க.வுக்கு நல்லதொரு துவக்கமாக இருந்திருக்க வேண்டிய அந்தத் தேர்தல் சூப்பர் ஸ்டார் ரஜினியால் கெட்டது..!

ஏற்கெனவே தன்னை நட்ட நடு இரவில் நடுத்தெருவில் நடக்க வைத்த கடுப்பிலும், தமிழகத்தின் அப்போதைய நிலைமையை பார்க்கச் சகிக்காமலும் இருந்த ரஜினி, “இனியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது..” என்று அறிக்கைவிட்டு ஒரே நாளில் ஹீரோவாகியிருந்தார்..!

இந்தச் சூழலில் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே ரஜினியை சந்தித்த வைகோ, “நீங்க அரசியலுக்கு வர்றதா இருந்தா ஒரு கட்சியை ஆரம்பிச்சு நேரா வந்திருங்க. அதுக்குப் பதிலா வேற யாருக்கும் உங்க பேரை பயன்படுத்துற உரிமையைக் கொடுத்திராதீங்க.. இதனால எனக்கு பாதிப்பு வரும்..” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்..!

அப்போதைக்கு வைகோவிடம் தான் வெளிநாடு செல்வதாகவும், தேர்தல் முடிந்த பின்புதான் வருவேன் என்றும் சொன்ன ரஜினி, 'துக்ளக்' சோ-வின் தூண்டுதலில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விரைந்தோடிவந்து சென்னை விமான நிலையத்தில் அம்பாசிடர் காரில் ஸ்டைலாக ஏறி நின்றிருந்த நிலையில் கட்டை விரலை உயர்த்திக் காட்டிய அந்தத் தருணம்தான், ம.தி.மு.க.வின் தோல்விக்கு அச்சாரமான நிகழ்வு..!

என்னைப் போன்றவர்களுக்கு இப்போதுவரையிலும் இது குறித்து வருத்தம்தான். ஆனாலும் என்ன செய்வது..? விதி இப்படித்தான் முடிந்திருக்கிறது..!