மலையாள சினிமாவும், மதம்பிடித்த ரசிகர்களும்!"
மலையாள சினிமாவும், மதம்பிடித்த ரசிகர்களும்!"3 அரவிந்த்ராஜ் ரமேஷ் `உங்களைப் பொறுத்தவரை, மலையாள சினிமாவில் வரும் எல்லாப் படமும் கலைப் படம்தான். மலையாள சினிமாவைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், மனித வெடிகுண்டாய் மாறுவதற்குக்கூட தயங்கக் கூடாது.’ என்னதான் உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவை சமூக வலைதள சந்துகளில் செமத்தியாக சேல்ஸ் ஆனாலும், மலையாள சினிமாவுக்கு இருக்கின்ற மவுசு என்றும் குறைந்ததே இல்லா, குறையப்போவதும் இல்லா! ஆக, மவுசு கூடிக்கொண்டேபோகும் மலையாள சினிமாவில் நாமும் கொடிக்கட்டிப் பறக்க, நாம் மலையாள சினிமா கன்னியாக மாற வேண்டும். எப்படி மாறுவது, இதோ இப்படித்தான்! எலைட் பேக்கேஜ் : அதிகம் மெனக்கெட வேண்டாத பேக்கேஜ் இது. பஹத், துல்கர், நிவின்பாலி ஆகியோரின் புதுப்படங்கள் சம்பந்தமான அலர்ட்ஸ் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்தல் வேண்டும். அவர்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர், ஃபேன்மேட், பழம்பொறி, புட்டு - கடலை... என எல்லாவற்றையும் கம்ப்யூட்டரே கடுப்பாகும் அளவுக்கு ஷேர் செய்ய வேண்டும். முக்கியமாக, `சேட்டன்ஸ் ராக்ஸ்', `அடிபொலி' எனக் கேப்ஷனில் கதக்களி ஆட வேண்டும். பஹத் படமாக இருந...