எங்கள் தங்கமணி தியேட்டர்
1960 கள் முதல் சிவகாசி மக்களை குதூகலிக்கச் செய்த இந்த அழகான ரம்மியமான திரையரங்கு இப்போது இல்லை. காலத்தால் அழிக்க முடியாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், படங்களை திரையிட்டு சிவகாசி மக்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவுகளாய், சிவகாசி நகர மக்களின் அடையாளமாக திகழ்ந்த அந்த சந்திரனும் தங்கிப் போகும் எங்கள் தங்கமணி தியேட்டர் தற்போது மண்ணோடு மண்ணாக, தரைமட்டமாக தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. ஐந்து தலைமுறைகள் கண்ட இந்த தியேட்டரை இனி புகைப்படங்களில்தான் காண முடியும்.
காலம் மிக கொடூரமானது. இரக்கமில்லாதது. இதுவும் கடந்து போகட்டும். ஒலிம்பிக் தியேட்டர் இடிக்கப்பட்ட போது கூட இத்தனை வேதனைகளில்லை. சிவகாசி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற இந்த தியேட்டர் இடிக்கப்படும் போது நெஞ்சம் ரணமாக வலிக்கிளது. நல்லவேளை தியேட்டரை நிர்வகித்த
A.S.கிரகம் இப்போது உயிரோடு இல்லை. இந்த கொடுமையான காட்சியை காணாமல் போய் சேர்ந்து விட்டார்.
Sam Yuktha
No comments:
Post a Comment