TIPPU SULTAN AND HIS TERRORISM
.1784இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் மலபார் பிரதேசத்தில் சுய உரிமையோடு ஆண்டு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் மலபார் பகுதி இந்துக்கள் வரலாறு காணாத துன்பங்களையும் அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததாக திரு கே.வி.கிருஷ்ண ஐயர் என்பார் தனது கள்ளிக்கோட்டை பற்றிய புத்தகத்தில் எழுதுகிறார்.
எல்.பி.பெளரி என்பவர் எழுதுவதாவது:- இஸ்லாம் மீது தனக்குள்ள பற்றை நிரூபிக்கும் விதத்தில் கோழிக்கோடு பகுதியில் தன் கவனத்தைத் திருப்பினான் திப்பு. மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான். மலபார் மக்கள் பெண்கள் வீட்டினுள் அடைபட்டிருப்பதற்கும், பல தாரங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், சுன்னத் செய்து கொள்வதற்கும் மறுப்பு காட்டினர். கண்ணனூர் அரக்கல் பிபி குடும்பத்தில் திருமணத்துக்கும் திப்பு ஏற்பாடு செய்தார்.
அந்த காலத்தில் கோழிக்கோடு நிரம்ப பிராமண குடும்பங்களைக் கொண்டிருந்தது. 7000 பிராமண குடும்பங்கள் அங்கு வசித்து வந்தன. அப்படிப்பட்ட இடத்தில் திப்புவின் அடாவடி காரணமாக 2000க்கும் அதிகமான பிராமண குடும்பங்கள் அழிந்து போயின. தன்னுடைய கொடுமைக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான ஆண்கள் காட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் ஓடிவிட்டனர்.
1955 டிசம்பர் 25 “மாத்ருபூமி” இதழில் எலங்குளம் குஞ்சன் பிள்ளை என்பார் எழுதுகிறார்:- “முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் சுன்னத் செய்விக்கப்பட்டு விட்டனர். திப்பு செய்த கொடுமைகளினால் ஏராளமான நாயர்களும், சாமர்களும் (இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.”
திப்பு சுல்தான் படையெடுப்பின் காரணமாக தளி, திருவண்ணூர், வரக்கல், புத்தூர், கோவிந்தபுரம், தளிக்குன்னு முதலான கோழிக்கோட்டிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் திப்புவின் தோல்வியை அடுத்து 1792 உடன்படிக்கையின்படி பல ஆலயங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.
கேரளதீஸ்வரம், திரிக்கண்டியூர், வேட்டூர் ஆகிய இடங்களில் புராதன கோயில்களுக்கு உண்டான சேதங்கள் கணக்கிலடமுடியாதவை. வேதங்களைக் கற்பித்து வர பயன்பட்ட திருநவயா கோயில் அழிக்கப்பட்டது. பொன்னானியில் திருக்காவு கோயிலில் விக்கிரங்களை என்லாம் தூக்கி எறிந்து உடைத்துவிட்டு அந்த இடத்தை தன்னுடைய ராணுவத்தினரின் ஆயுதங்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்தினான்.
எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூர் கோயிலில் திப்புவின் அழிவுச் சின்னங்கள் இன்று பார்க்கமுடியாததற்குக் காரணம் ஹைடுரோஸ் குட்டி என்பவர்தான் காரணம். இவர் ஹைதர் அலியினால் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர். குருவாயூர் கோயிலுக்கு நிலவரியை ரத்து செய்யவும், கோயிலுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கவும் இவர் ஹைதர் அலியிடம் அனுமதி வாங்கி வைத்திருந்தார். திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளையும் பின்னர் இவர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைக்கவில்லை.
குருவாயூர் கோயிலை நோக்கி திப்பு வருவதறிந்து அங்கிருந்த புனிதமான ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் அங்கிருந்து மீண்டும் குருவாயூருக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் இன்றும்கூட அன்று குருவாயூரப்பனை வைத்து வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment