BOBBY SIMHA ,MALAYALAM ACTOR BORN 1983 NOVEMBER 6

 


BOBBY SIMHA ,MALAYALAM ACTOR 

BORN 1983 NOVEMBER 6




.பாபி சிம்ஹா என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா, நேரம் படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில்  நடைபெற்றது. 


ஜிகர்தண்டா, உறுமீன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. இவருக்கும் இனிது இனிது என்ற படத்தில் அறிமுகமாகி உறுமீன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மி மேனனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள கோவிந்த நிலையம் மடத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. இதில் இருவரின் நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். 



திருமணத்திற்குப்பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மணமக்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னையில் நாளை நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU