Posts

Showing posts with the label JULIAN

JULIAN CALENDAR INTRODUCED BY JULIUS CAESAR , JANUARY 1, 45 B.C

Image
JULIAN CALENDAR  INTRODUCED  BY JULIUS CAESAR , JANUARY 1, 45 B.C கிமு 45 – ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட...

WIKI LEAKS - JULIAN PAUL ASSANGE

Image
WIKI LEAKS - JULIAN PAUL ASSANGE ஜூலியன் பவுல் அசாஞ்சு (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும்[4], வெளியீட்டாளரும்[5] ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார். அசாஞ்சு 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார். அசாஞ்சு பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்...