Posts

Showing posts with the label 17

SEETHAKKATHI , PHILANTHRAPIST OF 17 TH CENTURY

Image
SEETHAKKATHI , PHILANTHRAPIST OF 17 TH CENTURY செத்தும் கொடுத்தார் சீதக்காதி!! பண்டைத் தமிழ் நாட்டில், புகழ்மிக்க அரசர்கள், மக்களை ஆண்டதோடு, தமிழ் மொழியை ஆண்டவர்களையும் பாராட்டி, பரிசில்கள் வழங்கி, ஆதரித்தார்கள். அரசர்கள் மட்டுமன்றி, வசதியுள்ள தமிழ் ஆர்வலர்கள், செலவந்தர்களும் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தனர். இராமநாதபுரம் விஜய இரகுநாத சேதுபதி மன்னரின் அரசவையில், கௌரவ அமைச்சராக, மன்னரின் மரியாதைக்குரிய நண்பராகத் திகழ்ந்த, சீதக்காதி வள்ளல் என்று அழைக்கப்படும், கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர், தமிழ் மொழியில் பற்று கொண்டு, தமிழ்க் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார்.  பிறவி செல்வந்தரான சீதக்காதி வள்ளல், தன்னுடைய முன்னோர்கள் வழியில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டு, பெரும் பொருள் ஈட்டியவர். கிழக்கிந்திய ஆங்கிலேயக் கம்பெனியார், வாணிகம் செய்ய, நம் தேசத்தில் அடியெடுத்து வைத்த நேரம் அது. அப்போது அவர்களுக்குப் பெருமளவில் மிளகு ஏற்றுமதி வணிகம் செய்தவர், சீதக்காதி அவர்கள்.   கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர்: பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இராமநாதபுரம் அர...