ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND
ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND சென்னையில் வசித்தார் அவர். அவருக்கு இடையன்குடியில் வேலை கிடைத்தது. இடையன்குடி என்பது, திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ஓர் ஊர். அதாவது, தமிழகத்தின் கீழ்ப்பகுதி. சென்னையோ தமிழகத்தின் மேற்பகுதியில் இருக்கிறது. இன்றைய வரைபடத்தின்படி, சென்னையிலிருந்து இடையன்குடி சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் என்ன? பேருந்தோ, புகைவண்டியோ, மகிழுந்தோ ஏறினால் ஒரே இரவில் சென்றுவிடலாமல்லவா? உண்மைதான். ஆனால், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மாற்றலான நம் நண்பர் 1841ல் வாழ்கிறார். அதாவது, இன்றிலிருந்து சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால்! அப்போதெல்லாம் சென்னைக்கும் இடையன்குடிக்கும் நேரடிப் போக்குவரத்து வசதியெல்லாம் கிடையாது. ஊர்ஊராக மாறித்தான் செல்லவேண்டும். அந்த நண்பர் அலுத்துக் கொள்ள வில்லை, 'தமிழகத்தை நன்றாகப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு' என்று மகிழ்ந்தார். 'நான் நடந்தே இடையன்குடிக்குச் செல்கிறேன்' என்று புறப்பட்டுவிட்டார். இதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை, அங்கே வாழும் மக்களை நன்கு கவனித்துப் புரிந்துகொள்ள வ...