COW BOY MOVIE : IRUMBUKOTTAI MURATTU SINGAM
COW BOY MOVIE : IRUMBUKOTTAI MURATTU SINGAM முழுமையான கெளபாய் படம் `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். .தமிழில் வெளியான இரண்டாவது முழுமையான கெளபாய் படம் `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.' இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பத்மபிரியா, லட்சுமி ராய், மனோரமா, நாசர் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' நினைவுகள் குறித்து இயக்குநர் சிம்புதேவனிடம் பேசினேன். "சின்ன வயசுல இருந்தே Cowboy படங்கள் மேல ஆர்வம் அதிகம். தமிழ்ல கர்ணன் சார் எடுத்திருந்த ஜெய்சங்கர் சாரோட `கங்கா' படம் பார்த்திருக்கேன். இருந்தாலும், காலேஜ் படிக்குறப்ப செர்ஜியோ எடுத்திருந்த `The Good the Bad and the Ugly' படம் பார்த்தப் பிறகு ரொம்பவே ஆர்வம் தொத்திக்கிச்சு. கெளபாய் டைப் படங்கள் எடுக்குறதுல இவர் திறமைசாலியும்கூட. ஒருமுறை பாலுமகேந்திரா சார்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்ப செர்ஜியோ லியோனி என்னோட குரு மாதிரினு ரொம்ப பெருமையா சொன்னார். எனக்கு சந்தோஷமா இருந்தது. நான் காமிக்ஸ் புத்தகம் நிறைய படிப்பேன...