Posts

Showing posts with the label - PRIMARY

WINE SHOP, BARS - PRIMARY INCOME OF THE TAMILNADU STATE

Image
WINE SHOP,BARS - PRIMARY INCOME  OF THE TAMILNADU STATE 'மது நாட்டை சீரழித்து விட்டது; 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுங்கள், மதுவிலக்கை அமல்படுத்துங்கள்' - இந்த குரல், தமிழகத்தின் எல்லா மூலை முடுக்கிலிருந்தும் ஒலிக்கத் துவங்கி விட்டது. உண்மை தான்; இன்று, பள்ளி மாணவர் முதல், பழுத்த கிழம் வரை, அனைத்து பருவத்தினரையும் ஆட்கொண்டு விட்டது மது. குடிப்போரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு குடிப்போரின் வயது வரம்பு குறைந்து கொண்டே போகிறது. சமீபத்தில், சிறுவனை, உறவினர் ஒருவரே மது அருந்தச் செய்து, ரசித்து மகிழ்ந்தது; பள்ளி மாணவி, போதை தலைக்கேறிய நிலையில், நடு ரோட்டில் ஆரவாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது போன்ற நெஞ்சைப் பதற வைத்த சம்பவங்கள், சமூக சீர்கேட்டின் உச்சகட்டம்.மாணவியை கண்காணிக்கத் தவறி விட்டதாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், மகளை கண்டித்து வளர்க்கத் தவறி விட்டதாக பெற்றோர் மீதும், குற்றச்சாட்டுகளை வாரி இறைப்பதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பேற்று, வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது. தம...