KANNADA PARROT SAROJADEVI BIOGRAPHY
கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி “கன்னடத்துப் பைங்கிளி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி 1938 –ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் நாள் பெங்களூரில் பிறந்தவர். இவரது தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தவர். நான்காவது மகளாக பிறந்த இவருக்கு சிறு வயதிலே இசை ஆர்வம் பிறந்தது. புனித தெரசா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, இசைப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே' என்ற இந்தி பாடலை பாடினார் இவர். அந்த நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜா தேவியின் குரல் வளம் நன்றாக இருந்ததை கண்ட அவர், தனது சினிமா படத்தில் சரோஜாதேவியை பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மாவை அணுகினார். பாடல் பதிவுக்கான ஒத்திகையின் போது இவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே உடனே மேக்கப் டெச்ட் எடுத்துப் பார்த்தார். சரோஜாதேவியின் தோற்றம் ஹொன்னப்ப பாகவதருக்கும் படக் குழுவிருக்கும் பிடித்துவிடவே சரோஜாதேவியை தனது 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் கத...