JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25
JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25 ; ‘இவன் ஒன்னுக்கு போவான், ரெண்டுக்கு போவான்..... மூனுக்கு போகமாட்டான். இவன் நம்ப ஆளு’. நடிகவேள் எம்.ஆர். ராதா .1961ல் அமெரிக்கா அதிபரான ஜான் கென்னடி ‘இந்த பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பி உயிரோடு திரும்ப அழைத்து வந்துவிட வேண்டும்.. அமெரிக்கா சாதித்து காட்டும்’ என்று சூளுரைத்தார். இது ஓர் அரசியல் வாசகம் என்பதில் சந்தேகமே கிடையாது. பன்றிகள் வளைகுடாவை ‘கம்யூனிச’ கியூபாவிடம் (செமத்தியாக உதை வாங்கி) அமெரிக்கா தோற்ற தருணம் அது. சோவியத் யூனியன் தனது யூரிகாகரீன் பயணத்தின் மூலம் விண்ணில் மனிதனை முதலில் அனுப்பிய நாடாகி பிறகு ஒரே ஆண்டில் வாலண்டினா டெரஷ்கோவாவை விண்ணில் அனுப்பி முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணிற்கு அனுப்பிய நாடாகவும் ஆகி விண்வெளியியலில் தனது ஆளுமையை ஆழமாக பதித்திருந்தது. 1961 மே 25 அன்று அதிபர் கென்னடியின் அறிவிப்பு நிகழ்ந்த சூழல் இதுதான்.அந்தக்கூட்டத்தில் அவரது உரையை கேட்டு.. ‘மை காட்..இஸ் ஹீ க்ரேஸி?’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்...